why leaf is green color
வணக்கம் சிறுவயது முதல் தற்போது வரை நம்மில் இருக்க கூடிய பெரும்பாலனோருக்கு இருக்ககூடிய சந்தேகம் என்னவென்றால் இந்த உலகில் இருக்கும் அனைத்து மரம் மற்றும் செடிகளும் ஏன் பச்சை நிறத்தில் உள்ளது என்பதுதான் இதை பற்றிதான் இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
ஏன் இலைகள் பச்சை நிறத்தில் உள்ளன
இந்த இலைகள் பச்சை நிறத்தில் இருக்க முக்கிய காரணம் இந்த குளோரோஃபில் எனலாம் இதற்கு முன்னால் மரம் மற்றும் செடிகளின் பொதுவான பாகங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம் .
முதலில் அனைத்து மரம் மற்றும் செடிகளில் காணப்படும் வேர்கள் எனலாம் இவைதான் செடிகளுக்கு தேவையான சத்துகளை பூமியில் இருந்து வழங்குகிறது.
அடுத்தபடியாக தண்டுகள் இவைதான் பூமியில் இருந்து பெரும் சத்துகளை மற்ற பாகங்களுக்கு எடுத்து செல்கிறது.
மூன்றாவதாக இலைகள் இவை சூரியனிடமிருந்து செடிக்கு தேவையான ஒளியை பெற்றுதருகிறது.
இறுதியாக பூக்கள் இவை மகரந்த சேர்க்கை மூலமாக இனத்தை பெருக்குகிறது
இப்படி இவை நான்கும் சேர்ந்து அவைகளுக்கு தேவையான உணவை அவைகளே தயாரித்துகொள்ளும். இதனைதான் ஃபோ்டோ சின்தெசிஸ்(PHOTOSYNTHESIS) என்கிறோம் இப்படி இவை உணவை தயாரிக்கும்போது அவற்றிலிருந்து வெளியேறும் கழிவிகள்தான் ஆக்ஸிஜன் ஆகும். அதனைதான் நாம் சுவாசிக்கிறோம்.
நிறங்கள்
இப்போது உங்களுக்கு செடிகள் மற்றும் மரங்கள் பற்றிய ஒரு புரிதல் வந்திருக்குமென நம்புகிறேன் இதன் பிறகு நீங்கள் நிறங்கள் மற்றும் வண்ணப்பிரிகை பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.
நிறங்கள் உருவாக முக்கிய காரணம் சூரிய ஒளி எனலாம் இந்த ஒளியில் இருந்து வரும் நிறங்கள் 3 வகைகளாக இருக்கும் அவை சிகப்பு ,பச்சை மற்றும் நீலமாகும். இவைதான் மழைகாலங்களில் நமக்கு வானவில்லாக கூட தெரியும். இப்படிதான் நிறங்கள் உருவாகின்றன.
தொடர்புடையவை: வானவில் ஏன் தோன்றுகிறது
இந்த உலகில் இருக்கூடிய ஒவ்வொரு பொருளும் சூரிய ஒளி பெற்று அதற்கேற்றவாறு ஒரு நிறத்தை பிரதிபலிக்கும் இதனைதான் அந்த பொருளின் நிறம் என நாம் கூறுகிறோம்.
இப்போது கேள்விக்கு வராலம் ஏன் இலைகள் பச்சைகள் நிறத்தில் உள்ளன இதற்கான முக்கிய காரணம் அந்த இலைகளில் இருக்கூடிய குளோரோஃபில் ஆகும். இந்த குளோரோபில் இயற்கையாகவே பச்சை நிறத்தை தன்னுள் கொண்டிருக்கும் இவை மரம் மற்றும் செடிகளுக்கு தேவையான உணவை சூரிய ஒளியிலிருந்து பெற்று தரும். இப்படி சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஒளியில் சிகப்பு மற்றும் நீல நிற ஒளியை முழுவதுமாக உட்கொள்ளும் ஆனால் பச்சை நிறத்தை அது பிரதிபலிக்க செய்யும். இதால்தான் இலைகள் பச்சைகள் நிறத்தில் உள்ளன.
ஒருவேளை இந்த குளோரோஃபில் பச்சை நிறமாக இல்லாமல் இருந்தால் இலைகள் வேறொரு நிறத்தில் தோன்றியிருக்கும். இதன்காரணமாகவே ஒரு மரம் பட்டுபோன பிறகு இலைகளும் அதன் நிறத்தை இழந்துவிடும்.
கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்குமென நம்புகிறேன் நன்றி!