சிவகார்த்திகேயன் போலீஸ் மீண்டும் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தனது 22 ஆவது படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சீதாராமம் படத்தின் கதாநாயகி மிர்ணாள் தாகூர் நடிக்க உள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இது சம்பந்தமான செய்திகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான காக்கி சட்டை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 7 வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்க இருக்கிறார். எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.