பேய் இருக்கா இல்லையா Ghost explanation
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் அந்தகாலம் முதல் இன்றைய நாள் வரை ஒரு பேச்சு பொருளாக இருப்பது பேய் இருக்கா இல்லையா என்பதுதான் உண்மையில் பேய் உள்ளதா இல்லையெனில் ஏன் இன்றளவும் பேயை பற்றிய கேள்விகளும் மக்களிடையே பேசபட்டு வருகிறது. இதை பற்றிய தெளிவான விளக்கத்தை இன்றைய பதிவில் காண்போம்.
பேய்கள் பற்றிய விளக்கம்
இந்த உலகில் உள்ள மக்களில் கிட்டதட்ட 70% மேற்பட்ட மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தபடுகிறது அதுஎன்னவென்றால் உண்மையில் பேய் இருக்கா இல்லை என்பதுதான் அதில் 46% மக்கள் பேய் உள்ளது என்று நம்புகிறோம் என்றும் அதிலும் 22% மக்கள் நாங்கள் பேய்களை பார்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர் இது ஆய்வு நடத்தியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேய் என்பது நம் உடல் இறந்த பிறகு நம் உடலில் இருந்து வெளிவருகின்ற ஆத்மாவைதான் பேய் என கூறுகிறார்கள்.
ஆத்மா பற்றிய விளக்கம்
ஆத்மா என்பது நம் உடலில் இங்குதான் உள்ளது என்று எவராலும் குறிப்பிடமுடியாது அதாவது ஆத்மா என்பதே இல்லை என்று தான் கூற வேண்டும். நம் உடல் பாகங்கள் அனைத்தும் இயங்கினால் மட்டுமே நாம்மால் வாழமுடியும் எனவே குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கிறது என்று கூற முடியாது. ஆத்மா என்ற ஒன்றே இல்லாத பொழுது பேய் என்ற ஒன்று எப்படி இருக்கும் சற்று நீங்களே சிந்தியுங்கள்.
பேயை பார்த்தவர்களுக்கான விளக்கம்
பெரும்பாலான மக்கள் பேய்களை இரவில் தான் கண்டோம் என்று குறிப்பிடுவார்கள் இதற்கான காரணம் நம் முன்னோர்கள் வழியாக வந்த பரம்பரை ஜீன்கள் என்று கூறலாம் முந்தைய காலங்களில் வாழ்ந்த முன்னோர்கள் இரவை கண்டு அஞ்சுவார்கள் இரவில் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் இரவில் தூங்குவது மட்டுமே வழக்கம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இரவிலும் நாம் வேலைக்கு செல்கிறோம் பயணங்கள் மேற்கொள்கிறோம் அப்பொழுது நாம் இருட்டில் எதையாவது கண்டால் அது நம் அதை பேய் என என்னுகிறோம் இதைதவிர பயம் ஏற்பட மற்றொரு காரணம் இந்த பரம்பரை ஜீன்கள் இருப்பதால்தான் இரவை கண்டு பயப்படுகிறோம் அவ்வளவுதான் இதை தவிர வேறொன்றும் இல்லை.