TIME TRAVEL காலபயணம் சாத்தியமா
நம் வாழ்க்கையில் பல பயணம் செய்துள்ளோம். கார்,பேருந்து,சைக்கிள் என அனைத்திலும் பயணம் செய்துள்ளோம் ஆனல் நம்மால் கால பயணம் (TIME TARVEL )என்பது சாத்தியமல்ல . இந்த கால பயணம் ஏன் செய்ய முடியவில்லை இது ஏன் செயல்முறையாக செய்ய முடியவில்லை என்பதற்கு சரியான காரணம் இல்லை.இந்த காலபயணம் என்பது நிகழ் காலத்திலிருந்து எதிர்காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ ஒருவர்செல்வதையே காலபயணம் என்கிறார்கள்.
காலபயணம் என்பது ஒளியின் வேகத்தில் சென்று கடந்த காலத்தையோ அல்லது எதிர்காலத்திற்கு செல்வது என்பது இதன் விளக்கமாகும்.
மேலும் படிக்க : பெறுவெடிப்பு கொள்கை(BIG BANG THEORY) பற்றிய தகவல்கள்
காலபயணம் (TIME TRAVEL EXPLANATION)
காலபயணம் என்பதை சில அறிஞர்கள் எழுத்து வடிவமாக நிரூபித்தாலும் இதனை ஒரு செயல்முறையாக நிரூபிக்க முடியவில்லை. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு(GENERAL RELATIVITY THEORY )படி நம் கிரகத்தில் ஒரு காலமாக இருந்தால் மற்றோரு கிரகத்தில் வேறோரு காலமாக இருக்கும் அதாவது நீங்கள் 15 வயதில் பூமியில் இருந்து வெளியேறி விண்வெளியில் 5 வருடம் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு வரும்போது உங்ககளுக்கு வயது 20-ஆக இருக்கலாம் ஆனால் உங்களன் நண்பர் வயது 60-ஆகி விடும்.
காலம் என்பது சார்பியல் சார்ந்தது. எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒளியின் வேகத்தில் செல்லும் போது நம்மால் கால பயணம்((TIME TRAVEL) செய்ய முடியும். ஒளியின் வேகத்தையும் தாண்டி வேகமாக சென்றால் நம்மால் காலத்தின பின்னால் செல்ல முடியும். ஒளியின் வேகத்தில் செல்லும் போது நம்மால் காலபயணம் செய்து எதிர்காலத்திற்கு செல்லலாம். இவ்வாறே காலபயணம் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.
ஹாக்கின்ஸ் கூற்று
கால பயணம்(time travel) செய்யமுடியும் என்று ஒரு சில அறிஞர்கள் சொன்னாலும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்ற விஞ்ஞானி கால பயணம் சாத்தியமில்லை என்று கூறுகிறார். அதாவது காலபயணம் என்பது எதிர்காலத்திற்கு செல்லலாம் தவிர கடந்த காலத்திற்கு செல்ல முடியாது என்று கூறியுள்ளார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஒளியின் வேகத்தில் சென்றால் தான் கால பயணம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார் ஆனால் மனிதரால் ஒளியின் வேகத்தில் செல்ல முடியாது. அதனால் தான் காலபயணம் செய்ய முடியாது. கனமான மனிதரை கால பயணம் செய்யவைக்க முடியாது ஆனால் ஒரு சிறிய துகளாக இருந்தால் கூட காலபயணம் செய்ய வைக்க முடியும். இந்த காரணத்தினாலேயே காலபயணம் செய்ய முடியாது என ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.
ஒளியின் வேகம்
நாம் ஒரு பொருளை பார்க்கிறோம் என்றால் அதற்கு முழு காரணம் ஒளியே .ஒளியினாலே எல்லாப் பொருள்களும் தெரிகிறது. நாம் ஒளியில் பயணம் செய்தால் பூமியின் நேரம் அண்ட வெளியின் நேரம் மாறுபடுவதால் அண்ட வெளியில் இருக்கும் போது நமது வயது குறைவாகவும் பூமியில் இருக்கும் போது அதிகமாகவும் இருக்கும். இதனால் பூமியில் 2 மடங்கு என்றால் அண்டவெளியில் 1 மடங்காக இருக்கும் அதாவது பூமியில் 10 வருடங்கள் என்பது விண்வெளியில் 5 வருடங்களே ஆகும். ஒளியின் வேகத்தில் சென்றால் காலபயணம்(time travel) செய்யலாம் ஆனால் மனிதரால் ஒளி வேகத்தில் செல்ல முடியாது என்ற காரணத்தினால் கால பயணம் என்பது ஒரு அசாத்தியமான ஒன்றாக உள்ளது.
