பழங்கள்ல பாத்தீங்கன்னா வைட்டமின்கள் மினரல்கள் தாது சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் என நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே பழங்களில் நிறைந்திருக்கு. அதனால தான் பழங்களை ஒரு கம்ப்ளீட் புட் அதாவது நிறைவுற்ற உணவுகள் அப்படின்னு சொல்றாங்க. டெய்லி ஒரு கப் பழங்கள் சாப்பிட்டு வந்தாலே பல்வேறு விதமான நோய்களிடமிருந்து நம்மை எளிதில் பாதுகாக்க முடியும் ஆனா பலரும் பார்த்தீங்கன்னா பழங்கள தவறாதான் சாப்பிட்டிட்டு இருக்கோம். அப்படி பழங்கள் சாப்பிடுவதில் நம்ம செய்யக்கூடிய ஏழு தவறுகள் என்ன பார்க்கலாம்
ஈட்டிங் ஃபுரூட்ஸ் வித் மீல்
பொதுவாக உணவு சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பிறகோ பழங்கள் சாப்பிடுவதை பலரும் வழக்கமா வச்சிருக்காங்க இது முற்றிலும் தவறான பழக்கம். ஏன் பார்த்தீங்கன்னா பழங்கள் நாம் சாப்பிடும் தானிய உணவு வகைகளை விட பல மடங்கு வேகமாக ஜீரணிக்க கூடியது.இதனால சீக்கிரமாகவே வயிற்றில் பெர்மிஷன் ப்ராசஸ் நடக்க ஆரம்பிச்சிடும் இதன் விளைவாக ஏப்பம் வயிறு பூசம் போன்ற செரிமான தொடர்பான பிரச்சனைகள் மிக எளிதில் உண்டாகும் அது மட்டுமில்லாமல் பழங்கள் மிக எளிதில் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கக் கூடியது. பழங்கள் சாப்பிடும் போது உணவு சாப்பிடக்கூடாது உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து அல்லது உணவு சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு தான் பழங்கள் சாப்பிட வேண்டும்.
தோலை நீக்கி சாப்பிடுவது
பொதுவாக பழங்கள் தோலை நீக்கி சாப்பிடுவது நல்ல ஒரு பழக்கம்தான் ஆனா சில பழங்களுடைய தோல்கள் நீக்கணும் அப்படின்னு அவசியம் இல்ல அப்படியே கூட சாப்பிடலாம். உதாரணமா பார்த்தீங்கன்னா ஆப்பிள். பழத்தை விட அதன் தோலில் தான் சத்து அதிகமாக உள்ளது ஆனால் பலரும் பார்த்தீங்கன்னா ஆப்பிள் பழத்தோட தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவாங்க இது ஒரு முற்றிலும் தவறான பழக்கம். சப்போட்டா பேரிக்காய் போன்ற பழங்களையும் கூட தோலை நீக்கணும் அப்படின்னு அவசியம் இல்ல அதற்கு பதிலாக உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் பழங்களை நன்றாக கழுவி சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.
ட்ரிங்கிங் ஃப்ரூட் ஜூஸ்
தினமும் ஒரு கப் ஜூஸ் குடிக்கிறதை வழக்கமா வச்சிருப்பாங்க இது ஒரு தவறான பழக்கம். பழங்கள் உள்ள ஜூஸ் மட்டும் எக்ஸ்ரேட் பண்ணி எடுக்கும் போது பழங்களில் கிடைக்கக்கூடிய சத்துக்கள்ல பாதி இழக்க நேரிடும் அதிலும் குறிப்பாக செரிமானம் ஆவதற்கு உதவக்கூடிய டயட்ரிக் பைபர் சத்து சுத்தமாக கிடைக்காது அதிலும் ஜூஸ் குடிக்கும் போது செரிமானத்திற்கு தேவையான உமிழ் நீரும் போதுமான அளவு கிடைக்காது இதன் காரணமாக வயிற்றில் அசிட்டிக் தன்மை அதிகமாக ஏற்படுகிறது. செரிமான கோளாறுகளையும் உண்டாக்கும் அது மட்டுமில்லாமல் இரத்தத்தில் சர்க்கரை அளவும் வேகமாக அதிகரிக்கும். கூடுமானவரைக்கும் பழங்காளை முழுமையாக மெதுவாக மென்று சாப்பிடுவது மிகவும் நல்லது பழங்களிலிருந்து கிடைக்கக்கூடிய முழு பலனும் கிடைக்கும்.
