முதலில் வந்தது கோழியா முட்டையா? (which came is first hen or egg?)
நாம் சிறுவயதிலிருந்து ஒரு புரியாத புதிராக உள்ளது இந்த முட்டையிலிருந்து கோழி வந்ததா இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற கேள்வி. இதில் ஒரு சிலர் கூறுவர் முட்டை என்று மற்றும் சிலர் கூறுவர் கோழி என்று இதற்கான விடையை நாம் காண்போம்.
விளக்கம்:
முதலில் வந்தது கோழி என்று சொன்னால் தவறு முதலில் வந்தது முட்டைதான். அது எப்படி என்றால் கோழி இருந்தால் தானே முட்டையிடும் எப்படியென்று நீங்க கேட்கலாம். இதற்கான பதிலை காண பல கோடி வருடம் பின்னால் செல்ல வேண்டும்.
உயிரினங்கள் தோற்றம்:
நாம் பூமி உருவாகி உயிரினம் தோன்றிய போது முதல் உயிரினம் கடலில் தான் தோன்றியது. முதலில் நீரில் அமீபா தோன்றியது அதன் பிறகு மற்ற நீர்வாழ் உயிரினங்கள் தோன்றின. நீரிலிருக்கும் விலங்குகள் அணைத்தும் முதலில் முட்டை இட ஆரம்பித்தன .இவைகள் முட்டை இட்டே உயிரினங்களை பெருக்கின.
பிறகு நீரிலிருந்து நிலத்திற்கு செல்ல விரும்பின.அதாவது அவைகள் பரிணாமம் அடைய ஆரம்பித்தன.
நீரிலிருந்து நிலத்திற்கு வந்த உயிரினங்களும் பரிணாமம் அடைந்து இருந்தாலும் முட்டை இட்டே வாழ்ந்தன எடுத்துகாட்டாக பள்ளியினம். அப்பொழுது அந்த காலகட்டத்தில் டைனோசர்கள் தோன்றியது. டைனோசரும் முட்டை இடும் உயிரினமே. அந்த டைனோசர்கள் பரிணாமம் அடைந்து பறவைகளாக மாறின. டைனோசருக்கு பிறகு வந்த பறவைகளும் முட்டை இடும் தன்மை கொண்டவை. எனவே பறவைகள் (கோழிகள்) டைனோசரின் இனமாகவே கருதப்படுகிறதப்படுகிறது .
மேலும் படிக்க ; நமக்கு ஏன் கனவு வருகிறது why do we dream?
கோழிகளின் தோற்றமும் பரிணாமமும்:
பறவைகள் தோன்றிய காலத்தில் ஏதோ ஒரு பறவையின் முட்டையிலிருந்தே கோழி தோன்றியிருக்கலாம்.அதாவது இவைகளில் பரிணாமம் ஏற்பட்டு ஏற்பட்டு கடைசி நிலையில் கோழிகள் தோன்றுகிறது அதாவது நாம் எப்படி குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தோமோ அதேபோல் கோழியும் முன்பிருந்த ஏதோ ஒரு பறவையின் பரிணாமம்தான் .எனவே ஆரம்ப காலத்திலிருந்து இருந்தவை முட்டையே ஆகும்.இடையில் தோன்றியவைதான் கோழிகள். அதாவது பறவைகள் தோன்றுவதற்கு முன்பு இருந்த அனைத்து உயிரினங்களும் முட்டை இட்டு வாழ்ந்தவை எனவே கோழி தோன்றுவதற்கு முன்பே முட்டை தோன்றிவிட்டது .எனவே முட்டை தான் முதலில் தோன்றியது. அதன் பிறகே கோழி வந்தது இதற்கு சிறந்த எடுத்துகாட்டு நான் முன்பே கூறியதுபோல் மனிதர்கள் எப்படி அனைவரும் குரங்கிலிருந்து வந்தனரோ அதுபோன்றே இந்த கோழியும் ஏதாவது ஒரு பறவையின் முட்டையிலிருந்தே பரிணாமம் அடைந்து வந்துள்ளது.
கேல்விகளும் பதில்களும்:
நாம் கேள்வியினை கேட்கும் போது முட்டை வந்ததா? கோழி வந்ததா? என்று கேட்டால் முதலில் முட்டைதான் வந்தது .
ஆனால் கோழி வந்ததா அல்லது கோழி முட்டை வந்ததா என்று கேட்டால் முதலில் கோழியே வந்தது. அதாவது கோழி தோன்றிய பிறகு தான் கோழிமுட்டை தோன்றியது .ஆனால் முட்டை கோழி தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிவட்டது.
எனவே உங்களின் கேள்விகளை பொறுத்தே பதில் கிடைக்கும். இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இதிலிருந்து முட்டை முதலில் வந்தது பிறகு கோழி வந்தது அதன் பிறகு கோழிமுட்டை வந்தது என்பதை அறிந்திருப்பீர்கள் பல நாட்கள் கேட்கபட்ட கேள்விக்கு இன்று பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி!