LAW OF ATTRACTION
வணக்கம் நணபர்களே ! நீங்கள் ஒரு விடயத்தை நினைத்தால் மட்டும் போதும் அந்த ஒரு விஷயம் உங்களுக்கு நடக்கும் எடுத்துகாட்டாக நீங்கள் பணக்காரர் ஆக விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் பணக்காரர் போல் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வேண்டும் இதைதான் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி என கூறுகிறார்கள், இந்த ஈர்ப்பு விதி உண்மையா இதை பற்றிய அறிவியலாளர்களின் கூற்று என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் .
ஈர்ப்பு விதி என்றால் என்ன?
இந்த ஈர்ப்பு விதி என்பது நீங்கள் என்ன நினைகிறீர்களோ அதுவாகவே மாறிகிறீர்கள் என்பதுதான் அதாவது ஒரு விஷயத்தை கவர்ந்திழுக்கும் தன்மை இதற்கு சிறந்த எடுத்துகாட்டு காந்தத்தை கூறலாம் ஒரு காந்தமனாது இரும்பு துகளை கவர்ந்திழுக்கிறதோ அதேபோன்று உங்களின் எண்ணங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் கவர்ந்திழுக்கப்பட்டு அதையே நினைத்து பிறகு அதுவாகவே மாறுகிறீர்கள் என்பதுதான் . ஆனால் இதில் இருக்கூடிய முரண்பாடு என்னவென்றால் நீங்கள் உலகின் விலையுயர்ந்த காரை வேண்டுமென நினைத்தால் அந்த காரை பற்றிய கனவு மட்டும் காணுங்கள் போதும் அந்த காரை பிரபஞ்சமே உங்களுக்கு தரும் என்பதுதான்.
THE SECRET புத்தகம்
இந்த ஈர்ப்பு விதி என்பது மக்களிடையே மிப பிரபலமானதற்கு முக்கிய காரணம் 2006 ஆம் ஆண்டு வெளியான THE SECRET LAW OF ATTRACTION என்ற புத்தகம்தான் இந்த புத்தகத்தை எழுதியவர் பைரன் என்ற பெண்மனி ஆவார் . இந்த புத்தகத்தின் மையகருத்து நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள் என்பதுதான். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு ஒரு பொருள் வேண்டுமென்றால் அந்த பொருள் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையிலேயே இருக்கவேண்டும் இப்படி கற்பனை மட்டும் செய்தால் போதுமானது நீங்கள் விரும்பிய பொருளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு தரும்.
|
source:pixabay |
இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிறைய கருத்துகள் முரன்பாடுகளாகவே இருந்துள்ளன எடுத்துகாட்டாக எலக்ட்ரானுக்கு (+VE) CHARGE என்றும் காந்தங்களின் வடதுருவம் ஒன்றோடொன்று ஈர்த்துகொள்ளும் என்று பள்ளி சிறுவர்களுக்கு கூட தெரிந்த விடங்களை ஆராய்ச்சி செய்யாமல் புத்தகத்தில் பிதற்றியுள்ளனர். இதற்கு அவர்கள் கூறிய பதில் வெவ்வேறு விதமான தவறான தகவல்களிடன் ஒப்பிட்டு சமாளித்தனர்.
இப்பொழுது ஈர்ப்பு விதிக்கு வருவோம் இந்த புத்தகத்தில் ஈர்ப்பு விதி பற்றி இரண்டு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள். மற்றொன்று நீங்கள் எதுவாக மாறக்கூடாது என்று நினைக்குறீர்களோ அதுவாகவே மாற்றப்படுகிறீர்கள். ஆக இந்த இரண்டு கருத்துகளையும் பார்க்கும் இவற்றிலேயே முரண்பாடுகள் உள்ளதை நீங்கள் காணலாம். இதை எடுத்துகாட்டுடன் காண்போம் நான் பரிட்சையில் பாஸ் ஆக வேண்டும் என நினைத்தால் அந்த மாணவன் தேர்ச்சி அடைகிறானாம் அதுவே நான் பரிட்சையில் தோல்வியடையக்கூடாது என நினைத்தால் அந்த மாணவன் தோல்வியடைவானாம் என்பதுதான், ஆனால் இதில் உண்மை என்னவென்றால் அந்த மாணவன் தேர்வில் என்ன எழுதுகிறானோ அதை பொருத்துதான் அவனுடைய வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறதே தவிர அவனுடைய சிந்தனையில் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த புத்தகத்தில் இவர்கள் குறிப்பிடும் கருத்துகள் மக்களை சோம்பேறிகளாக்கும் கருத்துகளாகவே உள்ளன நீங்கள் விரும்பிய பொருளை பிரபஞ்சத்திடம் கேளுங்கள் அது உங்களுக்கும் கிடைக்கும் என்று, ஒரு பொருள் உங்களுக்கு வேண்டுமென நீங்கள் நினைத்தால் அது வேண்டும் என கனவு மட்டும் காண கூடாது அந்த பொருள் கிடைக்க என்ன வழிகள் உள்ளது எதை செய்தால் அந்த பொருள் நமக்கு கிடைக்கும் என திட்டமிட்டு அதற்கான கடின உழைப்பை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் உங்களால் ஒரு பொருளையோ அல்லது உங்களுடைய இலட்சியத்தை அடைய முடியும். மற்றப்படி
கனவு மட்டுமே கண்டு கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது.
இப்படி எழுதப்படும் புத்தகங்கள் அனைத்தும் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கபட்டதே தவிர உங்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக அல்ல. இந்த புத்தகம் வெளியான ஆண்டு மட்டும் கிட்டதட்ட 2 கோடி நகழ்களை விற்று தீற்றது இவை மக்களை திசை திருப்பும் ஒரு வழியாகும், எனவே வாழ்க்கையில் ஆக்கபூர்வமான சிந்தனைகள்தான் உங்களை மேம்படுத்தும்தான் ஆனால் அதனை சிந்தனையோடு மட்டும் நிறுத்தாமல் சரியான திட்டமிடலோடு கடின உழைப்பு மற்றும் பொருமையும் இருந்தாலே போதும் உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
நன்றி!