ஈட்டிங் ரெஃப்ரிஜிரேட்டர் ஃபுட்
பிரிட்ஜில வைத்த பழங்களை சாப்பிடுவது பொதுவாக பழங்கள் சீக்கிரமாக கெட்டுப் போக கூடாது என்பதற்காக ஃப்ரிட்ஜில் பழங்களை வைப்போம் ஆனா பழங்கள பிரிஜில ஸ்டோர் பண்ணும்போது பழங்களுடைய இயற்கையான மனமும் அதன் சுவையும் சுத்தமாக இல்லாமல் போய்விடும் அது மட்டுமில்லாமல் அதனுடைய சத்துக்களும் கூட குறைய ஆரம்பிச்சுடும். பழங்களை பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிடும் போது தொண்டை,உணவு குழாய் மற்றும் இரப்பை போன்ற இடங்கள்ல குளிர்ச்சி உண்டாக்குவதோடு பாதிப்பையும் மிக எளிதாக உண்டாக்கும்.
ஈட்டிங் ஃபுரூட்ஸ் லாங் ஆஃப்டர் கட்டிங்
பொதுவாக பழங்களை கட் பண்ணிட்டோம் அப்படின்னா எவ்வளவு சீக்கிரம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்களை கட் பண்ண பிறகு ரொம்ப நேரம் வைத்திருந்தோம் அப்படின்னா அதுல இருக்கக்கூடிய நியூட்ரிஷன் வேல்யூ குறைய ஆரம்பிச்சிரும். அது மட்டும் இல்லாம ஜெம்ஸ் பாம் ஆகி சீக்கிரமே கெட ஆரம்பிச்சிடும். பழங்களை கட் பண்ணி அதிலிருந்து 20 நிமிஷத்துக்குள்ள சாப்பிடுறது மிகவும் நல்லது. ஆறு: நாட் ஈட்டிங் லோக்கல் ப்ரூட்ஸ். நம் இடங்கள்ள விளையக்கூடிய ஃப்ரூட்ஸ மக்கள் பெரிது முக்கியத்துவம் கொடுத்து வாங்குவதில்லை வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி பண்ற கிவி, பெர்ரி பழங்கள் பெரிய திராட்சை மற்றும் வண்ண வண்ண கலர்கள் கிடைக்கக்கூடிய ஆப்பிள் வகைகள் போன்றவற்றை தான் மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிடுறாங்க. ஆனால் நம்ம இடங்கள்ல உடலின் தட்ப வெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கக்கூடிய பப்பாளி,மாதுளை, பன்னீர்,திராட்சை, சீதா போன்ற பழங்களிலேயே நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே அடங்கியிருக்கு.
ஈட்டிங் ஃபுரூட்ஸ் அட் தி நைட்
பழங்கள் சாப்பிடுவது ஒரு தவறான பழக்கம் என்று சொல்ல முடியாது பொதுவாக இரவில் உணவு செரிமானம் ஆவது வேகம் குறைவாக இருக்கும். எனவே பழங்களை அதிகமா சாப்பிட்டோம் அப்படின்னா வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும் இதன் விளைவாக செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்லாமல் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு இது மட்டும் அல்லாமல் பழங்கள் கலரும் ரொம்ப அதிகம். இரவில் பழங்கள் சாப்பிடுவதால் அது உடல் எடையும் வேகமாக அதிகரிக்கும். பழங்களை காலை நேரத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் பழங்களை வெறும் வயிற்றில் உணவாக சாப்பிடுவது மிகுந்த பலனை கொடுக்கும்.