வணக்கம்! நம்மில் பெரும்பாலானோருக்கு தற்போது இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தள்ளிப்போடுதல் (procrastination) என்று செல்லாமல் இது தான் நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு விசயம் என்று கூட சொல்லலாம் எப்படி இந்த procrastination- ஐ கையாள்வது அதுக்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
pomodoro technique
பெரும்பாலும் நம் சமூதாயத்தில் இருக்கூடிய தங்களுடைய வாழ்க்கை நிலையில் அடுத்தகட்டத்திற்கு செல்லாத முக்கிய காரணம் இந்த procrastination-என்று சொல்லாலாம் இப்படி நாம் அனைத்து வேலைகளையும் தள்ளிப்போடுவதால் நீங்கள் சோம்பேறியாக மாறுகிறீர்கள் இதனை போக்குவதற்காக உருவாக்க ஒரு முறைதான் இந்த pomodoro technique-எனலாம்.
இந்த முறையை 1980-களில் பிரான்சிஸ்கோ என்ற நபர் தனக்கு இந்த சோம்பல் ஏற்படும்போது அதனை சரிசெய்ய ஒரு தக்காளி வடிவத்தில் இருக்கும் ஒரு கடிகாரத்தை பயன்படுத்தி அந்த வேலையை வேகமாக செய்து முடிப்பார்.இந்த pomodoro-என்பதற்கு இத்தாலிய மொழியில் தக்காளி என்றுபொருள் இதன் மூலமாகதான் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது.இந்த முறையில் ஒரு வழிமுறைகளை அவர்கள் குறிப்பிடுகிறார்கள் அதனை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
நேரத்தை பிரித்துகொள்ளுங்கள்
இந்த pomodro technique-ல் குறிப்பிடும் முதல் முறை உங்களின் நேரத்தை பிரித்துக்கொள்வது இப்பொழுது நீங்கள் ஒரு வேலையை செய்யபோகிறீர்கள் அல்லது படிக்க செல்கிறார்கள் என்றால் அதனை நான்கு பகுதிகாளக பிரக்கவேண்டும் ஒவ்வொரு பகுதியும் 25 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
இடைவெளி முக்கியம்
இப்படி நேரத்தை பிரித்த பிறகு ஒவ்வொரு 25-நிமிடங்கள் முடிந்த பிறகும் ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த இடைவெளி ஒரு 5-நிமிடங்கள் இருக்க வேண்டும். இப்படி நீங்கள் ஒரு வேலையை பிரித்து இடைவெளி விட்டு செய்யும்போது அதில் ஏற்படக்கூடிய ஆர்வம் என்பது குறையாது.
கடைசியாக பெரிய இடைவேளை
சில சமயங்களில் உங்களின் வேலை என்பது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளலாம் அப்போது நீங்கள் நான்கு பகுதிகாளக பிரித்து வேலையை செய்தால் கூட அதனை முடிக்க முடியாது அப்போது நான்காவது முறை உங்கள் வேலே செய்த பிறகு ஒரு 15 நிமிட இடைவேளை எடுத்துகொள்வது மிக முக்கியமாகும் அதன் பிறகு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் இப்படி நீங்கள் பகுதிகளாக பிரித்தி இடைவெளி விட்டு ஒரு வேலையை செய்யும்பொழுது உங்களால் எளிதாக அந்த செயலை செய்ய வேண்டும்.
கவனம் முக்கியம்
இப்படி 25 நிமிடங்கள் நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அந்த 25 நிமிடமும் உங்களின் முழு கவனம் என்பது உங்கள் படிப்பின் மீது மட்டும்தான் இருக்க வேண்டும் இடையூறுகளாக இருக்கூடிய உங்களின் மொபைல்போன் மற்றும் டீவிகளை நீங்கள் ஒதுக்குவது அவசியம் இப்படி இந்த 25 நிமிடம் படித்த பிறகு உங்களின் மூளையானது சற்று சோர்வடைய தொடங்கும் அந்த வேளையில் இந்த ஒரு 5 நிமிட இடைவேளை என்பது உங்களின் மூளைக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
இப்படி ஒவ்வொரு 2 நிமிட பகுதிகள் முடிந்த பிறகும் இடைவெளியில் நீங்கள் மொபைல் மற்றும் டீவிகளை பார்க்காமல் வெளியில் சிறிது நேரம் நடிப்பது மற்றும் ஒரு காபி குடிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு மேலும் நல்ல பயனை அளிக்கும்.
இந்த முறையானது நம்முடைய சோம்பேறிதனத்தையும் மற்றும் எவ்வளவு மிகபெரிய வேலையாக இருந்தாலும் கூட மிக எளிதாக அதனை செய்ய உதவும் எனவே இந்த முறையை உங்களின் படிப்புகளிலும் வேலைகளில் பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பயனளிக்கும் . நன்றி!