2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடங்கியதில் இருந்து சிஎஸ்கே கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி, வியாழன் அன்று அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஐபிஎல் 2022 சீசன் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார் என சிஎஸ்கே தெரிவித்துள்ளது. “எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமையை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அணியை வழிநடத்த தேர்வு செய்தார். 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரராக மட்டுமே இருப்பார். இந்த சீசனிலும் அதற்கு அப்பாலும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸை பிரதிநிதித்துவப்படுத்துவார்” என்று சிஎஸ்கே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2007-ல் கேப்டனாகிய ஜடேஜா
ஜடேஜா கடைசியாக அக்டோபர் 28, 2007 அன்று ராஜ்கோட்டில் உள்ள மேற்கு ரயில்வே மைதானத்தில் வினு மன்கட் போட்டியில் மும்பைக்கு எதிராக 19 வயதுக்குட்பட்டோருக்கான சௌராஷ்டிரா அணிக்கு தலைமை தாங்கினார்.அதன்பிறகு இப்போதுதான் கேப்டனாக மாறுகிறார்.
முதலிடம் பிடித்த ஜடேஜா
இதற்கிடையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆல்-ரவுண்டர்களுக்கான சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டரை விட ஜடேஜா மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். இந்த மாத தொடக்கத்தில் மொஹாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நம்பர் 1 இடத்திற்கு உயர்ந்தார்.
சி எஸ் கே அணி
சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயாடு, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், ஷிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், டிவோன் கான்டோரிஸ், டிவோன் கான்டோரிஸ் , மிட்ச் சான்ட்னர், ஆடம் மில்னே, சுப்ரான்ஷு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சவுத்ரி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா.