ஒரு காலத்தில் இந்த வார்த்தையை கேட்டால் ஐயோ! கலாச்சாரம் என்ன ஆவதுன்னு கோவப்பட்டிருக்கேன். ஆனால் இப்போ இது எனக்கு தப்பாக தோன்றவில்லை.
ஏன் இப்படி சொல்றேன்னு கேளுங்க. மகாபாரதத்தை பொருத்தவரை அதில் வரும் யாரையும் நல்லவர்கள்ன்னும் சொல்ல முடியாது, கெட்டவர்கள்ன்னும் சொல்ல முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் தப்பு செய்திருப்பார்கள். அதில் நல்லது ஒருவருக்கு கெட்டதாக தெரியும். கெட்டது இன்னொருவருக்கு நல்லதாக தெரியும்.
இந்த கலியூகமும் எனக்கு மகாபாரதம் மாதிரி தான் தோணுது.
சில பேருக்கு கல்யாணம்ங்குற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி. குழந்தை, குட்டின்னு ஒரு பந்தத்தில் வாழ இஷ்டமில்லாமல் இருப்பாங்க. அவங்களை கூட்டிட்டு போய் ஒரு அப்பாவி பெண்ணுக்கோ/பையனுக்கோ திருமணம் செய்து வைச்சிடுவாங்க. விளைவு: வாழ்க்கை நாசமாவது.
இதுக்கு அவங்களுக்கு பிடித்த மாதிரி லிவின்டுகெதர் வாழ்க்கை வாழலாமே!
சில பெண்களுக்கு பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு ஆண்களை பிடித்திருக்கும். ஆனால் கலாச்சாரம்ங்குற பேர்ல அவர்களின் விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைச்சிடுவாங்க. குடும்ப மானத்தை காப்பத்தணும்னு. மறுபடியும் யாரோ அப்பாவிகளின் வாழ்க்கையே பாதிக்கப்படுது. இதுக்கு அவங்க இஷ்டத்துக்கே வாழ விட்டால். கல்யாண கனவுடம் இருக்கும் மற்றவரின் வாழ்க்கையாவது பாதிக்கப்படாமல் இருக்குமே.
இங்க எனக்கு அநியாயமாக எது படுது தெரியுமா? உண்மையிலேயே லிவிங்டுகெதரில் வாழ்ந்து விட்டு வரும் ஆண் தான் தனக்கு விர்ஜின் பெண் வேண்டும் என்று கேட்பது. அதைபோல லிவிங்டுகெதரில் வாழ்ந்து விட்டு வரும் பெண் தான் காலம்பூரா ஓடி உழைச்சி செட்டில் ஆன பின்பு கல்யாணம் பண்ணணும்னு இருந்த பையனை திருமணம் செய்து கொள்வது. அப்போ நியாயமாக திருமணம் செய்து வாழனும்னு காத்திருந்தவர்கள் தானே பாதிக்கப்படுறாங்க.
அதைப்போல லிவிங்டுகெதர்ன்னு ஒன்றில் சேர்ந்து வாழ்வதில் ஆணை விட பெண்ணுக்கே அதிக பாதிப்பு இருக்கும். அப்படி வாழ்ந்த ஒரு ஆணை இன்னொரு பெண் ஏற்றுக்கொள்வாள். ஆனால் அப்படி வாழ்ந்த பெண்ணை இன்னொரு ஆண் ஏற்ப்பாரா என்பது சந்தேகமே!
இதற்கெல்லாம் மூலக்காரணம் நாம் கலாச்சாரத்தை காப்பாத்துறோம்னு சொல்லிக்கிட்டு இஷ்டமில்லாத திருமண பந்தத்தில் விருப்பமில்லாமல் இருவரை இணைத்து வைப்பது தான்.
அப்படி நிறைய நடப்பதால் தான் இது போன்ற கலாச்சாரம் வேர் விட துவங்கியுள்ளது. எதிர்க்காலத்தில் திருமணம்ன்னு ஒன்னு இருக்காது. எல்லோரும் லிவிங்டுகெதர் மாதிரி வாழ்க்கை தான் வாழப்போறாங்கன்னு நினைக்குறேன்.
சட்டம் கூறுவது என்ன
2013-ல் இது தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ”திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. அப்படி இருந்தும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி விட்டன” என்று கூறியிருந்தனர்.
2014-ல் இதுபோலவே ஒரு வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதிகள், “திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது என ஹைகோர்ட் கூறியுள்ளது. வெளிநாடுகளில் நடந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூகநெறிகளுக்கு எதிரானது” என்று கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
தொடரபுடயவை: ஆபாச படங்களால் ஏற்படும் ஆபத்துக்கள்