mystery of padmanabhaswamy temple doors
உலக புகழ்பெற்ற அனந்த பத்மநாபன் சுவாமி கோவில் கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மையபகுதியில் பாலங்காடு என்ற பகுதியில் உள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.இந்த கோவில் மிகவும் சிறப்பு பெற்றது எனலாமவ . இந்த கோவில் பார்ப்தற்கு மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். இந்த கோவிலானது விஸ்ணு பகவானுக்காக கட்டப்பட்டது.
கோவிலின் ரகசியம்
இந்த பத்மநாபன் கோவில் உலகில் இருக்கும் மர்மமான கோவில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது அதுமட்டுபல்லாமல் இந்த கோவில்தான் தற்போது உலகின் பணக்கார கோவிலாகவும் தற்போதுவரை உள்ளது. இந்த கோவில் 16 ம் நூற்றாண்டில் கட்டப்ட்டுள்ளது என எழுத்து வடிவில் நிருபிக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த கோவில் அதைவி மிகவும் பழமையான கோவிலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது மாகாபாரத காலத்திலிருந்தும் அதற்கு முன்பிலிருந்தே இந்த கோவில் இருந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது. இந்த கோவிலை அரச குடும்பம் தான் இன்று வரை பராமரித்து வருகிறார்கள்.
இந்த கோவிலில் 6 ரகசிய கதவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆறு அறைகளும் ஆனந்த சுவாமி இருக்கும் கற்ப கிரகத்தில் இருந்து 20 அடி ஆழத்தில் உள்ளது. இந்த கதவுகளுக்கு A B C D E F என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மூன்று அறைகள் திறக்கப்பட்டுவிட்டன. மற்ற மூன்று கதவுகள் கடந்த 500 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. இந்த கதவுகளை திறக்க வேண்டும் என அந்த கோவில் நிர்வாகிகள் சுப்ரிம் கோர்டில் கேஸ் போட்டுள்ளனர். ஆனால் அந்த கோவிலின் உரிமையாளர்களான அரச குடும்பத்தினர் அந்த கதவுகளை திறக்க வேண்டாம் என கூறுகிறார்கள்.
கதவுகளின் ரகசியம்
இந்த கோவிலின் கட்டிட கலை சிறந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அந்த கோவில் கட்டப்படும்போது பல ரகசிய அறைகளை வைத்தே கட்டியுள்ளனர் என்றும் நம்பபட்டுவருகிறது . ஏற்கனவே திறக்கப்பட்ட அறைகளில் பல தங்கம், வெள்ளி போன்ற பொருள்கள் இருந்துள்ளன. இந்த திறக்கப்பட்ட கதவில் 3 அடி உயரமுள்ள பத்மநாபன் சிலையும் கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. அந்த சிலை முழுவதும் தங்கத்தாலே ஆனது. இந்த அறையில் பல நாடுகளின் தங்க காசுகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கிடைத்துள்ளது. உலகின் பல நாகரிகத்தின் அடையாளங்கள் இங்கு கிடைத்துள்ளன என்றும் செய்திகள் கூறுகிறது. இங்கு கிலோ கணக்கில் தங்கம் கிடைத்துள்ளது இவற்றின் மதிப்பு மட்டும் கிட்டதட் 500 கோடிக்கும் மேல் இருக்கும். இந்த கதவில் ஒரு அறையிலிருந்து மட்டுமே பொருள்களை வெளியே எடுத்துவர 12 நாட்கள் ஆகின. அந்த அளவுக்கு அதிகமான மற்றும் விலைமதிப்பான பொருட்கள் அங்கு காணப்பட்டன.
சங்க புத்தகங்களில் திருவனந்தபுரத்தை தங்க கோவில் இருக்கும் நகரம் என்று கூறியிள்ளனர். அப்படி அவர்கள் குறிப்பிட்டது இந்த கோயிலாக இருக்கலாம் என்றும் இதனை தங்க பொற்கோவில் என அழைத்ததாகவும் புத்தகங்களில் குறிப்பிபட்டுள்ளது. அதேபோல் இந்த கோயிலில் உள்ளே நிறைய தங்கம் இருப்பதால் இதைதான் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது . இந்த கோயிலில் எடுக்கப்பட்ட ஒரு நாணயத்தின் விலை மட்டும் 1.2 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இந்த அறைகளில் தங்கம் வைரம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இந்த கோயில் மீது பல முறை நீதிமன்றத்தில் கேஸ் போட்டு 6 கதவுகளையும் திறந்து விட்டனர். ஆம் இந்த கோவிலில் உள்ள அனைத்து அறைகளும் திறக்கபட்டன ஆனால் 6 வது கதவு திறந்தும் அதன் உள்ளே இன்னொரு இரும்பால் கதவு இருந்துள்ளது. அதனால் இந்த கதவை முழுமையாக திறக்க முடியவில்லை என அரசு அறிவித்துவிட்டது. ஏனென்றால் இந்த கடைசி கதவை திறக்க எந்த ஒரு சாவியோ பூட்டோ அங்கு இல்லை இதனை திறக்க அதற்கென்று உள்ள சில மந்திரம் படித்தால் மட்டுமே திறக்க முடியும் என்று கூறுகின்றனர்.
