ஹிட்லர் பற்றிய உண்மைகள்
உலகில் பல மனிதர்கள் இருந்தாலும் சில மனிதர்கள் மட்டுமே வரலாற்றில் நீங்காத இடத்தை பெறுவார்கள் , அப்படி ஒருவர்தான் இந்த அடால்ப் ஹிட்லர்(adolf hitler) ஆவார். இவர் சாதரண மனிதராக இருந்தாலும் உலகை சில காலத்திற்கு அவரின் கட்டுபாட்டில் வைத்திருந்த மிகவும் சக்திவாய்ந்த மனிதர் ஆவார். இவர் உலகையே தன் வசமாக்க நினைத்தவர் வரலாற்றையே திரும்பிபார்க்க வைத்தவர். இவ்வாறு இவரை பற்றி நாம் அறியாத ஒரு சில உண்மைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
இந்த ஹிட்லர் ஒரு மாபெரும் சர்வாதிகாரி ஆவார் இவர் ஜெர்மனி நாட்டை தன்னுடைய சர்வாதிகாரம் மூலம் ஆட்சிசெய்தார் என்பது நாம் அறிந்ததே. இந்த அடால்ப் ஹிட்லர் பலருக்கு மிருகமாகவும் சிலருக்கு வீரனாகவும், உலகதுக்கு கொடுரனாகவும் தெரிந்தார், இரண்டாவது உலகபோர் வர காரணமாக இருந்ததும் இவர்தான்.
ஹிட்லரின் குடும்பம்
ஜெர்மனியின் சர்வாதிகாரியான இவர் வட ஆஸ்திரியாவில் பாரானவ் என்ற ஊரில் 1889 ல் ஏப்ரல் 20 ல் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சுங்க அதிகாரி இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் அதிக ஆர்வம் இருந்தது . ஹிட்லரின் தந்தை ஹிட்லரை மதிக்க மாட்டார் என்றும் அவரை துன்புறுத்தினார் என்றும் வரலாறு கூறுகிறது இருப்பினும் இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார்.
பிறகு தாய் அரவணைப்பிலேயே சில காலம் வளர்ந்தார் . இவர் ஓவியத்தில் தான் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் அதிக அளவில் ஓவியஅட்டை வரைந்து அதன்மூலம் பணம் சம்பாதித்தார் இவர் ஓவிய ஆசிராயராக பணிபுரிய இங்கிலாந்து பலகலைகழகத்திற்கு செல்கிறார் ஆனால் அங்கு ஹிட்லரை அவமானபடுத்தி அனுப்புகிறார்கள் . பிறகு ஜெர்மனிக்கு குடிபெயரெகிறார் அங்கு அவருக்கு காதல் தோல்வியடைந்ததால் சில காலங்கள் நாடோடியாக அலைந்தார் ஹிட்லர் சில காலங்கள் சாலையோரங்களிலேயே கடந்தார் என்பதும் குறிப்பிடதக்கது இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு அவமானங்களை சந்திக்கிறார் ஹிட்லர்.
ஹிட்லரின்அரசியல் வாழ்க்கை
அதற்கு பிறகுதான் பல நாழிதல்களை படித்து அரசியலில் ஈடுபட்டார் பிறகு ஜெர்மனிக்கு சென்றார். 25 வயதில் ஜெர்மனியில் ராணுவ வீரராக சேர்ந்தார். அப்போது முதல் உலகபோர் காலமான 1914 முதல் 1918 வரை ஜெர்மனி படையில் பணிபுரிந்தார் . அப்போது பல அடிகளுடன் காயங்களுடன் தப்பிபிழைத்த ஒருவர் தான் ஹிட்லர் பிறகு இவர் 2ம் உலகபோர் உருவாக முக்கிய காரணமாக இருப்பார் என்று எவருக்கும் தெரியாது .
அதன்பிறகு தனது கடின உழைப்பால் நாசிச கட்சியை தோற்றுவித்து ஜெர்மனி தான் உலகில் சிறந்தது என்ற கொள்கையையும் மக்களிடையே பரப்பினார். இந்த கட்சியின் சின்னம் ஸ்வஷ்தி ஆகும். இவர் செய்த சில பிரச்சாரத்தால் சிறைக்கும் சென்றார் அந்த சிறையில் எனது போராட்டம் என்ற நூலை எழுதினார் அது உலகம் முழுவதும் சிறப்பு பெற்றது அந்த புத்தகத்தில் இனம் பற்றிய தெளிவான புரிதலை கூறியிருப்பார் . இவர் யூதர்கள் மற்றும் கம்யூனஸ்ட்க்கு எதிராக இருந்ததால் இவர் தனது புத்தகத்தில் அவர்களை பற்றி இழிவாகவும் கூறியிருப்பார்.
இவரின் பல ராஜ தந்திரமும் பல முயற்சியும் இடைவிடாத உழைப்பும் கவர்ச்சிகரமான பேச்சும் இவரை தலைதூக்க வைத்தது ராணுவ பதவி, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எல்லா பதவியையும் எடுத்து கொண்டு ஜெர்மனியின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக ஆனார்.
