விலங்குப் பொருட்களிலிருந்து, குறிப்பாக உணவுமுறைகளில், விலகியிருக்கும் செயற்பாடாகும்; தொடர்புள்ள மெய்யியலாக இது விலங்குகளை வணிகப்பொருட்களாக கருதுவதை மறுக்கிறது. இந்த உணவுமுறையையோ அல்லது மெய்யியலையோ பின்பற்றுபவர்கள் நனிசைவர் (vegan) எனப்படுகின்றனர்
டோனால்டு வாட்சன் 1944இல் வீகன் என்ற சொற்றொடரை உருவாக்கி இங்கிலாந்தில் வீகன் சமூகத்தை நிறுவினார். முதலில் பால்பொருட்களில்லா தாவர உணவுமுறை என்ற பெயரை பயன்படுத்தினார். 1951 முதல் வீகன் சமூகம் “விலங்குகளை தன்னலப்படுத்தாது மனிதன் வாழவேண்டும் என்ற சித்தாந்தமாக” இதனை வரையறுத்தது.2010களில் நனிசைவத்தில், குறிப்பாக பிந்தைய ஆண்டுகளில் ஆர்வம் மேலோங்கியது. கூடிய நனிசைவ கடைகள் திறக்கப்பட்டன; பல நாடுகளிலும் பல்பொருளங்காடிகளிலும் உணவகங்களிலும் நனிசைவ விருப்பத்தேர்வுகள் கிடைக்கலாயின.
நனிசைவ வகைகள்
சில நனிசைவர்கள் சமைக்காத உணவுகளையே உண்கின்றனர்; இவர்கள் பச்சைக்கறி சைவர்கள் எனப்படுகின்றனர்.
மேலும் சிலர் எந்த தாவரத்தையும் கொல்லாமலோ பாதிப்பின்றியோ அறுவடை செய்யப்படும் கீழே விழுந்த பழங்கள் போன்றவற்றை மட்டுமே உண்கின்றனர்.