black hole
பிளாக் கோல் என்பது பல நட்சத்திரங்களையும் பல சூரியனையும் கொண்டு தனக்குள் இழுத்துக்கொள்ளும். அதனையே பிளாக்கோள் ஆகும் அதனுடைய ஈர்ப்பு விசை பூமியைபோல 40 லட்ச மடங்கு அதிகம். ஒரு சிறிய ஒளியை கூட ஈர்த்து கொள்ளும். நம்மால் ஒளியால் பயணிக்க முடியாது என்ற காரணத்தால் பிளாக் கோள் மூலம் காலபயணம் செய்ய முடியும் என சில விஞ்ஞானி கூறுகிறார்கள். ஆனால் மனிதர்களால் பிளாக் கோள் மூலம் கால பயணம் செய்ய முடியாது. பிளாக் கோள்குள் செல்ல முடியாது.
ஐன்ஸ்டீன் கூற்று
உலகில் எல்லா இடங்களிலும் நேரம் என்பது ஒன்றுதான். ஆனால் மற்ற கிரகங்களிலிலோ அல்லது நட்சத்திரங்களிலோ நேரம் என்பது மாறுபடும் என்பதை சார்பியல் கோட்பாடு மூலம் விளக்கியுள்ளார் ஐன்ஸ்டீன் .பூமியில் இருக்கும் நேரமும் விண்வெளியில் இருக்கும் நேரமும் மாறுபடும் என்று கூறியுள்ளார்.
விண்வெளியில் ஒருவர் வாழ்கின்றார் என்றார் அவரின் வயது பூமியில் வாழ்வரின் ஒருவரின் வயதை விட குறைவாகவே இருக்கும் என்று கூறுகிறார்.இவ்வாறாக காலபயணம்(time travel) என்பது முன்னோக்கி மட்டுமே செல்ல முடியும். பின்னோக்கி செல்ல முடியாது. என்றும் கூறுகிறார்கள். இவ்வாறாக இவர் எழுதிய சார்பியல் கோட்பாடு மூலம் காலபயணம் செய்ய முடியும் என்றும் கூறுகிறார்கள். பூமியில் இருக்கும் போது நேரம் வேகமாக செல்லும் அதுவே நாம் விண்வெளியில் இருக்கும் போது நேரம் என்பது குறைவாகவே இருக்கும்.
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் விருந்து
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தனது புத்தகமான BRIEF ANSWERS TO THE BIG QUESTIONSஎன்ற புத்தகத்தில் பல விளக்கங்களை கொடுத்திருப்பார். அந்த புத்தகத்தில் தான் கால பயணம் பற்றி கூறியுள்ளார். இவர் ஏன் கால பயணம் விருந்து வைத்தார் அதாவது இவர் காலபயணத்தின் மூலம் இறந்த காலத்திற்கு செல்லமுடியாது என்று என்பதை நிரூபிக்க காலபயணம் விருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் Time Travellers welcome என்ற party வைத்தார். இந்த partyக்கு ஏற்பாடு செய்துவிட்டு அதற்காக காத்திருந்தார். இந்த partyயை யாருக்கும் சொல்லவில்லை இந்த party முடிந்த பிறகு ஒருநாள் கழித்து அந்த party ன் invitationஐ பத்திரிக்கைகளுக்கெல்லாம் வெளியிடுகிறார்.நான் ஏற்கனவே party வைத்து முடித்துவிட்டேன் அதறகான invitation என்று கூறுகிறார். அதன் பிறகு எல்லா பத்திரிக்கைகளுக்கெல்லாம் தெரிகிறது. இதனை 2009 ல் நிகழ்ந்தது
இந்த invitation ஐ எதிர்காலத்தில் யாராவது பார்த்திருந்தால் அந்த விருந்திற்கு சென்றிருக்கலாம். ஆனால் யாரும் வரவில்லை என்று கூறுகிறார் இதனால் காலபயணத்தின் மூலம் கடந்த காலத்திற்கு செல்ல முடியாது என்பதை நிரூபிக்கிறார்.
எனவே இவர் காலபயணம் எதிர்காலத்திற்கு மட்டுமே செல்ல முடியும் கடந்த காலத்திற்கு செல்ல முடியாது என நிரூபித்தார்.
இவ்வாறாக காலபயணம் என்பதற்கு ஒரு தெளிவான பதில்கள் இல்லை எனவே காலபயணம் நம்முடைய தற்போதைய தொழில்நுட்பங்களில் வைத்துகோண்டு செய்ய முடியாது , எனவே காலபயணம் தற்போது வரை சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது .