இதுவரை கேள்வியே படாத ஆச்சரியமூட்டும் பத்து தகவல்கள் top 10 amazing random facts in tamil

          கேள்வியே படாத பத்து உண்மைகள்

வணக்கம்! இன்றைய பதிவில் நீங்கள் இதுவரை கேள்வியேபடாத சில ஆச்சரியமான உண்மைகளை பற்றி காண்போம்.

சிலிண்டர்களுக்கு மணம் உண்டா

random facts tamil

நாம் அனைவரும் நினைத்திருப்போம் LPG சிலிண்டர்களுக்கு இயற்கையாகவே மணம் உண்டு என்று ஆனால் அது உண்மை இல்லை , LPG சிலிண்டர்களுக்கு உண்மையில் மணம் என்பதே கிடையாது , சில சமயங்களில் சிலிண்டரில் இருந்து வரும் வாயுவை கண்டறிய இந்த நறுமணம் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

11-நாட்கள்  தூங்காத மனிதன்

11 days without sleep

நம் மனித வாழ்நாளில் பாதிக்கும் மேற்பட்ட வருடங்களை நாம் தூக்கத்திற்காக மட்டுமே செலவிடுகிறோம். ஏனெனில் தூக்கம் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும் இருப்பினும் தற்போதைய சூழலில் ஒரு சிலர் இரண்டு மூன்று நாட்கள் தூங்காமல் வேலை செய்கின்றனர். ஆனால் நீங்கள் மேலே படத்தில் காணும் ரேன்டி கார்ட்னர் என்பவர் இடைவிடாமல் 11-நாட்கள் தூங்காமல் இருந்து கின்னஸ்  சாதனை படைத்துள்ளார். இதுதான் ஒரு மனிதர் நீண்ட காலம் தூங்கமல் இருந்ததாக குறிப்பிடபட்டுள்ளது.

பெண்களின் இதயம்

women heart beat
சாதாரணமாக ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயமானது ஒரு நிமிடத்திற்கு வேகமாக துடிக்கும் திறன் பெற்றது என ஆய்வாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

உடலில் இருக்கும் பாக்டிரியாவின் எவ்வளவு தெரியுமா

bacteria

நமது மனித உடலில் மட்டும் கோடிக்கணக்கான  பாக்டிரியாக்கள் உள்ளன என்பது நாம் அறிந்ததே ஆனால் அவற்றின் எடை எவ்வளவு தெரியுமா . இதை கேட்டவுடன் தலைசுற்றினாலும் ஆச்சரியபட்ட ஒன்றுமில்லை நமது உடலில் மட்டும் பாக்டிரியாக்களின் எடை 3 முதல் 5 கிலோ வரை இருக்குமாம் கண்டிப்பாக இது உங்களை ஆச்சரியபடுத்தும்.

ஆண் கருவுற்று குழந்தையா

இதுவரை நாம் நினைத்திருப்போம் ஒரு பெண்ணால் மட்டும்தான் கருவுற்று ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்று ஆனால் இதனை அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் பீட்டி என்பவர் முறியடித்துள்ளார். ஆம் இவர் ஒரு ஆணாக இருந்து கருவுற்று ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார் இவர்தான் உலகில் முதல் முறையாக ஒரு ஆணாக இருந்து குழந்தையை பெற்றெடுத்தவர்.

நாய் உச்சா போனதால் மிகப்பெரிய ஆபத்து நீங்கியது

juliana dog ww2

இரண்டாம் உலகப்போரின் போது உலகில் ஆங்காங்கே குண்டு மழைகள் பொழியபட்டன அப்படி 1941-ஆம் ஆண்டு குண்டு மழை பொழியும் போது ஜூலியான என்ற நாய் இருந்த வீட்டில் ஒரு  குண்டு விழுந்துள்ளது . அது குண்டு என்று தெரியாமல் இந்த ஜூலியானா நாய் அதன்மேலே அசால்டாக உச்சா பெய்துள்ளது இந்த நாய் செய்த இந்த செயலினால் அந்த குண்டு எதிர்பாராத விதமாக செயலிழந்துள்ளது. இப்படி இந்த நாய்செய்த செயலுக்காக BLUE CROSS மெடல் பரிசாக பெற்றது. ஒரு நாயின் உச்சா ஒரு ஊரையே காப்பற்றியுள்ளது என்பது நம்மை ஆச்சரியபடத்தான் வைக்கிறது.

குடிமகனாக மாறிய பன்றி 

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பன்றி ஒன்று அதனை வளர்த்த உரிமையாளர் வண்டியில் வைத்திருந்த 18 பீர் கேன்களை ராவாக குடித்துவிட்டு அங்கிருந்து பசுக்களுடன் சண்டைக்கு சென்று அந்த இடத்தையே ரனகலம் ஆக்கியுள்ளது. இதிலிருந்து நாம் அறிவது குடி மனிதருக்கு மட்டும் கேடு அல்ல விலங்குகளுக்கும் தான் என்பது உண்மை.

ரோபோவை குடிமகளாக்கிய நாடு

2013-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் உருவாக்கபட்ட இந்த ஃசோபியா ரோபோட் ஆனது  உலகில் மனிதர்கள் மட்டுமே குடிரிமை பெற முடியும் என்ற சட்டத்தை தகர்தெரிந்தது 2017-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் அரசாங்கம் அந்த நாட்டின் குடுயிரிமையை சோபியா ரோபோட்டுக்கு வழங்கியது.

உலகின் மிகச்சிறிய மாடு

இதுதான உலகின் மிகச்சிறிய மாடு  இதன் உயரம் வெறும் 2 அடி மட்டுமே இந்த மாடு வங்கதேசத்தில் உள்ளது இந்த மாட்டின் ஒட்டுமொத்த எடை என்பது வெறும் 26  கிலோ மட்டுமே இந்த பசுதான் உலகின் மிகச்சிறிய பசுவாக இன்றுவரை உள்ளது.

DNA-வின் சக்தி

மனிதர்களாகிய நாம் அனைவருக்கும் பொதுவாக இருக்ககூடியவைகளில் இந்த டி.என்.ஏ-வும் ஒன்று  இதனுடைய சக்தி என்பது எண்ணிலடங்காதது , இந்த உலகில் இருக்கும் அனைத்து சூப்பர் கம்்யூட்டர்களின் மெமரியும் ஒரு டி என் ஏ-வுக்கு சமம் அதுமட்டுமல்லாமல் ஒரு டி.என்.ஏ-வை நூல் போல் இழுத்தால் இதன் தொலைவு 10 பில்லியன் மைல்கள் வரும் இது நமது பூமியில் இருந்து புளுட்டோவுக்கு செல்லும் தூரம், அந்த அளவுக்கு சிக்கலான அமைப்பையும் மிகவும் சக்திவாய்ந்த கம்ப்யூட்டராகவும் நமது டி.என். ஏ.உள்ளது.
 
கண்டிப்பாக இந்த ஒரு பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்தமானக இருந்திருக்கும் என நம்புகிறேன்  நன்றி மக்களே!