மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் /matupongal

 

பொங்கல் பண்டிகையின் சிறப்பே அது மனிதர்களுக்கான பண்டிகையாக மட்டும் அல்லாமல் மனிதன் உயிர் வாழ உதவும் அனைத்திற்கும் நன்றி கூறி வழிபடும் அறம் சார்ந்து இருப்பதே ஆகும். அந்த வகையில் பெரும் பொங்கலை அடுத்து வரக்கூடிய மாட்டு பொங்கல் என்பது, உழவனுக்கு உழவு செய்ய உதவும் அத்துணை கால்நடைகளுக்கும் நன்றி கூறும் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உழவுக்காக தங்களின் தோள் கொடுத்து உதவும் மாடுகளை இந்நாளில் போற்றுவதால் இதற்க்கு மாட்டுப் பொங்கல் என்ற பெயரும் வந்தது.

இந்த மாட்டு பொங்கல் நாளில் பொதுவாக விவசாயில்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பொட்டு வைத்து அழகு படுத்துவது வழக்கம். அதே சமயம் சில ஊர்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளிலும் இந்நாளில் நடப்பது உண்டு. இந்த நாளின் மகிழ்வை பகிரும் வகையில் பலரும் தங்கள் உறவுகளுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி இந்த பண்டிகையை நாளை கொண்டாடுவது உண்டு.

மண் வாசனையோடு

ஏர் கலப்பைகளை சுமந்து

நாம் இன்பமாய் உணவுண்ண

விவசாகிக்கு தோள்கொடுக்கும்

எருதுகளை போற்றுவோம்.

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

மாடுகளின் அழகினை

கவிதையில் வர்ணிக்கலாம்

ஆனால் உழைப்பை வர்ணிக்க

ஓராயிரம் கவிதை போதாது.

இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

கலைப்பறியாது உழைக்கும் உனக்கு

காலை வணங்கி கூறுகிறேன்

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

உழவனுக்கு மட்டும் அல்ல,

ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு

உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான்

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

தாய் கூட சில மாதங்கள் தான்

எனக்கு பால் ஊட்டினாள்

ஆனால் நான் இருக்கும் வரை

எனக்கு பால் கொடுக்கும் நீ

என் தாயினும் சிறந்தவள்.

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.