உங்களை ஆச்சரியபடுத்தும் பத்து உண்மைகள் top 10 random facts in Tamil

                        TOP 10 RANDOM FACTS

top 10 random facts
வணக்கம் ! இன்றைய பதிவில் நாம் உங்களைஆச்சரியபடுத்தும் வியப்பான உண்மைகள் பற்றி காண்போம்.

1. கடல் குதிரை 

இந்த உலகில் வித்தியாசமான பண்பு கொண்ட உயிரினம் என்னவென்றால் அது இந்த கடல் குதிரைதான் . எந்த அளவுக்கு வித்தியாசமானது என்றால் இந்த உலகில் அனைத்து உயிரினத்திலும் பெண்கள்தான் கருத்தரிக்கும் பண்புகொண்டது ஆனால் இந்த கடல் குதிரையானது வித்தியாசமாக ஆண் இனம்தான் கருத்தரிக்கும்,

2. பழைய முட்டை

 

நீங்கள் கடைகளில் வாங்ககூடிய முட்டை பழைய முட்டையா இல்லை புதியதா என்பதை கண்டறிய உங்களுக்கு இந்த முறை பயன்படலாம் . வாங்கிய முட்டை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் போடும்பொழுது அந்த முட்டை மிதந்தால் அது பழைய முட்டை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

3. உலகின் விலையுயர்ந்த சீஸ்

இந்த உலகின் விலையுயர்ந்த சீஸ் ஆனது கழுதையின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது உங்களை திகைக்க வைக்கலாம்.

4. எகிப்தியர்களின் செல்ல பிராணிகள்

 

பண்டைய நாகரிகங்களில் மிகவும் பிரபலமான நாகரிகம் இந்த எகிப்திய நாகரிகம் எனலாம் ,அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த எகிப்திய மக்கள் செல்ல பிராணிகளாக சிறுத்தைகளை வளர்த்து வந்தனர் என்பதை உங்களை வியப்பில் ஆழ்த்தலாம்.

5. துபாயில் உள்ள வழக்கம்

 
 

நாம் ஒருவரை காணும் பொழுது அவரை வரவேற்கும் விதமாக அவருக்கு கை கொடுப்பது மற்றும் கட்டி அனைப்பது வழக்கம் ஆனால் அரபு நாடுகளில் அப்படியில்லை அதற்கு மாறாக அவர்கள் மூக்குகளை பயன்படுத்துகின்றனர் ஆம் அவர்கள் கை குளுக்குவதற்கு பதிலாக மூக்குகளை குளுக்குகின்றன எனலாம்.

 

6. யாணைகளுக்கு அழகு நிலையம்

 

இந்த உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் யாணைகளுக்கு அழகு நிலையம் இருக்கும் ஒரே நம் நாடு இந்தியாதான். இந்தியாவில் கேரளாவில் இருக்கும் திருவணந்தபுரத்தில் இந்த அழகு நிலையம் அமைந்துள்ளது.

   

 7. வாழைபழம் ஒரு பழமா

 

வாழைமரம் நாம் நினைப்பது போல் ஒரு மரமல்ல அது மிகப்பெரிய செடி எனலாம் எனவே அதிலிருந்து வரக்கூடிய வாழைப்பழமும் ஒரு பழமல்ல அது பெர்ரி இனமாகும்.

8. நண்ணீரின் அளவு

 

இந்த உலகில் இருக்கும் நண்ணீரில் கிட்டதட்ட 69% நீரானது பனிகட்டிகளில்தான் உள்ளது.

9.கொசுக்கள்

mosquitoes
 

இந்த உலகில் இருக்கும் அனைத்து கொசுக்களும் மனிதர்களை கடிப்பதில்லை குறிப்பாக ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது ஏனெனில் அவற்றிற்கு அந்த இரத்த உறிஞ்சிகளே கிடையாது . பெண் கொசுக்கள் மட்டும்தான் மனிதர்களை குடிக்கும் ஏனெனில் அவை முட்டையிடுவதற்கு புரதம் தேவை அந்த புரதத்தை நமது இரத்ததில் இருந்து எடுத்துக்கொள்கிறது.

10.விண்வெளி உடை

 

விண்வெளியில் ஒரு மனிதன் விண்வெளி உடை இல்லாமல் கிட்டதட்ட 15 நொடிகள் உயிர்வாழ முடியும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

 
                                                                 நன்றி!