வணக்கம்! இன்றை காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் புதிய புதிய மாற்றங்கள் இந்த உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அப்படி இந்த உலகையே தலைகீழாக புரட்டிபோடும் அளவுக்கு உருவாக்கபட்ட ஒரு தொழில்நுட்பம்தான் மெட்டாவேர்ஸ்(metaverse) இந்த metaverse என்றால் என்ன facebook தனது பெயரை meta என மாற்ற காரணம் என்ன? என்பதை இந்த பதிவில்காண்போம்.
what is metaverse
தற்போது இண்டர்நெட்டில் பேச்சுபொருளாக இருப்பது பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றி இருப்பதாக வெளியான செய்தி தான் என கூறவேண்டும் .
தற்போது மக்களால் பேசப்படும் இந்த செய்திக்கு பின்னணியில் இருப்பது metaverse எனப்படும் புதிய மெய்நிகர் உலகம். பேஸ்புக் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய காரணம் என்ன metaverse என்றால் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்
தற்போதைய உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக உலகில் எங்கேயோ உள்ள ஒருவரை கூடதொடர்பு கொள்ள முடிகிறது நேரில் கண்டிராத ஒருவரைக்கூட சமூகவலைதளங்கள் மூலம் நண்பர்களாக்கிக் கொள்ள முடிகிறது.
இப்படி இருக்கும் இந்த இணையதளத்தின் அடுத்த கட்டம்தான் metaverse. metauniverse என்ற வார்த்தைகளை இணைத்து உருவானது தான் metaverse என்று கூறப்படுகிறது.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு(virtual reality world) என்பதுதான் இதன் அர்த்தம்.
தொடர்புடையவை: web 3.0 என்றால் என்ன
metaverse தோற்றம்
இந்த மெட்டாவேர்ஸ் ஆனது முதன்முதலில் 1992ஆம் ஆண்டு நீல் ஸ்டிபன்சென் என்ற எழுத்தாளரின் snow crush என்று அறிவியல் கதையில் வெளியானது, அந்த தொடரில் மக்கள் தங்களுக்கென ஒரு உலகத்தையே உருவாக்கி செயற்கையாக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் மெய்நிகர் உலகம் தான் இந்த METAVERSE என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த metaverse அடிப்படையில் உருவான மற்றொரு நாவல்தான் ரெடி பிளையேர் ஒன் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இதனை 2018 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளியிட்டிருந்தார் அந்த திரைப்படத்தில் இருப்பதுபோல்தான் ந்த மெட்டாவேர்ஸ் இயங்கும் என அனைவராலும் நம்படுகிறது.
தற்போது இளைஞர்கள் விளையாடக்கூடிய fortnite வீடியோகேம் கூட இந்த metaverse அடிப்படையில் உருவானவையே.
நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றும் AGUMETED REALITY அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச்செய்யும் VIRTUAL REALITY இந்த இரண்டையும் இணைத்து நிஜ உலக மனிதர்களை virtual ஆக வாழச் செய்யும் இடம் தான் metaverse எனலாம்.
metaverse games
விளையாட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் ஆனது, இனி மக்களை தங்களுக்குப் பிடித்தமான தோற்றத்தை தேர்வு செய்து அதாவது நமக்கென ஒரு அவதார்களை உருவாக்கி கற்பனை உலகில் (மெய்நிகர்உலகில்) வாழ செய்யப்போகிறது.
crypto currency-களை பயன்படுத்தி இந்த metaverse-ல் இருக்கும் நமக்கு பிடித்தமான நிலங்களை வாங்கும் மற்றும் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஃபேஸ்புக் பெயர் மாற்ற காரணம்
தற்போது பேஸ்புக் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் தான் கவனம் செலுத்துகிறது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் மற்றும் விர்ச்சுவல் விளையாட்டுத்தளமான ஆக்குளஸ் ஆகியவற்றை metaverse மூலம் இணைத்து புதியதாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வருவது ஃபேஸ்புக்கின் திட்டம்.
இது நடைமுறையில் வர 15 வருடங்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது இப்போது பேஸ்புக் மூலம் நாம் இதுவரை நேரில் கண்டிராத அவர்களுடன் நட்பு பாராட்டுகிறோம்.இந்த தொழில்நுட்பம் சாத்தியபடும்போது மெய்நிகர் உலகில் அவர்களோடு நாம் விளையாடலாம் நடைபயிற்சி செய்யலாம் என பல்வேறு அம்சங்கள் உள்ளது குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இறந்த நபர்களை கூட நம்மால் இந்த மெட்டாவேர்ஸில் உருவாக்க முடியும் அவர்களுடன் நம்மால் பேசவும் முடியும்.
metaverse ஏற்படுத்தபோகும் தாக்கம்
இந்த ஒரு metaverse நடைமுறைபடுத்தபட்டால் தற்போது இருக்கும் மனிதர்களுக்கு இடையிலான நேரடி தகவல் தொடர்பை ரத்து செய்து மனிதர்களை மேலும் தனிமைபடுத்தும் . இப்போது இண்டர்நெட்டில் மூழ்கி கிடக்கும் நாம் பிற்காலத்தில் இந்த metaverse-ல் பொழிதை கழிக்க வாய்ப்புகள் அதிகம் எனவே தொழில்நுட்பத்தை முறையாக எப்படி கையாள்வது என்பதை அனைவரும் கற்றுகொள்வது அவசியம்.
youtube-ல் காணவும்
நன்றி!