READ MORE:தாஜ்மஹாலின் மர்மங்கள்
இதில் உள்ள அனைத்து மரகதவுகளையும் உடைத்து திறந்தனர் ஆனால் கடைசியில் உள்ள கதவை திறக்கும்போது அதன் உள்ளே மற்றொரு கதவு இருந்துள்ளது இந்த கதவு இரும்பால் ஆனது இந்த கதவிற்கு சாவி கிடையாது அதற்கென்று தனி மந்திரம் சொன்னால் மட்டுமே திறக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த கதவுக்கு சாவி போடுவதற்கென்று என்று ஒரு ஒட்டையும் இல்லை இந்த கதவுகள் பாம்புகள் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த கதவை நாகபந்த கதவு என்றும் அழைக்கின்றனர். இந்த கதவை பல முறை திறக்க முயன்றாலும் இதனை திறக்க முடியாததால் ரகசியமான கதவாகவே இன்றளவும் கருதப்படுகிறது. இந்த கதவு கர்ப்ப கிரகத்தின் அருகிலேயே உள்ளது. இதை திறக்க கருட புராணத்தில் உள்ள ஒருசில நாக வசணங்களினாலே சிறக்க முடியும் என்று கூறப்படுகிறது
இதனை திறக்க மந்திரங்களில் ஒன்றான நாகபந்த மந்திரத்தில் கற்றுதேர்ந்த சித்தர்களாலும் முனிவர்களாலும் மட்டுமே முடியும் .ஆனால் இந்த காலகட்டதில் அத்தகைய சிறப்புடைய எவரும் இல்லை என கூறப்படுகிறது இதனால் இந்த கதவை திறக்க முடியாது என்று கூறிவிட்டனர். நாகபந்தத்தை நன்றாக தெரிந்தவர்களால் மட்டுமே இந்த கதவை திறக்க முடியும்.
இந்த கோயிலில் இவ்வாறு பல தங்கம் , வைரம் போன்ற விலைமதிப்பில்லாத பொருள்கள் இருப்பதால் மிகப்பெரிய அளவிற்கு இந்த கோவிலுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள மொத்த
புதையலின் மதிப்பு டிரில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும் என்று கூறுகி்ன்றனர். இந்த கோயிலை இந்திய அரசு பார்வையிடும்போது மேலும் 2 அறைகளை கண்டறிந்தனர் . தற்போது இந்த கோவிலில் மொத்தம் 8 அறைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவுக்கின்றன.
மேலும் படிக்க; பெர்முடா முக்கோணம் மர்மங்கள்
கிடைத்த பொருள்கள்
இந்த கோயிலின் ரகசிய அறையில் கிடைத்த பொருள்கள் என்னவென்ன்றால் பல மன்னர்கள் பயன்படுத்திய நாணயம் அதாவது சேர சோழ பாண்டிய மன்னர்களின் நாணயம் பல டன் கணக்கில் தங்கங்கள் , விஷ்ணு சிலை ,வைர வைடூரியம் அசோகா,நெப்போலியன், அலெக்சாண்டர் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட பல நாட்டு நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு இந்த கோயிலில் மூட்டை கணக்கில் தங்கம் இருந்துள்ளது என்பதை அனைவரையும் ஆச்சரியப்படுத்துள்ளது.
இதன் காரணத்தால் இந்த கோவில் உலகின் பணக்கார கோவிலாக உள்ளது.
கோவிலின் வரலாறு
இக்கோயில் நம்மாழ்வார் பாடல்களிலிலிருந்து, பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேர மன்னன் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜைகளும் திருவிழாக்களுக்கும் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்தாண்ட வர்மனால் 1729-ல் இது புதுப்பிக்கப்பட்டது.
கி.பி 17 ஆம் நூற்றாண்டில் உமயம் எனும் ராணியின் ஆட்சிக்காலத்தில் சமயம் முகில்கான் எனும் வெளிநாட்டினன் மணக்காடு எனும் பகுதியில் தங்கி இருந்து இத்திருக்கோயிலைக் கொள்ளையடிக்க முயற்சி செய்தான் என்று கூறப்படுகிறு அப்பொழுதுதான் இந்த கோவிலின் சொத்துக்கள் பாதாள அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இதன் சொத்துக்களை கொள்ளையடிக்க முயற்சி செய்த்தாதல் தங்கம் பாதுகாப்பாக பாதாள அறைக்குள்ளேயே முழுமையாக வைக்கபட்டிருக்கலாம் என்றும் பல நூறு ஆண்டுகள் பாதாள அறைக்குள் அவை வைக்கப்டதால் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு மாறும்போது நடந்த போர்களின் காரணமாக தங்கம் பாதாள அறைகளில் இருக்கும் குறிப்புகள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படி பல நூறு ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாதாள அறைகள் கண்டுபிடிக்கபட்டு தற்போது அவற்றை திறந்துள்ளன இருப்பினும் ஒரு சில கதவுகள் திறக்கடாமல் அப்படியே இருக்கிறது.
நன்றி!
மேலும் படிக்க ; மரியானா அகழி மர்மங்கள்