feynman technique
வணக்கம்! நாம் அனைவரும் தேர்வுக்காக படிக்கும்போது இந்த ஒரு விடயத்தை கவனித்திருப்போம் அது என்னவென்றால் நாம் ஒரு தலைப்பை படிப்போம் படிப்போம் படித்து கொண்டே இருப்போம் ஆனால் கடைசி வரை அது நமக்கு புரியாது இதற்காக நாம் நீண்ட நேரம் செலவிட்டாலும் நமக்கு புரிவதில்லை இதை எப்படி நாம் வேகமாக படிப்பது இதான் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என இப்பதிவில் காண்போம்.
ஃபெயின்மேன் டெக்னிக்
தலைப்புகளை தேர்ந்தெடுங்கள்
முதலில் நீங்கள் எதை படிக்க வேண்டும் என்பதற்கான தலைப்பை தேர்ந்தெடுங்கள் அதன்பிறகு அந்த தலைப்புகளை நோட்டில் குறித்து கொண்டு அதன்பிறகு படிக்க தொடங்குங்கள் இது உங்களின் படிப்பு சுமையை குறைக்கும்.
மற்றவர்களுக்கு கற்பித்தல்
தவறுகளை கண்டறியுங்கள்
நீங்கள் பேசும்போது கண்டிப்பாக தவறுகளை உணர்வீர்கள் அப்படி தவறு செய்த இடங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்யுங்கள். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் உங்களின் தவறுகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
எளிமையாக கூறுங்கள்
நீங்கள் கூறுகின்ற விஷயம் என்பது அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் கூற வேண்டும் அப்பொழுதுதான் அந்த ஒரு விடயம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் புரியும்.