வணக்கம் இன்றய பதிவில் நம் வாழக்கையில் மிக முக்கியமான விஷயமான நமது வாழ்க்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை பற்றிதான் பார்க்க போகிறோம்.
ஒரே மாதிரியான மனநிலை
நீங்கள் எந்த வகையான வாழ்க்கை முறையை விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும். இந்த முடிவு மிகவும் முக்கியமானது, ஆனால், அதிர்ஷ்டவசமாக, நீங்கள் உங்க வாழ்க்கை துணையுடன் தீவிரமான நேரத்தை செலவிடத் தொடங்கியவுடன் உங்கள் துணை எப்படி வாழ விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரியும். நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிட விரும்புகிறீர்கள், உங்கள் நண்பர்களுடன் எவ்வாறு இருக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒரே மாதிரியான யோசனைகள் மற்றும் மனநிலை இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணை செய்யும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் விரும்ப வேண்டியதில்லை என்றாலும், முக்கிய முடிவுகள் அல்லது பொறுப்புகள் தேவைப்படும் விஷயங்களைப் பற்றி நீங்கள் இருவரும் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடாது.
எடுத்துக்காட்டாக, உங்கள் வாழ்க்கை துணை ஒரு வீட்டை வாங்க விரும்பினால் அதில் உங்கள் இருவருக்கும் இடையில் ஒரே மாதிரியான மனநிலை இருக்க வேண்டும் இல்லை என்றல்ல இவை நீண்ட கால மகிழ்ச்சிக்கான முக்கிய தடைகளாகும்.
உங்கள் துணை எதிர் ஆற்றலை பெற்றிருக்க வேண்டும்
ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வகையான ஆற்றல் (ஆண்மை மற்றும் பெண்மை) கொண்டிருந்தால் அவர்கள் இருவரும் ஈர்க்கப்பட மாட்டார்கள் அதாவது காதிலிக்க மாட்டார்கள். அதாவது ஆணு மாஸ்குளின் ஆக இருந்தால் அந்த பெண் ஃபெமினைன் ஆக இருக்கவேண்டும் அதாவது எதிர் ஆற்றல் மட்டுமே ஈர்க்கப்படும். அதாவது எதிர் எதிர் செயல்கள் கொண்டவர்கள் அதிகம் ஈர்க்கப்படுவர்.
உதாரணமாக: நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன், எனக்கு ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு, நானும் அந்தப் பெண்ணும் ஒரே அணியில் இருந்தோம்,
அவள் டீம் லீடர் ஆனாள். அவள் என்னைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தாள், என்னை ஆதிக்கம் செலுத்தினாள், 3 நாட்களுக்குள் நானே அவளை வெறுத்தேன். ஏனென்றால் அவளுக்கு ஆண் சக்தி இருக்கிறது, எனக்கும் ஆண் சக்தி இருக்கிறது, இதனால் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்க வாய்ப்பில்லை. எதிர் எதிர் எண்ணம் கொண்ட இருவரே இணைவர் எனவே எதிர் ஆற்றல் கொண்ட துணையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே எந்த பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
RELATED: What Is Masculine Feminine Energy?
அக்கறை மற்றும் உறுதுணையாக இருப்பது அவசியம்
உங்கள் வாழ்க்கை துணை கண்டிப்பாக உங்கள் மீது அக்கரையுடனும் நீங்கள் செய்யும் செயலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இப்படி நீங்கள் இருவரும் இருபதால் அதிக அன்பும் இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதல் அதிகமாகும். எனவே இவை இரண்டும் மிக முக்கியம்.
துணையாக இல்லாமல் தோழன் தோழியாக இருக்க வேண்டும்
வாழ்க்கை துணையாக மட்டும் அல்லாமல் சிறந்த தோழன் தோழியாக இருப்பது மிக முக்கியம். இப்படி இருக்கும்போது கருத்து வேறுபாடு மற்றும் ஒளிவு மறைவே இருக்காது. எனவே உங்கள் வாழ்க்கை துணை சிறந்த தோழன் தோழியாக இருப்பதும் அவசியம்.