வணக்கம்! இன்றைய பதிவில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருக்கும் அப்படி உங்களிம் இருக்கும் ஆற்றல் என்ன அதை எப்படி வகைபடுத்துகிறார்கள் என்பதை பற்றிதான் பார்க்க போகிறோம்.
மாஸ்குளின் எனர்ஜி
- இது ஒரு சில பழக்கவழக்கங்களின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. ஆண் ஆற்றலுக்கு, ஒரு ஆண் முழுவதுமாக இலக்கு சார்ந்தவராக இருக்க வேண்டும் அதாவது தனக்கென்று ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்,
- ஒரு ஆண் முழு சுதந்திரமாக இருக்க வேண்டும் தனக்கான முடிவுகளை தானே எடுக்கவேண்டும் மற்றவர்களை சார்ந்து இருக்கூடாது,
- ஒரு ஆண் மற்றவர்களை வழிநடத்த வேண்டும் மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்
- ஒரு ஆண் அவர் தனது முடிவை தானே எடுக்க வேண்டும் தயக்கம் இல்லாமல் மற்றவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் தனது முடிவை ஆணித்தரமாக எடுத்து அதில் வென்று காட்ட வேண்டும்
- இந்த வகை ஆண்கள் மற்றவர்களை மகிழ்ச்சியடைய செய்வதற்கு பதிலாக தனக்கு விரும்பியதைச் செய்து தங்களை மகிழ்ச்சியடையச் செய்வார்கள்,
- இதில் ஒரு முக்கியமான பண்பு, இது எல்லாவற்றிலும் ரிஸ்க் எடுப்பது எதற்கும் தயங்காமல் அசால்டாக முடிவெடுப்பது
- என்னதான் நடந்தாலும் சரி அனைத்தையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் “மன வலிமை” இருக்க வேண்டும்.
- இந்த மஸ்குலின் ஆண்கள் துணிந்து முடுவுகளை எடுத்து தனக்கென்று தனி பண்புகளை கொண்டிருப்பர்.
பெண் ஆற்றல்ஃபெமினைன் எனர்ஜி :
பெண் ஆற்றல் என்பது உறவை மையமாகக் கொண்டது அவர்களின் அனைத்து முடிவுகளும் உணர்ச்சிகளின் அடிப்படையிலேயே இருக்கும், உணர்ச்சி (எல்லாவற்றிலும் உணர்ச்சிகளைக் காட்டுதல்), மென்மையானவர்கள் (அமைதியைப் பேணுதல்), அவர்கள் பாதுகாப்பாக உணர்வதுர்வது. (அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் அதாவது பிரச்சனைகளை விட்டு விலகிவிடுவார்கள்,) மகிழ்ச்சியாக இருப்பது இவர்கள் எப்போதும் மற்றவர்களின் மகிழ்ச்சியில்தான் தனது மகிழ்ச்சையை தேடுவார்கள்; இவர்கள் எல்லாருடைய கருத்துகளையும் ஏற்றுக்கொள்வார்கள் மறுத்துபேசமாட்டார்கள், இவர்கள் எல்லோரிடமும் ஈஸியாக இணைந்து கொள்வார்கள். இது பொதுவான பெண்களுக்கு உரிய பண்பாகும் எல்லா பெண்களும் இவ்வாறு தான் நடந்து கொள்வர்களா அப்படி கேட்டால் அது உண்மையில்லை பெண்களுக்குஎன்று விதிக்கப்பட்ட ஒரு பொதுவான பண்பாக கருதப்படுகிறது.
ஆனால் இவ்வாறு ஆண்கள் எந்த விசயத்தையும் துணிந்து செய்யாமல் தன்னை பாதுகாப்பிலே வைத்திருப்பர் மற்றவர் என்ன நினைப்பர் என்று யோசித்து கொண்டருப்பர் பெண் ஆற்றல் போல் யோசிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு யோசிப்பவர்களை பெமினைன் என்று கூறுவர்.