கடுக்காய் பற்றி பார்க்கலாம். கடுக்காய் துவர்ப்பு சுவை உடையது இது நம்ம ரத்தத்தில் இருக்கிற அழுக்குகள் எல்லாத்தையும் சுத்தமா நீக்கிடும். நாக்குல சில பேருக்கு ருசியே இல்லாமல் இருக்கும் அப்படி பட்டவங்களுக்கு ருசியை உருவாக்கக்கூடியது இந்த கடுக்காய் சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இதை எடுத்துக்கலாம் இந்த கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
பொதுவாகவே கடுக்காய் கபத்தை போக்கக்கூடியது திரிபலா சூரணத்துல நெல்லிக்காய் தான்றிக்காய் கடுக்காய் மூன்றுமே இருக்கும். கடையிலிருந்து கடுக்காயை வாங்கி தோலை நீக்கிக்கிட்டு வெயிலில் காய வச்சு பொடித்து ஸ்டோர் பண்ணி வச்சு ஆறு மாதம் வரைக்கும் பயன்படுத்தலாம் இதை எப்படி பயன்படுத்தணும் என்ன நன்மைன்னா இரவு படுக்க போறதுக்கு முன்னாடி ஒரு அரை ஸ்பூனுக்கு குறைவா இந்த பொடி எடுத்து இதுல ஒரு முக்கால் டம்ளர் அளவுக்கு வெந்நீரை விட்டு வேறு எதையும் சேர்க்காமல் நன்றாக கலக்கி அப்படியே குடிக்கணும் இது துவர்ப்பு சுவையா இருக்குறதுனால தொடர்ந்து ஒரு 48 நாள் குடிச்சிட்டு வந்தா உடல் எப்போது உஷ்ணம் ஆகவே இருக்கும்.
அவர்கள் தொடர்ந்து எடுத்துக்கும்போது உடல்ல உள்ள உஷ்ணம் குறையும். சிறுநீர் குழாய்களில் உண்டாக்கக்கூடிய கல்லடைப்பு சிறுநீர் எரிச்சல் இது எல்லாத்தையும் போக்கும் இன்சுலின் போட்டுக்கிற சர்க்கரை நோயாளிகள் கூட இதை எடுத்துக்கலாம் இன்சுலின் தடையை நீக்கி சர்க்கரை அளவை குறைப்பதற்கு உதவும்.
அது மட்டுமில்லாமல் நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய இரத்த குழாய்களில் ஏற்படக்கூடிய பாதிப்பை இது சரி செய்யும் உடல் பலவீனத்தைப் போக்கும் மூட்டு வலி இருந்தது என்றால் அதை குணமாக்கும் ஆண்களுடைய விந்தணுக்கள் குறைபாடை இது சரி செய்யும் அதற்கு ஒரு மண்டலம் அதாவது 48 நாள் தொடர்ந்து சாப்பிடணும் கடுக்காயை இப்படி மட்டுமல்ல பேன் தொல்லை பொடுகு தொல்லை உள்ளவர்கள் இந்த கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தினமும் தலைக்கு சேர்த்து வந்தால் பேன் பொடுகை இவை எல்லாம் சரியாகும் சில பேருக்கு ஆசனவாயில் அரிப்பு எரிச்சல் இவையெல்லாம் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த கடுக்காய் பொடியை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து மிதமான சூடு இருக்கும் சமயத்தில் அந்த தண்ணீரால் ஆசனவாயை அலம்பனும்.
வாயை தொறந்தாலே துர்நாற்றம் ஏற்படும். அவர்கள் இந்த காய்ச்சிய நீரை வைத்து வாய் கொப்பழித்து வந்தால் நல்ல பலன் கொடுக்கும் இது கெட்ட பாக்டீரியாக்களை கொண்டு அந்த துர்நாற்றத்தை போக்கும் பல் வலி ஈறு வலி இந்த மாதிரி உள்ளவர்கள் கடுக்காய் பொடி வைத்து பல் தேய்க்கலாம் பல் உறுதியாகும் என்ன தான் கடுக்காய் பொடி இவ்வளவு நன்மை கொண்டதாக இருந்தாலும் கூட கர்ப்பமாக இருக்கிற பெண்கள் கடுக்காயை எந்தவிதமான முறையிலையும் சாப்பிடக்கூடாது.