SQUID GAME சீரிஸின் கதை
|
source:netflix |
இந்த கொரோனா வந்த பிறகு பல துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது அப்படி கொரோனா தலைகீழாக புரட்டிபோட்ட ஒரு துறைதான் திரைப்படதுறை, பெரும்பாலான மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து திரைப்படங்களை பார்க்க விரும்புகின்றனர் அப்படி திரைப்பட துறையில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த ஆன்லைனில் வெளியாகும் தொடர்கள் இவைகள் முன்பே இருந்தாலும் சமீப காலமாக மக்களிடையே இவை பெறும் வரவேற்பை பெற்றன அப்படி கேம் ஆஃப் துரோன்ஸ், மணி கெஸ்ட் வரிசையில் தற்போது கடந்த சில நாட்களில் மட்டும் நெட்ஃபிளிக்ஸில் அதிக மக்களால் பார்க்கபட்ட ஒரு தொடராக இந்த தென்கொரிய SQUID GAME உள்ளது. அப்படி இந்த தொடரில் என்ன கூறியுள்ளார்கள் இந்த தொடரில் கூறிய வாழ்க்கை பற்றிய கருத்துகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணாலாம்.
SQUID GAME தொடர்
இந்த SQUID GAME என்ற தென்கொரிய தொடர் சென்ற செப்டம்பர் மாதம் 17 -ஆம் தேதி முதல் தொடர் வெளிவந்தது, இந்த தொடரின் முதல் பகுதியே மக்களிடையே மிக பிரபலமடைந்தது இதற்கான முக்கிய காரணம் அதன் கதைகளம் எனலாம். இந்த தொடரை இயக்கிய Hwang Dong-Hyuk என்பவர் இந்த SQUID GAME தொடரை திரில்லர்,டிராமா,சர்வைவல் என முப்பரிணாமங்களில் எடுத்து அசத்தியுள்ளார்.
SQUID GAME கதை விளக்கம்
இந்த squid game தொடர் கொரியாவில் வாழும் நம்மில் பலரை போன்ற பாமர மக்கள் வறுமையை ஒரு பணக்கார கூட்டம் அவர்களின் இன்பத்தற்காக , இவர்களை ஒரு போட்டியை விளையாடவைத்து அவர்களை கொல்கிறது. அந்த போட்டியில் பங்கேற்கும் மக்களும் இறந்தால் கூட பரவாயில்லை ஆனால் வறுமையை போக்க வேண்டும் என்பதற்காக அந்த போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
இந்த போட்டியில் மொத்தம் 456 பேர் கலந்துகொள்கின்றனர் இறுதியாக ஒருவர் மட்டுமே வெற்றிபெறுவார் அப்படி வெற்றி பெற்ற நபருக்கு 45.6 பில்லியன் கொரிய மதிப்பு கொண்ட ரூபாய் பணம் அவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் மீதமிருக்கும் 455 பேரும் கொல்லபடுவர். ஒவ்வொரு போட்டியாளர்கள் இறக்கும்பொழுதும் பணத்தொகை அதிகரித்து கொண்டே இருக்கும்.
இந்த போட்டியில் முதலில் கலந்து கொள்ளும்போது அவர்களுக்கு தெரியாது அந்த போட்டியில் தோற்றால் அவர்கள் இறந்துவிடுவார்கள். இந்த போட்டியில் மொத்தம் 8 சுற்றுக்கள் இருக்கும் அவை அனைத்தையும் கடந்து யார் வெற்றிபெறுகிறாரோ அவருக்கு மட்டுமே அந்த பணத்தோகை கிடைக்கும் இதில் குறிப்பிடதகுந்த விடயம் என்னவென்றால் இந்த போட்டிகள் அனைத்தும் நாம் சிறுவயதில் விளையாடிய போட்டிகள் ஆம் நீங்கள் நினைப்பதுபோல் அந்த சுற்றுகள் கடினமானதாக இருக்காது குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டுகளைதான் இந்த போட்டியாளர்களும் அங்கு விளையாடுகிறார்கள்.
1. முதல் சுற்று RED GREEN LIGHT கண்ணாம்பூச்சி
2. இரண்டாவது HELL
3. மூன்றாவது THE MAN WITH THE UMBRELLA
4.STICK TO THE TEAM
5 . A FAIR WORLD
இப்படி மேலே குறிப்பிட்ட சிறுவர்கள் விளையாடக்கூடிய அந்த விளையாட்டுகளைதான் இந்த போட்டியாளர்களும் விளையாடுகிறார்கள் முதல் சுற்று நடக்கும் வரை அவர்களுக்கே தெரியாது தோல்வியடைந்தவர்கள் இறந்துவிடுவார்கள் என்று. முதல் சுற்றில் கலந்துகொண்ட பாதிக்கும் மேற்பட்டோர் இறக்கிறாரகள் ,அதன்பிறகு இந்த போட்டியை விட்டு அந்த போட்டியாளர்கள் வெளியே செல்கின்றனர் ஆனால் அந்த போட்டியை விட வெளியுலகில் அவர்கள் வாழ்வது மிக கடினமாக அமைகிறது வறுமை கடன் போன்றவற்றால் கஷ்டபடுகிறார்கள்.