இவர் இவ்வாறு மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்ததால் இவரே யூதர்களை சுட்டு கொன்றார். பிறகு முதல் உலகபோரில் ஜெர்மனி தோல்வியடைந்த அனைத்து நாடுகளையும் பலிவாங்க நினைத்து ராணுவத்தை பலபடுத்தினார். பிறகு 1939 ல் போலந்து நாட்டின் மீது போர் செய்து 2ம் உலக போரை உருவாக்கினார். இவரின் பழி வாங்கும் காரணத்தினாலே 2ம் உலகபோர் உருவானது எனலாம்.
ஹிட்லர் என்னதான் ஜெர்மனியை சர்வதிகார நாடாக வைத்திருந்தாலும் ஒரு சிறந்த சர்வாதிகாரியாக வழிநடத்தி நாட்டை சிறப்பாக வழிநடத்தி சென்றார் தனது நாட்டிற்கு ஒரு சிறந்த அதிகாரியாகவே இருந்தார். இவர் பல தவறுகள் செய்ததால் இவர் செய்த சாதனை மறைந்து போனது. இவர் தனது நாட்டிற்கு ஒரு சிறந்த மனிதராக இருந்தார் தன் மக்களுக்காக பல நன்மைகள் செய்தார். ஆனால் உலக மக்களுக்கு இல்லை
இவர் சிறந்த அறிவுதிறன் பெற்றவர் ஏனென்றால் முதல் உலகபோரில் தோல்வி அடைந்த ஜெர்மனியை 3 ஆண்டுகளில் தூக்கி நிலைநிறுத்தினார். ஹிட்லர் காலத்தில் பொருளாதாரம் சிறப்பாகவே இருந்தது எனலாம். அதுதான் ஜெர்மனியின் பொற்காலம் என்றே கூறலாம் ஆனால் தவறான தலைவன் பிடியில்.
உலகில் முதன்முதலில் ஹிட்லர் காலத்தில்தான் நீண்டசாலை அமைக்கப்பட்டது. இவர் காலத்தில்தான் சிறந்த மருந்துகளை உருவாக்கினார். பெண்களுக்கும் மிக முன்னுரிமை காட்டினார். ஒரு சிறந்த தலைவனாகவும் இருந்தார் .
இவர் ஆட்சிக்குவந்த பிறகுதான் ஜெர்மனியில் பீரங்கி ,துப்பாக்கி என நவீன ரகம் ஆயுதம் உருவானது இதெல்லாம் இவர் காலத்தில் சிறப்பாக செய்தார்.
ஹிட்லர் பலரை கொன்றாலும் இவர் ஒரு சைவ உணவை மட்டுமே உண்பார். இவருக்கு பூனை பார்த்து பயம் கொல்லும் பண்பும் இருந்துள்ளது இவர் பெரிய சர்வாதிகாரியாக இருப்பினும் பூனை பார்த்தால் பயம் கொள்வார் ஏனெனில் இவருக்கு ஐலுருபோஃபியா என்ற அறிய வகை நோய் இருந்துள்ளது.இந்த வகை நோயால் பாதிக்கபட்டவர்கள் பூனைகள் கண்டால் அச்சப்படுவார்களாம்.
இவர் தனது சிறுவயதிலிருந்தே பல போதைமாத்திரைகளை பயன்படுத்தியவர் இது கூட இவரின் அந்த அரக்க குணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி இவர் போதைக்கு அடிமையாக காரணம் அவரின் குடும்ப மற்றும் ஆரம்ப கால பிரச்சனைகள் என அவரே குறிப்பிட்டுள்ளார். இவரை பலரும் கொலை செய்ய முயற்சி செய்த போதும் 42 முறை மீண்டும் உயிர்பிழைத்து எழுந்தார் கடைசியில் தற்கொலை செய்துகொண்டார்.
இவர் முதல் உலக போரில் உயிர் போகும் தருவாயில் இருக்கும்பொழுது அவருக்கு வெறும் 18-வயது இதன் காரணமாக அந்த பிரிட்டிஷ் போர்வீரர் இந்த சிறுவன் பார்க்க பாவமாக இருக்கிறான் இவன் என்ன செய்ய போகிறான் என்ற காரணத்தினால் உயிர் பிழைக்க விட்டனர். அப்படி அவர் உயிர் பிழைக்க விட்ட அந்த சிறுவன்தான் எதிர்காலத்தில் இரண்டாம் உலகபோர் வர காரணமாக இருக்கும் ஹிட்லர் என்று அவருக்கு தெரியாது. ஹிட்லர் பலரை கொணறு சர்வாதிகாரியாக மாறி பிறகு சிறந்த தலைவனாகவும் இருந்து நாட்டை வழிநடத்தி கடைசியில் தற்கொலை செய்து கொண்டார்.
நன்றி!