கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமகர்ம வீரர் ராசர் மிக உயர்ந்த தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். அவரால் ஏழைகள் கல்விக்கண் திறந்தனர்.பல தலைவர்களை உருவாக்கியதால் பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும்.
இளமைக்காலம்:
பிறப்பு: ஜூலை 15, 1903
இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.
இறப்பு: அக்டோபர் 2, 1975
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு:
கு. காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார்.
பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார்.
அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
கல்விப்பணி:
பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார் மாணவர்கள் உயர்கல்வி பெறப் பல கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்கினார்
நிறைவேற்றிய பிற திட்டங்கள்:
காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார். மாணவர்கள்பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஒன்பது நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.கிண்டி அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலைகளை நிறுவினார்.
தமிழக முதல்வராக காமராஜர்:
1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது.
இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.
ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’.
தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.
பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.
தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது.
இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
.
விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:
டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
“ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார்.
உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.