இன்றைய தலைமுறையினருக்கு குந்தாணி என்பது ஓர் வசவுச் சொல்லாக மட்டுமே தெரியும்! ஆனால்… உண்மையில் அதன் பொருள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் .
குந்தாணி என்றால் என்ன ?
குந்தாணி – என்றால் வாய் அகன்ற பாத்திரம், பெருவுரல், குண்டா, நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல், பருமனான நபர்… என அகராதிகள் கூறுகின்றன.
உ லக்கை கொண்டு உரலை குத்தும் (இடிக்கும்) பொழுது தவச (தானிய) மணிகள் வெளியே சிதறாமல் பாதுகாக்கும் வாயகன்ற – புடைப்பான அமைப்புக்கு குந்தாணி என்று பெயர்!
- குத்துதல் = உலக்கையாற் கூலத்தைத் துவைத்து, இடித்து நொறுக்குதல்.
மேல்பகுதியில் வாய் அகன்றும் கீழ்பகுதியில் உரலுடன் பொருந்துமாறு ஒடுங்கி – புடைப்பான வளையம் போன்ற வடிவத்தில் உரலைச் சுற்றி ஒரு தடுப்பைப் போல பயன்படுகிறது – குந்தாணி.
உரலில் மேல்வாய் மேல் வைக்கும் சுற்றுச் சுவர்போன்ற வட்டத் தகடாகும். உரலில் நெல்லையோ, அரிசியையோ போட்டு குத்தும்போது அது வெளியில் சிதறிவிடாமல் இருக்க உரலைச் சுற்றி ஒரு தடுப்பு(செக்கு போன்று பயன்படுத்தப்படும் பொருள்) மாதிரி வைத்திருப்பார்கள். வாய் அகன்று, கீழே (உரல் அளவுக்கு) ஒடுங்கி இருக்கும்.
முற்காலத்தில் உரல்கள், குந்தாணி ஆகியவை கருங்கற்களால் செய்யப்பட்டது. உலக்கைகள் மரத்தால் செய்யப்பட்டு இரு முனைகளிலும் பூண் போடப்பட்டிருக்கும். (உலக்கைப் பூண் என்பது மரத்துக்கு போடப்படும் இரும்புக் கவசம்) .
பிற்காலத்தில் வேம்பு, பாலை போன்ற மரத்தில் செய்யப்பட்ட உரல் களும் வழக்கில் இருந்தன.
உரல், உலக்கை, குந்தாணி மூன்றும் ஒரே தொகுப்பைச் சேர்ந்த கருவிகள்.
இடை சுருங்கி இருக்கவேண்டிய பெண்டிர் இடை பெருத்திருந்தால் – ‘குதிர் போல இருக்கிறாள், குந்தாணி போல் இருக்கிறாள்’ .என்று உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம். இது ஒரு நையாண்டி வழக்கு.
தொடர்புடயவை: தேவதாசிகள் யார் ? அவர்களின் வாரலாறு என்ன?