how to study tnpsc exam
TNPSC என்பது தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழ் மற்றும் ஆங்கல வழியில் பயின்றவர்கள் எழுதும் ஒரு தேர்வாகும். இது நாம் பள்ளியில் படிப்பதுபோல் அல்லாமல் வேறுப்படே இருக்கும் .பல லட்ச போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெற்றிப் பெறுவது என்பது கடினமான ஒன்றாகும். TNPSC-க்கு படிக்கும் முறை மற்றும் எளிதில் வெற்றி பெறும் ரகசியங்களை இப்பதிவில் காண்போம்.
TNPSC க்கு நீங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது SYLLUBUS யை வைத்துதான் படிக்கவேண்டும் .ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உங்களின் SYLLUBUS யை கையில் வைத்துகொண்டு முடிக்கும் தலைப்பை அடிக்கோடிடலாம்.
நீங்கள் எந்த தேர்விற்கு தயாராகப்போகீரீர்கள் என்பதனை முடுவுசெய்து உங்களின் குறிக்கோளை அதன் மேலே செலுத்த வேண்டும் எடுத்துகாட்டாக குரூப் 4 படிக்கீரீர்கள் என்றால் அதனை மட்டும் உங்களின் இலக்காக வைத்து படிப்பதன் மூலம் எளிதில் வெற்றிப் பெறலாம்
நீங்கள் படிக்க ஆரம்பித்திவிட்டிர்கள் என்றால் பள்ளி புத்தகத்தை தான் பின்பற்ற வேண்டும் மற்ற புத்தகம் படிக்கலாம் ஆனால் அதிக முக்கியத்துவம் பள்ளி புத்தகத்திற்கே அளிக்க வேண்டும். பள்ளி புத்தகத்திலும் எல்லாவற்றையும் படிக்காமல் SYLLUBUS ல் உள்ளதை மட்டும் படிக்கவேண்டும்
நீங்கள் படிக்கும் முறையை உங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளவேண்டும் அதாவது எழுதி படிக்கும் முறை என்பது சிறந்த முறையாகும் அதனையே பின்பற்றவைண்டும் இவ்வாறு செய்வது மூலம் நம் மனதில் எளிதில் நிற்கும்
நாம் படிக்கும் முறையினை ஒரு கால அட்டவணை வைத்து முறையாக காலத்தினை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட காலத்திலேயே படித்து முடிக்க உதவி புரியும். இவ்வாறு நாம் ஒவ்வொரு பாடத்திற்கும் கால அளவை பிரித்து பயன்படுத்துவதன் மூலம் நேரத்தை குறைக்கலாம் . குறிப்பிட காலத்தில் படித்து முடித்துவிடீர்கள் என்றால் மீதமுள்ள நேரத்தை REVISION உங்களின் மனப்பாட சக்தியை அதிகபடுத்தலாம்.
நாம் படித்து கொண்டே இருந்தால் மட்டும் தேர்ச்சி பெற முடியாது அதற்கேற்றவாறு நாம் பலமுறை பயிற்சி முறைதேர்வினை எழுதி பார்க்கவேண்டும். இதேபோல் REVISION ம் அடிக்கடி பார்க்க வேண்டும்.
TNPSC க்கு படிக்க முதலில் நாம் தமிழ் பாடபுத்தகத்தை அதிகம் படிக்க வேண்டும் அதிக கவனத்தை தமிழுக்கும் கணிதத்திற்குமு் பிறகு மற்ற அறிவியல் போன்ற பாடங்களிக்கு குறைந்த கவனம் செலுத்தினால் போதும்.
ஒரே நேரத்தில் 2 3 தேர்விற்கு தயாராகக் கூடாது ஒரு தேர்வினை மற்றும் இலக்காக வூயுங்கள்
நீங்கள் படிக்கும் நேரமானது இந்த நேரத்தில் தான் படிப்பேன் அந்த நேரத்தில் தான் படிப்பேன் என்று கூறாமல் நமக்கு எந்த நேரம் கிடைக்குமோ அந்த நேரத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டால் உங்கள் சூழ்நிலையை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகம் போன் மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தி உங்களின் தேர்வை இலக்காக வைத்து அதில் வெற்றிபெற உங்களை ஊக்கபடுத்த தன்னம்பிக்கை நிறந்த வீடியோ அனுபவசாலிகள் சிலரின உரையாடல் போன்றவற்றை காணலாம் எனவே இதன் மூலம் நீங்கள் தேர்வில் வெற்றிப்பெறலாம்.
Related: tnpsc study tips tamil