வணக்கம்! இன்றைய பதிவில் ரோபோட்கள் இந்த உலகை ஆளும் என்ற வார்த்தை ஏற்ப இயல்பான இயந்திர ரோபோக்கள் போல் இல்லாமல் உயிருள்ள தன்னைதானே வடிவமைத்துகொள்ள கூடிய ஒரு உயிருள்ள ஒரு ரோபோ தான் இந்த xenobot செனோபாட் இதனைபற்றிய முழுமையான தகவலை நாம் காண்போம்.
xenobot என்றால் என்ன?
நாம் இதுவரை பார்த்த கேள்விபட்ட ரோபோக்கள் அனைத்தும் இயந்திரம்போலும் பேசக்கூடிய ஒரு ரோபோவாகவே இருக்கும் ஆனால் இந்த செனோபாட் ஆனது முற்றலும் வித்தியாசமாக செல்களால் உருவாக்கபட்ட ஒரு ரோபோ இது இயற்கையாகவே குட்டிபோடக்கூடிய ஒரு ரோபோவாகவும் முற்றிலுமாக AI-ஆர்டிபிசியல் இன்டெல்லிஜன்ஸ் உதவியுடன் செயல்படுகிறது. இதானல் இந்த xenobot-ஐ நாம் கணினி மூலம் கட்டுபடுத்தமுடியும்.
xenobot-உருவாக்கம்
இந்த செனோபாட் பற்றிய ஆராய்ச்சியை அமெரிக்காவை சேர்ந்த டஃப்டஸ் பல்கலைகழகம் மற்றும் வெர்மான்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்த உயிருள்ள ரோபோவை கண்டறிந்தனர். தில் குறிப்பிடதகுந்த விடயம் என்னவென்றால் இந்த ரோபோவை உருவாக்க பயன்படுத்திய செல்கள் அனைத்தும் ஒரு தவளையில் இருந்து எடுக்கபட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ஆம் இது ஆப்பிரிக்கவில் இருக்கூடிய செனோபஸ் லெவிஸ் என்ற தவளையினத்தின் ஸ்டெம்செல்களை கொண்டு உருவாக்கபட்டது. இதனால் இந்த செல்களால் தங்களைதானே இது அளவில் மிக மிக சிறியது எனலாம் கிட்டதட்ட வெறும் கண்களால் இதனை பாரக்கவே முடியாது எனலாம். இது 1 மில்லிமீட்டருக்கும் குறைவாகதான் இருக்கும்.
இப்படி இந்த தவளையில் இருந்து எடுக்கபட்ட ஸ்டெம்செல்களை சூப்பர் கம்ப்யூட்டரின் உதவியோடு ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்கு நம்மால் கொண்டுவர முடியும். இப்படி கணினி மூலம் இந்த ரோபோ வடிவத்தை நம்மால் மாற்றி வைக்க முடியும்.ஒரு செனோபாட்டில் மட்டும் கிட்டதட்ட 100 முதல் 500 செல்கள் .
நான் ஏற்கனவே கூறியதுபோல் இந்த செனோபாட் ஸ்டெம்செல்களை கொண்டு உருவாக்கபட்டதால் அந்த ஸ்டெம்செல்கள்இரண்டாக பிரிக்கபடும் அதில் ஒன்று HEART CELL -ஆகவும் மற்றொன்று SKIN CELL -ஆகவும். இந்த HEART CELL-தான் அந்த ரோபோவுக்கு உயிர்கொடுக்கிறது. அந்த SKIN CELLS அந்த ரோபோவுக்கான அமைப்பை வழங்குகிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த ரோபோவின் வடிவத்தை அஅவர்கள் கட்டுபடுத்துவதாற்காக சூப்பர் கம்ப்யூட்டர் ARTIFICIAL INTELLIGENCE உதவியுடன் இதனை செய்துள்ளார்கள். மிகச்சிறாயமாக இருக்கும் இந்த செல்லை கட்டுபடுத்த சூப்பர் கம்பியூட்டரா என உங்களுக்கு கேள்வி எழலாம் ஆம் இது அந்த அளவுக்கு கடினமானது. ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் நாம் பயன்படுத்தக்கூடிய சாதரண கம்ப்யூட்டர்களை விட 20,000 மடங்கு மிகவும் சக்திவாய்ந்தது எனவே இதனை technology முன்னேற்றத்தில் ஒரு மைல்கல் என்றே கூறலாம்.
இந்த செல்களில் ஆராய்ச்சியாளர்கள் எந்தவித செயற்கையான முறையையும் கையாளமல் இருப்பதால் இது பெரியவித பாதிப்பை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
Related:AI-உலகை அழிக்குமா
xenobot-ன் பண்பு
இந்த செனோபாட் முற்றிலும் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கால் செயல்படுவதால் நாம் கொடிக்கும் செயல்களைதான் அது செய்யும் . இது வழக்கமான ரோபோ போல் இல்லாமல் உயயிரியல் ரோபோவாக இருப்பதால் இதன் ஆயுட்காலம் மிக குறைவு எனலாம் கிட்டதட்ட இந்த ரோபோ 6-7 நாட்கள் மட்டுமே உயிருடன். உயுரியல் ரோபோ என்பதால் இதற்கு தேவையான தட்பவெப்பநிலை அவசியம் முக்கியமாக இந்த செனோபாட் ஆனது குட்டிபோடும் தன்மைகொண்டது ஆம் இது இனப்பெருக்கம் செய்யும் ரோபோ ஆனால் ஒரு ஒரு செனோபாட்டால் ஒரே ஒரு செனோபாட்டைதான் உருவாக்க முடியும். அப்படி புதிதாக பிறந்த செனோபாட்டால் இனப்பெருக்கம் செய்ய முடியுமா என்று கேட்டால் அதிதான் கிடையாது . முதல் தலைமுறை செனோபாட் தன்னிடம் இருக்கும் செல்களை பாதியாக பிரத்து புதிய ரோபோவை உருவாக்குவதால் அது வலிமையற்றதாக இதனால் அது இனப்பெருக்கம் செய்ய இயலாது.
xenobot-பயன்கள்
இந்த xenobot-கள் 2020-ஆம் ஆண்டு அறிமுகபடுத்தபட்டபோது இதனை வைத்து நம் உடலில் ஏற்படும் உபாதைகள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் cancer,brain tumor போன்றவற்றை குனப்படுத்தலாம் என கூறுகிறார்கள். இந்த செனோபாட்டை நம் விருப்பத்திற்கேற்ப வடிவத்தை உருவாக்க முடிவதால் நம் உடலுக்குள் செல்லும் ரோபோக்களை ஒரு வடைபோன்ற வடிவத்தில் உருவாக்கி அதன் மையப்பகுதியில் அந்த நோய்க்கான தடுப்பு மருந்தை அனுப்பலாம் ஏனெனில் இது உருவளவில் மிகசிறியதாக இருப்பதால் இது நம் உடலுக்குள் சென்றுவிடும். இயற்கையான செல்களால் உருவாக்கபட்டதால் இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே இது மருத்துவதுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம்.
அடுத்ததாக கடலில் இருக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை கூட இந்த ரோபோக்களை வைத்து நம்மால் நீக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் . இதுமட்டுமா என்று கேட்டால் இல்லை இந்த ரோபோ உருவாகி வெளியே வரும்பொழுது பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
நன்மை என்று இருந்தால் தீமை என்ற ஒன்றும் இருக்கும் இது புரோகிராமிங்கில் செயல்படுவதாலும் உயுரியல் ரோபாவாக இருப்பதாலும் அதன் வடிவத்திலோ அல்லது செல்களில் மாற்றம் ஏற்பட்டாலோ அது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறார்கள் எனவே தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் அதனுடைய தொடக்கமும் அமையும் .
நன்ற