how to get it job
வணக்கம்! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் மற்றும் மாணவர்கள் ஐ டி துறையில் வேலையை பெற வேண்டும்(how to get it job) என என்னுகிறார்கள் இதற்கான முக்கிய காரணம் மற்றதுறைகளை விட ஐ டி துறையில் சம்பளம் அதிகம் மற்றும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே கூட வேலைப்பார்க்கலாம். இந்த வேலையை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்
communication skills
ஐ டி துறையில் வேலையை பெற வேண்டும் என என்னினால் முதல் முக்கிய திறன் ஆங்கில புலமை எனலாம் பெரும்பாலான நிறுவனங்களில் நீங்கள் வேலையை பெற இதுதான் அடிப்படை தகுதி ஆகும். எனவே உங்களின் ஆங்கிலம் பேசும் புலமையை வளர்த்துகொள்வதில் முதலில் கவனத்தை செலுத்துங்கள்.
தொடர்புடையவை: சரமாக ஆங்கிலம் பேசுவது எப்படி
programming தேவையா
இந்த ஐ டி வேலையை பெற அனைவரும் நினைப்பது கண்டிப்பாக நமக்கு programming language தெரிந்திருக்க வேண்டுமென்று ஆம் அது அவசியம்தான். ஆனால் programming- அல்லாத நிறைபிரிவுகள் இங்கு நிறைய உள்ளன எடுத்துகாட்டாக:DIGITAL MARKETING,NETWORK ADMIN,CLOUD ARCHITECT,GRAPHIC DESIGNER,IT SUPPORT SPECIALIST,SOFTWARE QUALITY TESTERBPO,KPO-போன்றவையாகும் இவற்றிற்கு எல்லாம் அந்த துறைசார்ந்த அறிவு உங்களிடம் இருந்தால் மட்டுமே போதுமானது.முக்கியமான விசயம் என்னவென்றால் developer-களை விட இவர்களின் ஊதியத்தில் மாற்றமிருக்கும் இது அந்தந்த நிறுவனங்களை பொருத்து மாறுபடும்.
மாணவர்கள் எப்படி வேலையைபெறுவது
நீங்கள் மாணவராக இருந்தால் நீங்கள் செய்யக்கூடிய முதல் விசயம் என்னவென்றால் ஐ டி துறையில் எத்தனை பிரிவுகள் உள்ளன அவற்றில் எத்தனை வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை முதலில் ஆராயுங்கள். உங்களுக்கு கோடிங் அருமையாக வரும் என்றால் ஏதாவது ஒரு programming language-ஐ மட்டும் தேர்வு செய்து அதில் அதிகம் கவனம் செலுத்துங்கள் அதைவிட்டுட்டு அனைத்தையும் படிப்பதை தவிர்த்துவிடுங்கள். இதும்டுட்மல்லாமல் DATA STRUCTURES ALGORITHM மற்றும் OOPS போன்றவற்றை அறிந்துகொள்வது உங்களுக்கு மேலும் வலுசேர்க்கும்.
கோடிங் வரவில்லையென்றால் மேலே குறிப்பிட்ட ஒரு ஏமாவது ஒரு துறையை தேர்வு செய்து அதை படித்து கற்றுகொண்டு ஒரு சான்றிதழை பெற்றுகொள்ளுங்கள். இந்த சான்றிதழ்கள் முக்கியமா என்று கேட்டால் கிடையாது ஆனால் நீங்கள் என்ன கற்றுகொண்டீர்கள் என்பதே முக்கியம் பெரும்பாலும் ஆன்லைன் கோர்ஸ்களை தேர்வு செய்யுங்கள் ஏனெனில் கோச்சிங் சென்டரில் 50 முதல் 1 இலட்சத்திற்கு மேல் கூட ஆகலாம்.
இப்போதுதான் கல்லூரியில் பயில்கறீர்கள் என்றால் உங்களது கல்லூரிக்கு கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடைபெறும் அதில் முதல் சுற்று இந்த திறனறி தேர்வு(aptitude round) இந்த சுற்றை நீங்கள் எப்படி வெற்றிகொள்வது என தெரிந்துகொள்ளவேண்டும். அதன்பிறகு அதனை பற்றி படிக்கவேண்டும்.aptittude round-களில் வெற்றிபெற தளங்கள் உதவும் – prepinsta,indiabix
ஐ.டி இரண்டு பிரிவுகள்
இந்த ஐ .டி நிறுவனங்கள் இரண்டு பிரிவுகளாக உள்ளது ஒன்று product based company மற்றொன்று service based company எனலாம். இந்த product based company-ல் பெயருக்கேற்றவாறே அந்த ஒரு ஐ.டி நிறுவனம் தனக்கென்று product-களை வைத்திருக்கும் எடுத்துகாட்டாக கூகிள் மற்றுத் பேஸ்புக் இந்த நிறுவனங்கள் தங்களுடைய product-களை உருவாக்குவது மற்றும் அவற்றை மேம்ம்படுத்த வேலைகளை செய்வார்கள் இங்கு service based company-களை விட ஊதியம் அதிகம் உங்களுக்கு வேலையில் அதிகளவு அழுத்தம் இருக்காது எனலாம்.
service based-நிறுவனங்கள் என்பவை உங்களுக்கு ஏதேனும் website மற்றும் mobile app-தேவைபட்டால் அதை செய்துகொடுப்பார்கள் இவர்களைதான் service based company – என்பார்கள் எடுத்துகாட்டாக infosys மற்றும் tcs போன்றவை இங்கு ஊதியம் சற்றே குறைவு எனலாம்.
எனவே மேற்கண்ட வழிமுறைகள் மற்றும் தகவலை ஆராய்ந்து உங்களால் ஐ.டி துறைக்குள் நுழைய முடியும்.