![](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/diamond-1475978_1280-300x169.png)
வணக்கம் இந்த பதிவில் உலகின் விலையுயர்ந்த 10 பொருட்கள் பற்றி காண்போம்.
விலையுயர்ந்த புகைபடம்
![expensive photograph](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/829178374.jpg-300x188.webp)
இந்த புகைப்படம் 1999 ஆம் ஆண்டு ஜெர்மன் காட்சி கலைஞர் ஆண்ட்ரியாஸ் குர்ஸ்கியால் எடுக்கபட்டது , இது இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த புகைப்படமாகும். கிட்டதட்ட 4.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இது விலைபொகியுள்ளது.
விலையுயர்ந்தவரைபடம்
![expensive painting](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/salvator-mundi-1-1-300x200.jpg)
சால்வடார் முன்டி லியனர் டோ டாவின்சியின் அற்புதமான படைப்புகளில் ஒன்று இது 2017-ஆம் 450.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைபோகி உலகின் விலையுயர்ந்த ஓவிய மற்றும் கலை வடிவமாக திகழ்கிறது.
விலையுயர்;ந்த இறகு
![expensive feather](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/6a960d20a34a0a8f99a725acf8a813fe-300x200.jpg)
நியூசிலாந்து ஆட்டில் வாழ்ந்து அழிந்த ஹூயா பறவையின் இறகுதான் உலகின் விலையுயர்ந்த இறகாக கருதப்படுகிறது.
உலகின் விலையுயர்ந்த கார்
![expensive car](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/1962-ferrari-250-gto-auction-main-image-300x200.jpg)
FERRRAI காரின் பழைய GTO மாடல் கார் ஆனது 350 கோடி ரூபாய்க்கு ஏலத்தல் விப்கபட்டது இதுவே இன்றுவரை உலகில் இருக்கும் விலையுயர்ந்த பழைய காராக கருதப்படுகிறது.
விலையுயர்ந்த கப்பல்
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/5da73eefcc4a0a6888524177-300x225.jpg)
இந்த படகு 100,000 கிலோ தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் பூசப்பட்டுள்ளது, மேலும் பண்டைய கால உயிரினமான டைனோசரின் டி-ரெக்ஸின் எலும்பால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் 18 காரட் வைரத்தால் செய்யப்பட்ட ஒயின் கண்ணாடிகள் போன்ற பிற ஆடம்பரங்களையும் கொண்டுள்ளது. 2011 இல் இது போலியானது என்று சில தகவல்கள் வெளிவந்தன, இருப்பினும், இந்த படகு 2014 இல் மீண்டும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்றுவரை உலகின் ஆடபம்பரமான விலையுயர்ந்த சொகுசு கப்பலாக இது உள்ளது.
விலையுயர்ந்த வீடு
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/934073-antilia-mumbaijpg-300x169.jpg)
நம் நாடு இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான, இந்த 34-அடுக்குமாடி வீடு 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் 3 ஹெலிபேடுகள் மற்றும் 160 கார்கள் நிறுத்த போதுமான அளவு இடம் உள்ளது. இதுதான் உலகின் விலையுயருந்த வீடாக கருதப்படுகிறது.
பிங்க் டைமண்டு
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/image-1-300x188.jpg)
நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டியில் ஏலம் விடப்பட்டபோது இந்த 14 காரட் இளஞ்சிவப்பு வைரம் 23 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது.
விலையுயர்ந்த படுக்கை
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/images-5.jpg)
இந்த விலையுயர்ந்த படுக்கையானது மற்றவைகளில் இருந்து சற்று மாறுபட்டது . இந்த படுக்கை மிதக்கும் தன்மை கொண்டது . இந்த படுக்கை காந்த விலக்கு விசை காரணமாக அந்தரத்தில் மிதக்கிறது. இதில் தூங்கினால் வானில் பறப்பதுபோல் இருக்குமென்றுகூட கூறுகிறார்கள். இந்த படுக்கை தரையில் இருந்து 1.2 அடி உயரத்தில் மிதக்கிறது, இது 2000 பவுண்டுகள் எடை வரை தாங்கும் தன்மை கொண்டது.
விலையுயர்ந்த கடிகாரம்
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/download-8.jpg)
இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த கடிகாரம் மற்றொரு கிராஃப் டயமண்ட்ஸ் உருவாக்கம் ஆகும். இந்த கடிகாரத்தின் விலை மட்டும் கிட்டதட்ட 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கோஹினூர் வைரம்
![](https://www.10factstamil.com/wp-content/uploads/2021/10/Tamil_News_large_2125395-300x207.jpg)
.இங்கிலாந்து ராணியிடம் உள்ள கிரிடத்தில் இருக்கும் கோஹினூர் வைரம் ஒரு பல்லியன் டாலர் வரை விலை போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் விலையுயர்ந்த வைரங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
நன்றி!