மரவள்ளிக்கிழங்கை கப்பக்கிழங்கு குச்சி கிழங்கு மருச்சினி கிழங்கு என பல பெயர்களில் அழைக்கிறாங்க மரவள்ளி கிழங்கு பல விதங்களில் பயன்படுத்துகிறோம் உதாரணமாக பாயாசம் போன்ற இனிப்பு உணவுகளில் பயன்படுத்தக்கூடிய ஜவ்வரிசியின் உடைய மூலப்பொருள் இந்த மரவள்ளி கிழங்கு தான் மரவள்ளி கிழங்கில் இருந்து தான் ஜவ்வரிசியை தயாரிக்கிறாங்க மற்றும் குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ் போன்ற பொருட்கள் தயாரிக்கவும் கூட மரவள்ளி கிழங்கு பயன்படுத்துறாங்க மரவள்ளி கிழங்குல கார்போஹைட்ரேட் என்று சொல்லக்கூடிய மாவுச்சத்து அதிகமாக உள்ளது இதை தவிர வைட்டமின் சி வைட்டமின் பி1 பி6 கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் சோடியம் என ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொண்ட அற்புதமான உணவு தான் மரவள்ளிக்கிழங்கு. மரவள்ளி கிழங்கு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
வயிற்றுப்போக்கு குணமாக்கும்
ஒன்று: வயிற்றுப்போக்கு குணமாக்கும். பொதுவாக வயிற்றுப்போக்கு வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களின் அளவு குறையும்போது உண்டாகும் மரவள்ளிக்கிழங்கில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அது வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும். இதன் மூலமாக தீமை செய்யக்கூடிய பாக்டீரியாக்களின் அளவு குறைந்து வயிற்றுப்போக்கு உண்டாவது குணமாகும் அடிக்கடி வயிற்றுப்போக்கு வயிற்றுஎரிச்சல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
ஒற்றைத் தலைவலி குணமாகும்
இரண்டு: ஒற்றைத் தலைவலி குணமாகும் மைக்ரைன் என்று சொல்லக்கூடிய ஒற்றை தலைவலியால் நீண்ட நாட்களாக அவதிப்படுகிறவர்கள், சிகிச்சைகள் எடுத்தும் குணமாகாதவர்கள் பலரும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு வர மிகவும் நல்லது இதில் அதிகப்படியான வைட்டமின் பி2 மற்றும் இப்போபிளோவின் போன்ற சத்துக்கள் மைக்ரைன் என்று சொல்லக்கூடிய தலைவலிக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.
கண் பார்வை திறனை அதிகரிக்கும்
மூன்று: கண் பார்வை திறனை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கில் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் உள்ளது இது கண் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்களுக்கு மிகவும் நல்லது. கண்களில் ஏற்படக்கூடிய கிட்ட பார்வை தூர பார்வை குறைபாடு கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறவங்க மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு வர கண்பார்வை திறன் மேம்படும்.
வயிற்று புழுக்களை அளிக்கும்
நான்கு: வயிற்று புழுக்களை அளிக்கும். மரவள்ளிக்கிழங்கில் இருக்கக்கூடிய வேதிப்பொருள் இயற்கையாகவே வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்களை அளிக்கும் ஆற்றல் உண்டு. வயிற்று பூச்சி தொல்லையினால் அவதிப்படுகிறவங்க இந்த மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்கள் அழிந்து வெளியேறும் மற்றும் மரவள்ளிக்கிழங்கினுடைய இலைச்சாருக்கும் வயிற்றுப் புழுக்களை அளிக்கும் ஆற்றல் உண்டு.
கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது
ஐந்து: கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் சி பாலைட் இரும்புச்சத்து கால்சியம் போன்ற சத்துக்கள் அவசியம் தேவை. கர்ப்பிணி பெண்கள் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு வர ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் .
சரும ஆரோக்கியத்திற்கு நல்லது
ஆறு சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. சருமத்தில் ஏற்படக்கூடிய வெண்புள்ளிகள் சரும வளர்ச்சி தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கக்கூடியது மரவள்ளிக்கிழங்கு. மரவள்ளிக்கிழங்கில் இருந்து கிடைக்கக்கூடிய மரவள்ளி மாவில் இருந்து டால்கம் பவுடர் மற்றும் பாடி லோஷன் போன்ற பொருட்கள் தயாரிக்கிறதிலும் கூட மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்துறாங்க.
முழு உடலுக்கு எனர்ஜி கொடுக்கும் மரவள்ளிக்கிழங்குல பாத்தீங்கன்னா 80 சதவீதம் அதிகமான கார்போஹைட்ரேட் இருக்கு. இது உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் தினமும் கடினமான உடல் உழைப்பு செய்பவர்கள் கூட காலை உணவாக மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு வரலாம் ஒரு நாளைக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும். பிரைன் ஸ்டோக் போன்ற மூளை சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள் சிறுநீரகம் செயலிழப்பு கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கிறவங்க மரவள்ளிக்கிழங்கு சாப்பிடக்கூடாது மற்ற அனைவருமே மரவள்ளிக்கிழங்கு தாராளமா சாப்பிடலாம். மரவள்ளிக்கிழங்கு பச்சையாக அதிகமாக சாப்பிடக்கூடாது. நான்கைந்து நாட்களான மரவள்ளி கிழங்கிற்கு இயற்கையாகவே சைனோஜெனிக் குளுக்கோசைடு என்ற நச்சுப் பொருளை உருவாக்கும் ஆற்றல் உண்டு இது போன்ற நச்சு உருவாகிய மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும் போது ஸ்ட்ரோக் ஹார்ட் அட்டாக் என உயிருக்கு கூட ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஃப்ரெஷான மரவள்ளி கிழங்கு பயன்படுத்துவது நல்லது.
Related: நெல்லிக்காய் பயன்கள்