ஏன் நமக்கு கொட்டாவி வருகிறது?
நாம் இருக்கூடிய உலகில் பலகோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படி உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உள்ள ஒரு பொதுவான ஒரு பண்பு என்னவென்றால் இந்த கொட்டாவி என கூறலாம். நாம் அனைவருமே தினசரி வாழ்வில் ஒவ்வொரு நாளும் கொட்டாவி விடுகிறோம். இந்த கொட்டாவி ஏன்(why do we yawn) ஏற்படுகிறது எதற்காக ஏற்படுகிறது என்று அறிவியலாளர்களால் கூட இன்றுவரை தெளிவான தகவலை கூறமுடியவில்லை.
நமக்கு சோர்வாக இருக்கும்போது அல்லது தூக்கம்வரும்போது அல்லது நாம் வேலை செய்யாமல் சோம்பலாக உணரும்போது கொட்டாவி விடுகிறோம். இந்த கொட்டாவி என்பது வெறும் மூச்சு காற்று எனலாம் ஆம் அதிக அளவு மூச்சினை நாம் உள்ளே இழுத்து வெளியே விடும்போது கொட்டாவியாக வருகிறது.
சிலசமயங்களில் நாம் சிலரை பார்க்கும்போது அவர்கள் கொட்டாவி விட்டால் நமக்கும் கொட்டாவி வரும் இதற்கு காரணம் நாம் அவர்களை பார்ப்பதால் நமது மூளையில் ஒரு தூண்டுதல் ஏற்படும் இது நமக்கும் கொட்டாவியை ஏற்படுத்தும் இந்த காரணத்தினால்தான் மற்றவர்கள் கொட்டாவி விடும்போது நமக்கும் கொட்டாவி வருகிறது .
சில சமயங்களில் கொட்டாவி அதிகம் வந்தால் அதாவது ஒரு நிமிசத்திற்கு ஒருமுறைக்கு மேல் கொட்டாவி வந்தால் அது தூக்க பிரச்சனை மற்றும் இதய பிரச்சனையாக கூட இருக்ககூடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மற்ற படி கொட்டாவிகள்(yawn) வருவது இயல்பே .கொட்டாவிகள் மற்றவர்களுக்கு பரவுவதற்கு காரணம் நம்முடைய கட்டுபாடுகள் இல்லாமலே திடீரென வந்துவிடும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 20 முறை கொட்டாவி விடுகிறான்.இந்த கொட்டாவின் நீளம் 6 நிமிடம் வரை நீடிக்கும்.
மனிதர்கள் மட்டுமில்லாமல் முதுகெலும்பு உள்ள அனைத்து உயிரினமும் கொட்டாவி விடும்.கருவில் உள்ள குழந்தை கூட கொட்டாவி விடுமாம்.
நாம் அனைவரும் கொட்டாவி விடுவதற்கு காரணம் நமக்கு ஆக்ஸிஜன் குறைபாட்டினால் ஆகஸிஜன் தேவைக்காகதான் கொட்டாவி விடுகிறோம் என்று கூறுவது உண்மை இல்லை கொட்டாவி விடுவதற்கும் ஆக்ஸிஜன் குறைபாட்டிற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை .
நமது மூளையின் சில செயல்பாடுகளினாலே கொட்டாவி ஏற்படுகிறது அதாவது நம் மூளையின் சூடு சாதரண நிலையை விட அதிகமானால் நமக்கு கொட்டாவி வர வாய்ப்புள்ளது.
நமக்கு சில சமயங்களில் அதிக மனஅழுத்தம் காரணமாக கூட மூளை வெப்பமடைந்து கொட்டாவி மூலம் குளிர்வடைய செய்கிறது. நாம் கொட்டாவி விடும்போது நாம் தாடையை அகலமாக விரிக்கும்போது நம் மூளையில் உள்ள வெப்பத்தை குளிர்வடைய செய்யும். பிறகு வாயை அகலாமாக திறப்பதால் அதிகஅளவு குளிர்வான காற்றை எடுக்கும் இதனால் சூடான இரத்தம் குளிராகும். நாம் தூங்கிஎழும்போது மூளையின் வெப்பம் மாற்றம் அடைவதால்தான் கொட்டாவி தோன்றுகிறது.
நம் வாழ்வில் கொட்டாவி ஒரு சாதரண நிகழ்வு இந்த கொட்டாவி அதிக சூடு உள்ள பகுதியிலோ அல்லது குளிர்வான பகுதியிலோ இருக்கும்போது ஏற்படாது மிதமான பகுதியில் உள்ள மக்களுக்கே அதிகமாக ஏற்படும்.
இந்த கெட்டாவி விடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இன்று வரை ஒரு முழுமையாக விளக்கத்தை கண்டறியமுடியவில்லை என்று அறிவியலாளர்ள் கூறுகிறார்கள்.
நன்றி!