unknown facts about bobmarley
வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் இளையஞர்களின் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர் கருப்பின ஒடுக்கமுறையை தன் பாடல் மூலம் மக்களுக்கு பரப்பியவர் அவர்தான் BOB MARLEY இவரை பற்றிய சில பொய்யான கருத்துகளும் இங்கு உலாவருகின்றன அதைபற்றியும் இவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் முழுமையாக காண்போம்.
BOB MARLEY பிறப்பு
பாப்மார்லியின் இளம்வயது
தனது தந்தை இறந்த பிறகு பாப்மார்லி அவரது தாயாருடன் டிரென்தவுன் என்ற இடத்திற்கு மாறுகிறார் அங்குதான் அவர் கருப்பின மக்களுக்கு இழைக்ககூடிய அநீதிகளையும் மற்றும் ஒடுக்குமுறைகளையிம் காண்கிறார் இதை எப்படியாவது உலகிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்த பாப்மார்லி ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையில் எடுத்தார் அதுதான் இசை.
பாப்மார்லி இசைப்பயணம்
இசையில் பேரன்பு கொண்ட பாப்மார்லி 1962 ஆம் ஆண்டு வெய்லர்ஸ் என்ற இசை குழுவில் சேர்ந்து பாடுகிறார் இவருடைய முதல் பாடல் இவர் நினைத்தபடி சரியாக அமையவில்லை என்றே கூறலாம் இருப்பினும் மனம் தளராத பாப்மார்லி 1964 ஆம் ஆண்டு மார்லி ரெகொ என்ற புதிய வகை இசையை புகுத்தி ஒரு பாடலை உருவாக்குகிறார் இந்த பாடல் பெரும் வெற்றி கண்டது இதன் பிறகு பாப் மார்லி வெளியிட்ட அனைத்து பாடல்களும் வெற்று பாடலாகவே அமைந்தன அதுவும் இவரின் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அநீதிகளை பிரதிபலிக்கும் பாடலாகவே இருந்தன.
பாப்மார்லியும் கஞ்சாவும்
இந்த பாப்மார்லி 1966-ஆம் ஆண்டு ரீடா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் இந்த ரீடா என்கிற ரஸ்தபாரி என்று அழைக்கபடும் ஒரு மதத்தை சேர்ந்தவர் இந்த ரஸ்தபாரி மதமானது கிறிஸ்துவர்களை எதிர்க்கும் வகையில் ஆப்பிரிக்க பழங்குடியின மக்களால் தங்களுடைய கலாச்சாரங்களுக்கு என்று தனியாக உருவாக்கபட்ட கிறிஸ்துவ மதம் ஆகும், இவர்கள் எத்தியோபியாவை சேர்ந்த மன்னனை கடவுளாக வணங்குவார்கள்