how rains are formed
நாம் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஒன்று நீராகும் . நம் வாழ்வாதரங்களில் ஒன்றான நீர் நாம் உயிர்வாழ்வதற்கு மிகவும் அவசியம். இந்த நிலத்தடி நீர், மழைநீர் நமக்கு எப்படி கிடைக்கிறது எங்கு உருவாகிறது என நமக்கு பல சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே இந்த மழைநீர் எப்படி உருவாகிறது(how rains are formed) இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
மழை உருவாக முக்கிய காரணம் வானில் இருக்கும் மேகங்கள் எனலாம். நம் பூமியில் உள்ள நீரை சூரியன் தனது வெப்பத்தினால் ஆவியாக்கும் அதாவது நம் பூமியில் உள்ள நிலத்தடி மற்றும் ஆறு குளம் ஏரி போன்ற நீர் நிலைகளில் உள்ள நீரை சூரியன் தனது வெப்பத்தினால் அதனை உறிஞ்சி நீராவியாக்கி மேகங்களில் சேர்க்கும்.
இவ்வாறு நீராவியாக மாறும் நீரை சிறு சிறு துளிகளாக மேகங்களில் சேர்க்கும் இவ்வாறு மேகம் அதிகளவு நீரை சேர்த்து தனக்குள் வைத்திருக்கும் இவ்வாறு உள்ள மேகங்கள் தன்னுள் நீரை நமக்கு மழையாக தருகிறது. இவ்வாறு பொழியும் மழை ஆறு ஏரி வழியாக கடலுக்கு செல்லும் இவ்வாறு கடலில் உள்ள நீரை மீண்டும் ஆவியாக்கி நீராவியாக மாற்றி மேகங்களில் சேர்த்து மீண்டும் நமக்கு மழையை தருகிறது.
நீராவிக்கு உதாரணமாக நம் வீட்டில் பயன்படுத்தும் இட்லி பாத்திரத்தை நினைவுகூறலாம். இந்த இட்லி பாத்திரத்தில் நாம் அடியில் நீர் வைத்து சமைப்போம் நாம் இட்லி வேகவைத்து எடுக்கும்போது இட்லி பாத்திரத்தின் மூடியில் அதிகளவு நீர் இருப்பதை காணலாம் இந்த நிகழ்வு தான் நீராவி எனப்படும் அதாவது நீர் ஆவியாகி வெளியே செல்லமுடியாமல் அதிகளவு மூடியின் மீது படுவதால்தான் இட்லி பாத்திரத்தின் மேல் அதிகளவு நீர் துளிகள் இருக்கும்.இந்த நீராவி தத்துவமே மழைபொழிவு வரக் காரணமாகும். இவ்வாறு நீர்காற்று மற்றும் மழைமேகங்கள் இவை அனைத்தும் மழைபொழிய காரணமாக உள்ளன.
மழை ஏன் ஒரே நேரத்தில் எல்லா இடங்களில் பொழிவதில்லை
நாம் சில நேரங்களில் கவனித்திருக்கலாம் ஒரு இடத்தில் மழை பொழியும்போது வேறொரு இடத்தில் மழை பொழியாது இதனை நீங்கள் பேருந்தில் செல்லும்போது கவனித்திருக்கலாம். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்றால் எல்லா மேகங்களிலும் நீர் சேர்த்து வைக்கப்படுவதில்லை நீர் சேர்த்துவைக்கப்படும் மேகங்ககள் மட்டுமே நமக்கு மழையை தருகிறது. இவ்வாறு எல்லா இடத்திலும் நீர் மேகம் இல்லாததால் எல்லா இடத்திலும் மழை பொழிவதில்லை இதன் காரணமாகத்தான் ஒரு இடத்தில் மழைபொழியும் வேறொரு இடத்தில் மழை பொழிவதில்லை.
ஆலங்கட்டி மழை
நாம் சாதரண மழை எப்படி உருவானது என்பதை பார்த்தோம், அதுபோல் ஆலங்கட்டி மழை பொழிவதை பார்ப்போம். சாதரண மழை எப்படி மேகங்களில் நீர் துளிகள் சேர்த்து வைக்கப்படுகிறதோ அதேபோல் தான் ஆலங்கட்டிமழையும், நீர் மேகங்ளில் சேர்த்து வைக்கப்படும் நீர்துளியில் கீழ்பகுதியில் நீராகவும் மேல்பகுதியில் -10 டிகிரியாக இருப்பதால் பனிட்டியாக மாறி ஆலங்கட்டி மழையாக வருகிறது. கீழிருக்கும் நீரை மேல்நோக்கி ஈர்த்து வெப்பநிலை குறைவதால் -டிகிரி அளவிற்கு செல்வதால் நீர் பனிகட்டியாகி அதிக எடையினால் கீழ்நோக்கி நமக்கு ஆலங்கட்டி மழையாக பொழிகிறது.
அமில மழை
சாதரண மழை எவ்வாறு உருவாகிறதோ அதேபோல் தான் இந்த அமில மழையும் ஆனால் எப்படி அமிலமழையாக பொழிகிறது என்று கேள்வி வரலாம் . இந்த அமில மழை கிராமங்களில் பொழிவதில்லை நகர்புறங்களில்தான் பெரும்பாலும் பொழிகிறது இதற்கு காரணம் அங்குள்ள மாசடைந்த காற்று, ஏனென்றால் நீர் நீராவியாக மாறும்போது சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்களையும் தன்னுள் நீராவியாக எடுத்துச்சென்று மேகங்களில் சேர்த்துவைக்கும் இவ்வாறு எடுத்துச்செல்லும் நீர் மாசுகளுடன் இனணந்து அமிலமாக மாறும். இவ்வாறு அமிலமாக மாறும் மேகம் அதே இடம் அல்லது மேகம் நகர்ந்து சென்று வேறொரு இடத்தில் கூட மழையாகபொழியலாம்.
Related:புயல் எப்படி உருவாகிறது