10 amazing facts about earth
நம் உலகம் அதாவது பூமி தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன இந்த இடைபட்ட காலத்தில் பல்வேறு வகையான உயிர்கள் தோன்றி மறைந்துள்ளன.பல சகாப்தங்களை கடந்தும் நம் பூமியானது பிரபஞ்சத்தின் உயிர்களின் பிறப்பிடமாக இன்றுவரை இருந்து வருகிறது. இதுபோன்ற நம் வாழும் பூமியை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவலை பற்றி இந்த பதிவில் காண்போம்.
10.பூமியின் காந்தவிசை
நம் பூமியில் ஈர்ப்பு விசை என்பது அனைத்து இடத்திலும் ஒரே அளவில் இருக்காது இடத்திற்கேற்ப மாறுபடும் எடுத்துகாட்டாக கனடா நாட்டில் உள்ள ஹட்ஸன் பே என்ற இடம் வின்வெளி போன்று ஈர்ப்பு விசை மிக்குறைவாக காணப்படுகிறது இதற்கான காரணம் அங்குள்ள பனிக்கட்டிகள் உருகியதால் பூமியின் நிறையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
9.பூமியின் பெயர்காரணம்
நமது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் கிரேக்க முறைப்படி கடவுளின் பெயர் சூட்டபட்டுள்ளது நமது பூமியை தவிர அப்படியென்றால் பூமி என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்வி எழும்,இதற்கான பதில் முதன் முதலில் ஜெர்மன் மொழியில் யார் என்று கூறப்படுகிறது இதன் அர்த்தம் ஒரு மிகபெரிய மண் நிறைந்த நிலம் என்பது பொருளாகும்.
8. பூமியின் மிகப்பெரிய மலைத்தொடர்
இந்த உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் மற்றும் மிகப்பெரிய சிகரம் இமயமலையின் எவரெஸ்டு என்று கூறுவோம் உண்மையில் இதுதான் மிகபெரிய மலைதொடரா என்று கேட்டால் கிடையாது உலகின் மிகபெரிய மலைத்தொடர் மோனாகியா இது ஹவாய் தீவில் காணப்படுகிறது இந்த மலைத்தொடரின் உயரம் 13,000 அடி எவரெஸ்ட் உயரம் கடல் மட்டத்தின் உயரம் 29,000 அடி அப்பெடியென்றால் எவரெஸ்ட் தானே உயரம் என்று கேட்பீர்கள், இந்த மோனா கியாவின் பாதி மலைபகுதி கடலுக்கு அடியில் உள்ளது இதனுடைய மொத்த உயரம் 33,000 அடி ஆகும். நாம் அனைவரும் கடல் மட்டத்திலிருந்து உயரத்தை கணக்கிடுவதால் எவரெஸ்ட் இன்றுவரை உயராமாக உள்ளது.
7. பூமியின் ஒரு வருடம்
ஒரு வருடத்தில் 365 நாட்கள் என்பது நாம் அறிந்ததே ஆனால் துல்லியமாக கூற வேண்டும் என்றால் 365.2564 நாட்கள் ஆகும் இந்த 2564 என்பதுதான் நான்கு வருடத்திற்கு ஒரு முறை லீப் ஆண்டாக பிப்ரவரி 29 என்ற ஒரு நாளாக மாறுகிறது. இதானால் தான் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 வருகிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
6. பூமியின் தனிதன்மை
நமது சூரிய குடும்பத்திலேயே நீர் ,நிலம், காற்று இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த கிரகம் நம் பூமி மட்டுமே மத்த கிரகங்களில் இவை மூன்றும் ஒன்றாக காணப்படுவதில்லை.
5. பூமி உண்மையில் உருண்டையா
நாம் படத்தில் காண்பது போல் பூமி ஒரு முழுமையான கோள வடிவில் இருக்காது பூமி ஒரு மிகப்பெரிய பாறை போன்றே காணப்படும் ஒரு பாறை எப்படி முழுமையான கோள வடிவில இருக்கதோ அதே போன்றுதான் நம் பூமியும், விண்வெளியில் காணும்பொழுது கோள வடிவில் தெரிய காரணம் நம் பூமியை சுற்றி ஓசோன் படலம் உள்ளதால் ஒரு முழுமையான வடிவமாக காட்சியளிக்கும்.
4. பூமியின் குப்பை
நமது பூமியில் உள்ள குப்பைகளை விட பூமிக்கு வெளியே உள்ள குப்பைகள் அதிகம் எப்படி பூமிக்கு வெளிக்கு வெளியே குப்பை என்று கேட்டால் இதற்கு காரணம் செயற்கைகோள்கள் என்று கூறலாம் இந்த செயற்கைகோள் இயக்கம் நின்றவுடன் அப்படியே வின்வெளியில் குப்பையாக மாறிவிடும் இதைதான் SPACE DEBRIS என்று கூறுகின்றனர் . இவை நமது பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கபட்டு பூமியை சுற்றி வருகிறது. இப்படி பல்லாயிரகணக்கான குப்பைகள் விண்வெளியில் சுற்றுகின்றன.
3. பூமியில் உள்ள நீர்
இந்த உலகில் இருக்க கூடிய தண்ணீரில் வெறும் 3% மட்டும்தான் மனிதர்கள் பயன்படுத்தகூடிய நீராக உள்ளது மற்றவை அனைத்தும்
கடல் நீராகவே உள்ளது.இந்த நீர் எப்படி பூமிக்கு வந்தது என்பதும் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.
2.பூமியின் பூகம்பம்
நம் பூமியில் மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வுதான் இந்த பூகம்பம் ஒவ்வொரு வருடமும் பூமியில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. இது ஏற்பட காரணம் பூமியின் நில தட்டுகளின் இயக்கம் ஆகும்.அதாவது நம் தரைப்பகுதியில் இருந்து கீழே காணப்படும் கண்டத்தட்டுகள் எப்பொழுதும் இயக்கத்திலேயே இருக்கும் இவற்றில் எப்பொழுது பெரிதாக மாற்றம் ஏற்படுகிறதோ அப்பபொழுதுதான் மிகப்பெரிய பூகம்பம் சுனாமிகள் ஏற்படுகிறது.
1. பூமியில் மட்டும்தான் உயிர்கள் உள்ளதா
இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கபட்ட கிரகங்களில் உயிர்கள் இருக்ககூடிய ஒரு கிரகத்தை கூட இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை உண்மையில் உயிர்கள் வாழக்கூடிய கிரகங்கள் உள்ளனவா என்பதும் எவருக்கும் தெரியாது . ஆனால் ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இந்த பிரபஞ்சத்தில் நம் பூமியை போன்றே பல்லாயிரகணக்கான கிரகங்கள் இருக்க வாய்ப்புள்ளது அப்படி இருக்கூடிய கிரகங்களில்
ஏலியன்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் ஆனால் நாம் அவர்களை கண்டுபிடிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்
நன்றி!!