உங்கள் காதலியிடம் நீங்கள் பேசும்போது இந்த ஏழு அறிகுறிகளை நீங்கள் அவளிடம் கண்டால் கண்டிப்பாக அந்த பெண் உங்களை காதலிக்கிறாள் என்று அர்த்தம். இந்த ஏழு அறிகுறிகளில் 5 இருந்தாலே போதும் அவள் உங்களை காதலனாக ஏற்றுக் கொள்வாள்.
சிறு விஷயங்களை கூட ரசிப்பாள்
நீங்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களை கூட அந்த பெண் ரசிப்பாள் நீங்கள் சொல்லும் மொக்க காமெடிக்கும் விழுந்து விழுந்து சிரிப்பாள் இதன் வழியாக அவள் உங்களை கவர நினைக்கிறாள் இந்த அறிகுறி அவளிடம் தென்பட்டால் கண்டிப்பாக அவள் உங்களை காதலிக்கிறாள் என்று அர்த்தம்.
நீண்ட நேர பார்வை
ஒரு பெண் உங்களின் கண்ணை நீண்ட நேரத்திற்கு பாரக்கிறாள் என்றால் கண்டிப்பாக அவள் உங்களின் மீது ஆர்வமாக உள்ளார் என்று அர்த்தம். ஏனெனி்ல் நீண்ட நேர பார்வை என்பது நம் உணர்ச்சி ரீதியாக வாழ்க்கை துணையை தான் பார்க்க தூண்டும் எனவே இதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அவள் உங்களை ஈர்க்க நினைப்பாள்
எப்பொழுதும் அந்தபெண் உங்களை ஈர்க்க நினைப்பாள் எடுத்துக்காட்டாக உங்களுக்கு உணவு சமைப்பது உங்களுக்கு உடல் சரியில்லை என்றால் அவளுக்கு வலிப்பது போல் உங்களிடம் பேசுவது போன்றவை அவள் உங்களை கவர நினைக்கிறாள் என்பதாகும்.
தொட்டு பேசுவது
ஒரு பெண் உங்களை அடிக்கடி தொட்டு பேசிகிறாள் என்றால் கண்டிப்பாக அவள் உங்கள் மீது காதல் கொண்டுள்ளதாக அர்த்தம். ஏனென்றால் பெண்கள் அவ்வளவு எளிதில் யாரையும் தொட்டு பேச மாட்டார்கள் அடிக்கடி உங்களை அவள் தொடுகிறாள் என்றால் அவள் உங்களிடம் நெருக்கமாக இருக்க விரும்புகிறாள் என்று அர்த்தம்.
சம்மந்தமே இல்லாமல் பேசுவாள்
ஒரு பெண் உங்களிடம் காரணமே இல்லாமல் வந்து பேசுவாள் என்ன விஷயம் என்று நீங்கள் கேட்டால் சும்மா என்று மலுப்புவாள் . சம்மந்தமே இல்லாமல் உங்களுக்கு போன் செய்து உன்கிட்ட பேசனும் போல இருக்கு என சொல்லுவாள் இப்படி அவள் கூறினால் என்றால் கண்டிப்பாக அவள் உங்களை காதலிக்கிறாள் என்று தான் அர்த்தம்.
பொறாமை படுவாள்
நீங்கள் உங்கள் காதலியின் நண்பர்களோடு அல்லது மற்ற பெண்களோடு பேசும்போது அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அவள் பொறாமை படுவாள் இப்படி அவள் காணப்பட்டால் அவள் உங்களை காதலிக்கிறாள் என்று அர்த்தம்.
மறைமுகமாக சொல்லுவாள்
உங்கள் காதலி உங்களை காதலிக்கிறேன் என்று சொல்லாமல் மறைமுகமாக எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, உன் கூடவே இருக்கணும் போல இருக்கு,உன்கிட்ட பேசிட்டு இருக்கனும்போல இருக்கு என்று சொன்னால் 100% அந்த பெண் உங்களை காதலிக்கிறாள் எப்போது இந்த வார்த்தைகளை அவள் கூறுகிறாளோ நேரத்தை கடத்தாமல் அப்பொழுதே நீங்களும் உங்களின் காதலை சொல்லிவிடுங்கள்.சொல்லிவிடுங்கள்.