BITCOIN EXPLANATION
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் இண்டர்நெட் கண்டுபிடிக்கபட்ட பிறகு பணப்பரிவர்தனையில் உலகை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்ற ஒரு விடயம்தான் இந்த பிட்காயின், நாம் உபயோகிக்கும் ரூபாய் நோட்டுக்கும் இந்த பிட்காயினுக்கும் என்ன வித்தியாசம் எப்படி இந்த பிட்காயின் மதிப்பு மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை பற்றி காண்போம் .
BITCOIN தோற்றம்
நீங்கள் படத்தில் காண்பதுபோல் பிட்காயின் என்பது ஒரு நாணாயமாகவோ அல்லது ரூபாய் நோட்டுகளாகவோ இருக்காது இந்த பிட்காயினை நம்மால் காணவே முடியாது. இது உங்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம் நாம் முதலில் பரிணாமம் அடைந்த காலகட்டத்தில் பணத்திற்கு பதிலாக ஒரு பொருளை குடுத்து மற்றொரு பொருளை வாங்கிகொண்டிருந்தோம் இதனை பண்டமாற்று முறை என கூறுவர் இதில் நிறைய குளருபடிகள் இருந்தன அதானால் அனைவரும் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு மாறினர் இது அனைத்து மக்களுக்கும் பொதுவாகவும் ஒரு அளவுகோளாகவும் இருந்தது. இதன் பிறகு தான் இண்டர்நெட் என்ற ஒன்று கண்டுபிடிக்கபடுகிறது. இந்த இண்டர்நெட்டின் மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம் என கண்டுபிடிக்கபடுகிறது.
இந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாக நமது வங்கியில் உள்ள பணம் மற்றோரு வங்கிக்கு அனுப்பபடுகிறது. இந்த பணம் நேரடியாக மாற்றப்படுகிறதா என்று கேட்டால் கிடையாது நமது பணத்தை வங்கிகள் பெரும் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள் அதன் மூலமாகதான் அவர்கள் லாபம் அடைகின்றனர் பணம் பரிமாற்றம் என்பது வெறும் எழுத்துகளாக மட்டுமே இருக்கும் இந்த இண்டர்நெட்டில். உங்களின் பணம் வங்கிகளில் மட்டும் இருக்கும் ,ஆன்லைனில் ஒரு எழுத்தாக மட்டுமே இந்த பணம் செல்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இதே போன்றுதான் பிட்காயினும் இந்த பிட்காயினுக்கென்று எந்த நாணயமோ ரூபாய் நோட்டுகளும் கிடையாது இது கம்பியூட்டரில் உருவாக்கபட்ட கண்ணுக்கே தெரியாத ஒரு பணம் . அப்படியென்றால் இந்த பிட்காயினை கண்டுபிடித்தது யார் என்ற கேள்வி எழலாம் இந்த கேள்வி இன்றுவரை மிகப்பெரிய மர்மமாகவே உள்ளது. 2008-ஆம் ஆண்டு சடோஷி நாகமோடோ என்ற மனிதர்தான் இதனை கண்டுபிடித்தார் என்று குறிப்பிடபடுகிறது ஆனால் அவர் யார் அவர் எங்கு உள்ளா் அல்லது இது ஒரு குழுவா என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாது. இந்த பிட்காயின் கண்டுபிடிக்கபட்டபொழுது இதன் மதிப்பு வெறும் 7 ரூபாய் தான். ஆனால் இன்றோ பல லட்சங்களாக உயர்ந்துள்ளது.
BITCOIN செயல்படும்விதம்
இந்த பிட்காயினை நாம் டிஜிட்டல் கரண்சி என்று கூட கூறலாம் இப்போது நாம் ஒருவருக்கு பணத்தை செலுத்த நமது வங்கியில் இருந்து பணபெறக்கூடிய நபரின் வங்கிக்கு அனுப்புகிறோம் இதற்கு இடையில் வங்கிகள் இருக்கம் இந்த சேவைக்காக வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்துகொள்வார்கள் ஆனால் இந்த பிட்காயினில் எந்த வங்கியும் கிடையாது ஒருவருடைய வாலட் நம்பர் தெரிந்தால் மட்டுமே போதும் அவருக்கு பிட்காயினை அனுப்பி விடலாம் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதில் அனைத்து பரிமாற்றமும் வெளிப்படையாக இருக்கும் ஆனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் மிகவும் பாதுகாப்பானது அதனை எவராலும் ஹேக் செய்ய இயலாது. அதுபோன்று இந்த பிட்காயினை நீங்கள் கூட பெறலாம் அதற்கு உங்களிடம் மிகவும் சக்திவாய்ந்த கணினிகளும் அதிக மினுசாரமும் தேவைப்படும். இந்த பிட்காயினை பெரும்பாலான நாடுகள் சட்டத்திற்கு புறம்பானது என நினைக்கிறார்கள் அதுபோல் ஒருசில நாடுகளும் இந்த பிட்காயினை தடைசெய்தனர் நம் நாடு இந்தியா கூட 2018ஆம் ஆண்டு இதனை தடைசெய்தது ஆனால் 2020-ல் அந்த தடையை நீக்கியது.
எப்படி இந்த பிட்காயின் மதிப்பும் மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது என்ற கேள்விக்கு வருவோம் இதற்கான காரணம் இந்த பிட்காயின் மீது அதிகபடியான மக்கள் முதலீடு செய்வதுதான் ஏன் எலான் மஸ்க் கூட அவரின் டெஸ்லா கார்களை பிட்காயினில் வாங்கலாம் என கூறினார். இப்படிதான் இந்த பிட்காயின் விலை உச்சத்தை அடைந்தது. இந்த பிட்காயின்தான் உண்மையில் பணபரிவர்தனையின் எதிர்காலாமா என்பதை காலம் மட்டும்தான் சொல்லமுடியும்.
WATCH ON YOUTUBE
நன்றி!