
மனக்கவலை கவலைப்படாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது. மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டு தான் இருக்கும் பொதுவாக வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கவலை அளவுக்கு மீறிய வேலைப்பளு காரணமாக உண்டாகக்கூடிய கவலை உடல் நலக்குறைவினால் உண்டாகக்கூடிய கவலை சில மனிதர்களை குறித்து அதிருப்தியினால் உண்டாகக்கூடிய கவலை எதிர்காலத்தை குறித்த கவலை என ஏதாவது ஒரு கவலையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சிலருடைய வாழ்க்கையில் மட்டும் கவலையே தொடர் வாழ்க்கையாக மாறிவிடுகிறது இப்படி தினமும் அதிக அளவில் கவலைப்படும்போது அது மனம் சார்ந்த நோய்கள் மட்டுமல்லாமல் உடல் சார்ந்த நோய்களையும் ஏற்படுத்த கூடும். தினமும் கவலைப்படுபவர்களுக்கு உண்டாகக்கூடிய ஏழு ஆபத்தான நோய்கள் பற்றி பார்க்கலாம்.
இருதய நோய்

ஒன்று இருதய நோய்களை உண்டாக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக்கூடிய உறுப்பு இருதயம் தொடர்ச்சியாக அதிக அளவில் கவலைப்படும் போது உடலில் கிராக்டிக் சோல் கார்டிசோல் என்று சொல்லக்கூடிய ஹார்மோனை உற்பத்தி செய்து சீரற்ற இதயத்துடுப்பை உண்டாக்கும் .இதன் விளைவாக இருதயம் பலவீனமடையும் அதிக ரத்த அழுத்தம் இதய வால்வு சுருக்கம் இதய அடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது அது மட்டுமல்லாமல் அதிர்ச்சியான சம்பவங்கள் கேள்விப்படும்போது அது சடன் ஹார்ட் அட்டாக் வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது இது இருதய நோயாளிகள் இதய நோயாளிகள் மனக்கவலைகள் குறித்துகவலைப்படாமல் இருப்பது மிகவும் அவசியம்.
தோல் நோய்கள்

இரண்டாவது தோல் நோய்கள் உண்டாக்கும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல நாம் அதிகமாக கவலைப்படும்போது அது சருமம் சார்ந்த பிரச்சனைகளை எளிதில் உண்டாகும் கவலைப்படும் போது உடலில் உண்டாகக்கூடிய ஹார்மோன்கள் காரணமாக தோல்களில் ரத்த ஓட்டம் குறைந்து முகச்சுருக்கம் கண் கருவளையம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் அதுமட்டுமல்லாமல் சருமங்களில் எண்ணெய் சுரப்பி அதிகரித்து முகப்பருக்களையும் உண்டாக்கும் முகப்பருக்கள் ஏற்படும். மனகவலைப்படாமல் இருப்பது மிகவும் அவசியம்.
செரிமான கோளாறுகள்

மூன்று செரிமான கோளாறுகளை உருவாக்கும். பொதுவாக மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தான் செரிமான சார்ந்த பிரச்சினைகளான நெஞ்சு எரிச்சல் வயிறு உப்பிசம் தொடர் ஏப்பம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள் மேலும் ஐபிஎஸ் என்று சொல்லக்கூடிய வயிறு எரிச்சல் பிரச்சனைகள் உண்டாவதற்கு மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கிறது.
தூக்கமின்மை

நான்கு தூக்கமின்மை அதிகளவு மன கவலை தூக்கமின்மை பிரச்சனையை எளிதில் உண்டாக்கும் பகலில் மனதில் ஏற்படக்கூடிய பலவீனமான சிந்தனைகள் இரவில் நினைவலைகளாக தூண்டப்படுகிறது இதன் காரணமாக பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
தலைவலியை உண்டாக்கும்

ஐந்து தலைவலியை உண்டாக்கும் குறிப்பாக அதிக அளவு வேலைப்பளு காரணமாக கவலைப்படுகிறவர்களுக்கு தலைவலி சார்ந்த பிரச்சனைகள் உண்டாக்கும் நாளடைவில் மூளையில் உள்ள நரம்புகள் பாதிப்பு போன்ற நோய்களை உண்டாக்கும் அதுமட்டுமல்லாமல் அதிக கவலை தலையில் நீர் சேர்த்து ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது மன கவலை.
உடல் எடையை அதிகரிக்கும்

ஆறு உடல் எடையை அதிகரிக்கும் மனக்கவலை ஏற்படுகிறவர்களுக்கு ஹார்மோன் இம்பாலன்ஸ் காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகரித்து இதுபோன்ற குறுகிய காலத்தில் அதிக உடல் எடையை உண்டாக்கி ஓபிசிடி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்.
மன நோய்களை உண்டாக்கும்

ஏழு மன நோய்களை உண்டாக்கும் தொடர்ச்சியாக அதிக அளவில் கவலைப்படுகிறவர்கள் கிரோனிக் சிஸ்டிசன் மாற்றங்களையும் உண்டாக்கும். உதாரணமாக சிறிய பிரச்சனைகளையும் கூட அதிக அளவில் பயம் பதட்டம் எரிச்சல் அதிக கோபம் எப்போதும் அதிக சோர்வு தனிமை தாழ்வு மனப்பான்மை என இதுபோன்ற பிரச்சனைகளை அவதிப்படுகிறார்கள் நாளடைவில் அடுத்த நிலை என்று சொல்லக்கூடிய டிப்ரஷன் ஆன்சைட்டி போன்ற மன நோய்கள் உண்டாவதற்கும் ஆரம்பமாக இருக்கிறது இந்த மனக்கவலை. கூடுமானவரைக்கும் கவலைகளை தவிர்த்து மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் முயற்சி செய்யுங்கள் மனதை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதன் மூலமாக மட்டும்தான் இது போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்
தொடர்புடயவை: மன அழுததை போக்கும் வழிமுறைகள்