உடல் வலிகளில் மிகவும் கொடுமையானது பல்வலி என்று சொல்லலாம், ஏனென்றால் அந்த அளவிற்கு இதனுடைய வலி கடுமையாக இருக்கும்.
பல்வலியால் கடுமையான அவஸ்தையை சந்திக்க கூடிய மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது.
இந்தப் பல் வலி வந்துவிட்டால் சரியாக சாப்பிட முடியாது, தூங்கவும் முடியாது, தலைவலியும் இதன்கூட சேர்ந்து விடும், கொடுமையான மரண அவஸ்தை வலி என்று சொல்லலாம்.
மேலும் சரியாக பேசக்கூட முடியாது,இத்தகைய பல பிரச்சினையைக் கொடுக்கும் பல் வலியை முற்றிலும் வீட்டில் இருந்துகொண்டே இயற்கையான முறையில் சரிசெய்துவிடலாம்.
பல் வலி குணமடைய ஆல்கஹால்
ஆல்கஹாலில் உள்ள திரவங்கள் பல் வலியை குறைக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது, எனவே சிறிதளவு பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைக்க வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் பல் வலி முற்றிலும் குணமாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
பல் வலி குணமடைய புதினா
அசைவ உணவுகள் மற்றும் சைவ உணவுகளில் அதிக அளவில் வாசனை மற்றும் சுவை கூட்டுவதற்கு புதினா இலைகள் பயன்படுத்தப்படுகிறது.
புதினா பல் வலி வந்தவுடன் குணமாக கூடியதாக இருக்கிறது, எனவே சிறிதளவு புதினாவை பல் வலியுள்ள இடத்தில் வைத்து நன்றாக மெல்ல வேண்டும்.
புதினாவில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் பல் வலியை உடனடியாக குணப்படுத்திவிடும்.
பல்வலி குணமாக கொய்யா இலை
கொய்யா இலையில் ஆண்டிமைக்ரோபியல் என்னும் மூலக்கூறுகள் அதிகமாக உள்ளது, இது பற்களில் ஏற்படும் அலர்ஜி மற்றும் நோய்களை குணப்படுத்தி விடும்.
எனவே பல் வலி ஏற்படும் பொழுது 3 அல்லது 4 கொய்யா இலைகளை எடுத்து வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும், இதன் மூலம் பல் வலி உடனடியாக பறந்தோடிவிடும்.
பல் வலி சரியாக இஞ்சி
பொதுவாக பல் வலி பிரச்சனை என்றால் அதிகமாக பயன்படுத்துவது இஞ்சி சாறை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் சுத்தமாகவும் மற்றும் பல்வலி குணமாகி விடும்.
பல் வலி சரியாக கிராம்பு
பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை சரிசெய்ய கிராம்பு ஒரு சிறந்த கை வைத்தியமாக விளங்குகிறது எனவே சொத்தை பல்லினால் ஏற்படும் வலியை குறைக்க.
இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கிராம்பை எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்து நன்றாக தூங்கவேண்டும்.