
இன்றைய நாளில் நோய்களை விட நோய்களின் பெயர்கள் தான் அதிக பயத்தை உண்டாக்குகிறது. அதில் ஒன்றுதான் Stiff person syndrome கடினமான நபர் நோய்க்குறி.
உடல் சிறிது நேரம் குளிரில் இருந்தால் விறைந்து போகலாம். அது போல் தன் இந்த நோய் வந்தால் அடிக்கடி உடம்பு விறைந்து போகலாம்.அதை தொடர்ந்து உடல் முழுவதும் விறைந்து போகும். இந்த மோசமான நோய் பத்தி இந்த பத்தியில் பாக்கலாம்.
நோயின் அறிகுறி

இந்த நோயின் அறிகுறியா கண்டு பிடிக்க பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் ஆகும். இந்த நோயா சரியா கவனிக்காமல் போனால் மிகவும் மோசமான உடல் நிலைக்கு தள்ள படுவர்கள்.
இந்த நோய் உள்ள மக்கள் முதுகுத்தண்டு மற்றும் வயிற்று தசை முதலில் கடினமானதாக இருக்கும்.
வலி,தசை விறைப்பு முதல் அறிகுறியாகும்.
ஆரம்பத்தில் விறைப்பு வந்து வந்து போகும். இறுதியில் மாறாமல் அப்படியே இருக்கும்.
கடின நபர் நோய் என்பது உடலின் ஒரு பகுதியை உள்ளடக்கி உடல் முழுவதும் பரவச் செய்யும் கூடிய நோய் ஆகும்.
கடினமான நபர் நோய் ஏன் உண்டாகிறது..

கடினமான நபர் நோய் இந்தக் காரணத்தினால் தான் வருகிறது என்று ஆய்வாளர்களால் இன்று வரை உறுதியாக கூற முடியவில்லை.
இதை தடுக்கும் முறை உண்டு என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
கடினமான நபர் நோய் தடுக்கும் முறை
உங்களுக்கு வயிற்றுப் பகுதி முதுகு தண்டு பகுதி கடுமையான வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
உடலில் கை கால்கள் அடிக்கடி விறைப்பு தன்மை ஏற்படுதல் போன்றவை இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும்.
கடினமான நபர் நோய் யாருக்கு வரும்..?

இந்த நோயைக் கண்டு யாரும் அச்சம் பட வேண்டாம் இது மில்லியன் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் வரும்.
ஆண்களை விட பெண்களுக்கு இந்த நோய் இரண்டு மடங்கு வருவதாக வாய்ப்பு உண்டு.
இந்த நோய் எந்த வயதில் கூட ஏற்படலாம் 30 முதல் 60 வயதிற்குள் உண்டாகலாம்.
புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
நோயின் தாக்கம்

கடினமான நபர் நோய் ஆரம்ப நிலையிலே மருத்துவரிடம் பரிசோதனை எடுத்தால் இதை சரி செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. காலதாமதம் ஆனால் உடல் மோசமான நிலைய அடையும்.
கடினமான நபர் நோய் நரம்பியல் சம்பந்தப்பட்ட மூளையும் முதுகெலும்பையும் பாதிக்கும்.
இதனால் நடக்க முடியாத அளவிற்கு கூட உடல்நிலை மோசமாக மாறலாம்.
இந்த நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு அறிகுறி நிர்வாகிக்க மற்றும் வாழ்க்கை தரத்தை பராமரிக்க பல ஆண்டுகள் சிகிச்சை தேவைப்படும்.
இந்த பத்தியில் கடினமான நபர் நோயை பற்றி அறிந்தோம் இந்த பத்தில் இருக்கும் ஏதாவது தாக்கம் உங்களிடம் இருந்தால் மருத்துவரிடம் அணுக வேண்டும். அந்த மில்லியனில் ஒரு நபராக நீங்க கூட இருக்கலாம்.