
வணக்கம்! நீங்கள் ஒரு இணையவாசியாக இருந்தால் கடந்த ஒரு சில காலமாகவே நீங்கள் இந்த ஒரு வார்த்தையை அடிக்கடி கேள்விபட்டிருக்க வாய்ப்புள்ளது. அது என்னவென்றால் WEB 3.0 என்பது. வெப் 3.0 என்றால் என்ன இதற்கும் கிரிப்டோ கரண்சிக்கும் என்ன சம்மந்தம் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
web 3.0 explanation

இந்த வெப் 3.0 என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னால் வெப் அதாவது இணையம் என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது என்பதை பற்றி புரிந்து கொள்வது அவசியம்.
தொடர்புடையவை:இண்டர்நெட் என்றால் என்ன?
இணையம் என்பது பல்வேறு கணினிகள் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு வலைபின்னல் எனலாம். இந்த web தற்போது மூன்று வகைகளாக பரிணமித்துள்ளது
- Web 1.0,
2. Web 2.0
3. Web 3.0
இவற்றை நாம் ஒவ்வொன்றாக தெளிவாக பார்ப்போம்.
Web 1.0
1980-களில் இண்டர்நெட் முதன்முதலாக உருவாக்கபட்டபோது இந்த வெப் 1.0 தான் இருந்துள்ளது அதாவது. முதன் முதலாக நீங்கள் இண்டர்நெட் அறிமுகபடுத்தபட்ட காலத்தில் அதை பயன்படுத்தியிருந்தால் இதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புள்ளது ஒரு 10- 15 வருடங்களுக்கு முன்பு இணையதளத்தில் உங்களால் படிக்க மட்டுமே முடியும் அங்க் தற்போது போல் you, instagram ,twitter போல நம்முடைய கருத்துகளை comments ஆகவோ அல்லது வீடியோ மற்றும் மீம்களாகவோ போட முடியாது, வெப் 1.0 வெறும் தகவல்கள் நிறைந்த ஒரு புத்தகம் போல் தான் இருந்தது அங்கு நம்மால் comments,like போன்ற எதுவும் இருக்காது. முக்கியமாக வெப் 1.0 எந்தவித விளம்பரங்களும் காட்டபடாது.
Web 2.0
2004-க்கு பிறகு இந்த வெப் 2.0 தொடங்குகிறது இதுவரை இண்டர்நெட்டில் கருத்து படிக்க பயன்படுத்திய பலபேருக்கு இந்த பேஸ்புக் யூடியூப், கூகுள் போன்ற நிறுவனங்கள் நீங்களும் கருத்துகளை மற்றும் வீடியோக்களை பதிவிடுங்கள் என்று புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தது. இதன் காரணமாக ஒவ்வொரு தனிநபரின் தனிபட்ட தகவல்களும் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்கள் வைத்து கொள்கின்றன. அன்றுவரை இண்டர்நெட்டில் யாராலும் பணம் சம்பாதிக்க முடியாது என்றுதான் நினைத்தார்கள் ஆனால் இந்த கூகுள் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பயனாளர்களின் நடவடிக்கை மற்றும் அவர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு அவர்களின் தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்க ஆரம்பித்தனர். இப்படி இதில் வர்த்தக நோக்கத்திற்காக அறிமுகபடுத்தபட்டதுதான் தற்போது உள்ள சமூக ஊடகங்கள் போன்ற அனைத்துமே.
Web 3.0

இந்த web 3.0 என்பது இணையதளத்தின் புதிய அத்தியாயம் என்றே கூறலாம் இதுவரை நமது தகவல்களை கொண்ட நிறுவனங்கள் அதை விற்று காசு சம்பாதித்தனர் ஆனால் இதில் உங்களின் தகவலை நேரடியாக நீங்களே விற்கலாம். இப்போது நீங்கள் யூடியூபில் ஒரு வீடியோ பதிவிட்டால் அதற்கு அவர்கள் பணம் தருவார்கள் ஆனால் இங்கு நீங்களே உங்களின் வீடியோ மற்றும் தகவலை தேவையானவர்களுக்கு பரிமாறிக்கொள்ளலாம் அதன் மூலமும் பணமீட்டலாம். அதுமட்டுமல்லாமல் இது block chain போன்ற தொழில் நுட்பத்தில் செயல்படுவதால் உங்களின் தனியுரிமை பாதுகாப்பு என்பது மிக அதிகம் இதில் தான் தற்போது பேஸ்புக் அறிமுபடுத்தியுள்ள மெட்டாவேர்ஸ் மற்றும் கிரிப்டோ கரண்சிகளும் வரும். இந்த கிரிப்டோ கரண்சிகளை யார் நினைத்தாலும் உருவாக்கலாம் அதற்கென்று தனி அரசாங்கமோ வங்கியோ தேவையில்லை அவர்களுக்கென்று தனி வழிமுறைகளை அவர்கள் வகுத்துகொள்ளலாம் எடுத்துகாட்டாக நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்ப கூகிள் பே பயன்படுத்துவதற்கு பதிலாக கிரிப்டோ கரண்சிகளை பயன்படுத்த முடியும். இதானல் சமீப காலமாக கிரப்டோக்கள் புதிய புதிய பெயர்களில் வந்துகொண்டே இருக்கின்றன.
இதுதான் எதிர்காலம் என்றும் பலரும் குறிப்பிடுகிறார்கள் இருக்கவும் நிறைய வாய்ப்புள்ளது ஏனெனில் இதில் உங்களின் தகவலை நீங்களே விற்க முடியும் இதற்கு இடையில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நன்றி!