பெரும்பாலான ஆண்கள் ஒரு பெண் தனது காதலை முறித்து கொண்டு சென்றவுடன் தனது வாழ்க்கையே அவ்வளவுதான் முடிந்துவிட்டது என நினைத்து தினம் தினம் அவளை நினைத்து பைத்தியம் போல சுத்தி கொண்டு இருப்பார்கள். இப்படி நீங்கள் நினைக்கும் வரை உங்களின் வாழ்க்கை முடிந்தது போல தான் தோன்றும் .

ஆனால் உங்கள் காதலியோ மற்றவர்களோடு சந்தோஷமாக தான் இருக்கிறாள் நீங்கள் கஷ்டபடுகிறீர்கள் என்று தெரிந்தும் அவள் உங்களை விட்டு சென்றால் இதற்கு காரணம் நீங்கள் வீக்காக இருப்பதுதான் அதாவது அவளிடம் நீங்கள் ஆண்போல நடந்துகொள்ளாமல் ஒரு பெண் போல நடந்து கொள்கிறீர்கள் இதுதான் பிரச்சனை .

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் எப்போதும் அவளை பற்றியே நினைத்து கவலைபடுவது உணர்வு ரீதியாக சோர்வடைவது எனலாம் எப்போதும் அவளிடம் பேசுவது அவளை நினைத்தே பொழுதை கழித்தீர்கள் என்றால் எந்த பெண்ணுக்கும் உங்களை பிடிக்காது.

எனவே வீக்காக இருக்காமல் ஒரு வலிமையான ஆணாக இருங்கள் அப்போதுதான் உங்களுடைய காதலி எப்போதும் உங்களுடனே இருப்பாள் எனவே பிரச்சனை அவளிடம் இல்லை உங்களிடம் தான் இருக்கிறது வீக்காக இருக்காமல் உங்களுடைய வாழ்க்கையின் இலக்குகள் மீது கவனம் செலுத்துங்கள் ,உலகை சுற்றுங்கள்,உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லுங்கள் ,உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழுங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருங்கள். இப்படி இருந்தால் எந்த பெண்ணும் இல்லாமல் கூட உங்களால் மிகவும் சந்தோஷமாக இருக்க முடியும் என நிரூபியுங்கள்.

இப்படி நீங்கள் வாழ்ந்தால் எந்த பெண்ணாக இருந்தாலும் உங்களின் மீது ஈர்க்கபடுவாள் இப்போது உங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்ற காதலி மீண்டும் திரும்ப வருவாள். எனவே உங்கள் காதலி உங்களை விட்டு சென்றால் போனால் போகட்டும் என நினையுங்கள் உங்களை விட்டு சென்றதால் அவளுக்கு ஏற்படும் இழப்பை காண்பியுங்கள் எனவே எப்போதும் தன்னம்பிக்கையுடன் நேர்மறையான சிந்தனைகளுடன் இருந்தால் அனைவருக்கும் உங்களை பிடிக்கும் காதலில் மட்டுமல்ல வாலகையிலும் வெற்றி பெறுவீர்கள்.
தொடர்புடையவை: இந்த அறிகுறி இருந்தால் அந்த பெண் உங்களை காதலிக்கிறாள்