மீண்டும் போட்டியில் சேர அவர்களுக்கு அழைப்பு வருகிறது நீங்கள் நினைப்பது தவறு அவர்கள் அனைவரும் அந்த போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார்கள் ஏனென்றால் வெளியுலகில் இருந்து தினம் தினம் கஷ்டத்தை அனுபவிப்பதைவிட போட்டியில் வெற்றிபெற்றால் பணம் இல்லையென்றால் மரணம் என மனதை உறிபடுத்தி செல்கிறார்கள்.
இவ்வாறு கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கிடையே ஒற்றமையில்லாமல் பொறாமை மற்றும் சண்டை ஏற்பட்டு ஒருவரையொருவர் மிருகம் வேட்டையாடுவதுபோல் மாறி மாறி கொலை செய்து மிருகங்களாக மாறுகிறார்கள். இப்படி இந்த தொடரில் யார் இறுதியாக வெற்றிபெறுவார் என சுவாரஸ்யமாக நகர்ந்து செல்கிறது முழுமையான தொடரை காண கிளக் செய்யங்கள் .
SQUID GAME இயக்குநர்
இந்த SQUID GAME கதையை இயக்கியவர் HWNAG DONG-HYOUK என்ற நபர் பல குறும்படங்களை இயக்கிய இவர் 2007-ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு திரைப்படத்தை வெளியிட்டார் ஆனால் அத்திரைபடம் பெரிய அளவில் ஹிட்டாக வில்லை அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு மிஸ் கிராணி என்ற திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார் . இவரிடம் இந்த SQUID GAME கதையை எப்பொழுது எழுதினீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியபடுத்திய. அவர் குறும்படங்கள் எடுத்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே இந்த SQUID GAME கதையை எழுதிவிட்டதாகவும் சுமார் 10 வருடங்கள் பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை கூறியிருந்தாலும் அவர்கள் படமெடுக்க முன்வராததால் இவர் அதனை கைவிட்டார். அதன் பிறகு மிஸ் கிராணி படத்தின் வெற்றியின் காரணமாக மீண்டும் இந்த squid game தொடரை இயக்கி அதில் வெற்றியும் கண்டார் இதில் குறிப்பிட தகுந்த விடயம் என்னவென்றால் இந்த கதை எழுதும்போது அவரிடம் காசு இல்லாத காரணத்தினால் தன்னுடைய மடிக்கணினியை விற்று அன்றைய காலகட்டத்தை அவர் நடத்தியுள்ளார். இவரிடமிருந்து நாம் அறிவது மிகப்பெரிய வெற்றிகள் என்பது பல நிராகரிப்பின் வெளிப்பாடுதான்.
SQUID GAME கூறும் வாழ்க்கை பற்றிய கருத்துகள்
இந்த SQUID GAME தொடர் ஒரு அருமையான திரில்லர் தொடராக மட்டுமே இல்லாமல் மறைமுகமாக ஒரு சில வாழ்க்கை பற்றிய கருத்துகளையும் நம்மிடையே கூறுகிறது.
முதலாவது இந்த உலகில் பணத்திற்காகதான் அனைத்தும் நடத்தப்படுகிறது என்றும் ஒருவரிடம் பணம் இல்லையென்றால் அவர் சமூகத்தில் எப்படியெல்லாம் நடத்தபடுவார் என்றும் இயக்குநர் குறிப்பிட்டிருப்பார்.
இரண்டாவதாக இந்த போட்டியில் பங்கேற்ற அனைவரும் வெளியே சென்றுவிடுவார்கள் ஆனால் அவர்களின் வெளியுலக வாழ்க்கை என்பது எவ்வளவு கசப்பாக இருந்தால் தாம் இறக்கபோகிறோம் என்று தெரிந்தும் அந்த போட்டிக்கு மீண்டும் செல்வார்கள். இந்த இடத்தில் இயக்குநர் இதேபோன்று எத்தனை மக்கள் தினம் தினம் பசியாலும் வறுமையாலும் கடனாலும் கஷ்டமடைகிறார்கள் இது மரணத்தை விட கொடியது என்பதை நமக்கு எடுத்துறைக்கிறார்.
இதில் உள்ள பிரபலமான வசனம் ‘நீ உயிர் பிழைத்தற்கு கடவுளுக்கு நன்றி சொல்லாதே உன்னை காப்பறியவனுக்கு நன்றி சொல் ‘ என்ற வசனமும் அறிவுசார் சிந்தாந்தங்களை நமக்கு எடுத்துறைக்கிறது.
பணம் கொழுத்த பணமுதலைகளால் பாமர மக்களை அவர்களின் சுய லாபத்திற்காக ஒரு விளையாட்டு பொம்மைபோல் எப்படி விளையாடுவர்கள் என்பதையும் நம்மிடம் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக பணத்திற்காக அங்குள்ள போட்டியாளர்கள் அவர்களுக்குள்ளேயே மனிதாபிமானமின்றி ஒருவருக்கொருவர் கொலைசெய்துகொள்கின்றனர். பணம் என்பது ஒரு மனிதனின் அனைத்து நற்பண்புகளையும் மாற்றக்கூடியதாக அங்கு மாறும் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
நன்றிகள்!