புரட்சி இயக்கங்களை எல்லாம் அலுங்கடித்து வன்முறையற்ற வழி எனக்கூறி சத்தியாகிரகம் என்ற முட்டாள்தனமான பாதையை நோக்கி இந்திய சுதந்திர போராட்டத்தை திசைதிருப்பியவர் காந்தி எப்போதும் எல்லாவற்றிலும் காந்தி இந்து மதத்தை நுழைத்தார் இதன் காரணமாக ஆங்கிலேயரின் பிரித்தாலும் கொள்கைக்கு அவர் உடந்தையாக செயல்பட்டார் ஆகவே காந்தி என்பவர் ஒரு பிரிட்டிஷ் அரசின் ஏஜென்ட். தரகர் காந்தி குறித்த இத்தகைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது பாகிஸ்தானை சேர்ந்த தலைவர்களோ புரட்சிப்பாதையை முன்னெடுக்கும் இடது இடதுசாரி இயக்கங்களோ அல்ல. ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி அதுவும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும் இந்திய பத்திரிக்கை மன்றத்தின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்சு. காந்தி மீதான கட்சுவின் இந்த விமர்சனத்தால் நாடே கொந்தளித்தது அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டன குரல்களை எழுப்பினர் அரசியல் களமே அல்லுசிலானது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. காந்தி மீதான விமர்சனங்களில் பத்தோடு பதினொன்றாகவே ஆங்கிலேயர்களின் தரகர் தான் காந்தி என்ற கட்சியின் விமர்சனமும் பார்க்கப்பட்டது. காந்தி மீது விமர்சனம் வைக்கப்படுவது இது ஒன்றும் புதிதல்ல வரலாறு முழுவதும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் காந்தியை நிழல் போல தொடர்ந்தே வந்துள்ளன காந்தி தான் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தார் காந்தி தான் இந்தியாவின் தேசப்பிதா காந்தியம்தான் அனைத்து பிரச்சினைகளுக்குமான சர்வ லோக நிவாரணி, காந்தி தான் அகிம்சையின் அடையாளம் இந்தியாவின் அடையாளமும் முகமும் கூட அவர்தான். இப்படியான காந்தி குறித்த சித்திரங்கள் பல பாடத்தில் இருந்து இந்தியர்கள் அனைவருக்கும் சொல்லித் தரப்பட்டு வருகிறது.
சர்ச்சைகளும் காந்தியும்
அதே வேளையில் காந்தியின் அகிம்சை முறையிலான போராட்டத்தால் தான் இந்தியாவின் சுதந்திரம் தாமதமானது பொதுவுடமை சித்தாந்தம் இந்தியாவில் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு பிரிட்டிஷ் அரசு காந்தியை தூக்கிப் பிடித்தது என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் காந்தி வாழ்ந்த காலத்திலிருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது ஒரு முனையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஹீரோவாக நிறுத்தப்படும் அதே காந்தி தான் விடுதலைப் போராட்டத்தின் வில்லனாகவும் சிலரால் கருதப்படுகிறார். அப்படியானால் உண்மையில் காந்தி என்பவர் தான் யார் அவரின் சித்தாந்தம் தான் எத்தகையது நேதாஜி போன்ற பிற தலைவர்களின் தியாகங்களை அவர் இருகடிப்பு செய்தார் மரண தண்டனையை அவர் தடுக்க முயலவில்லையா என்பது உண்மையா? சாதிய ஒழிக்க காந்தி மேற்கொண்ட முன்னெடுப்புகள் என்னென்ன காந்தி ஒரு இந்துத்துவவாதியா அப்படியானால் இந்து மதத்தை சேர்ந்தவராலேயே அவர் சுட்டுப்பட காரணம் தான் என்ன இப்படியான காந்தி குறித்து அடிக்க கேள்விகள் எழுகின்றன கேள்விகளுக்கு எல்லாம் முடிந்தவரை விடைக்கான முயலும் சிறு முயற்சியை யாருக்கான தலைவர் காந்தி என்ற சிறப்பு தொகுப்பு.
வாழ்க்கை வாரலாறு
1915 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிலிருந்து மோகன்தாஸ் கரம்சன் காந்தி என்கிற நபர் இந்தியா திரும்பிய போது அவருக்கு வயது 45. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட அப்போது 29 வருடங்கள் நிறைவு பெற்றது அன்று காங்கிரஸ் கட்சியானது இந்தியாவின் மேற்கில் கொஞ்சம் கிழக்கில் கொஞ்சம் தெற்கில் கொஞ்சம் என்று பம்பாயிலும் கல்கத்தாவிலும் சென்னையிலும் ஆங்கிலம் பேசும் உயர் குடி வர்க்கத்தினரின் இயக்கமாகவே இருந்து வந்தது. கூடவே இந்துத்துவ சாதி ஆதிக்க வர்க்கத்தினரின் பிடியிலும் காங்கிரஸ் கட்சி இருந்தது அப்படியான காங்கிரஸ் கட்சியை ஆதிக்க மனநிலை படைத்தவரின் வசம் இருந்த மீட்டு வெகுஜன மக்களின் இயக்கமாக மாற்றியவர்களில் முதன்மையானவர் மோகன்தாஸ் கரம்சன் காந்தி.
பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினரிடம் அனைத்து தரப்பு மக்களிடமும் காங்கிரசை கொண்டு சேர்த்தார் தானும் சென்று சேர்ந்தார். இத்தனைக்கும் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி பொறுப்பேற்றது ஒரு வருடம் மட்டுமே ஆனால் தனது தனித்த ஆளுமையால் வெகு விரைவிலேயே காங்கிரஸின் முகமாகவே காந்தி மாறினார். தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் கட்சியின் பிற தலைவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கினார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு மக்களை ஒன்று திரட்ட கட்சியின் வேறு போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார் அவர்களை ஊக்குவித்தார். விளைவு வெகுவிரைவில் இந்திய மக்கள் அனைவரையும் சுதந்திரப் போராட்டம் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றினைத் திறந்தார் காந்தி.
இவை அனைத்திற்கும் மேலாக சாமானியர்களும் வெகு எளிதில் அணுகக் கூடியவராகவும் காந்தி இருந்தார். வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சுரண்டலுக்கு உள்ளானவர்களுக்கும் ஆதரவாகவும் காந்தி செயல்பட்டார் அப்படியானால் வரலாறு முழுக்க அவர் விமர்சிக்கப்பட்டு வர என்ன காரணம் என்கிற கேள்வி எங்கே எழலாம்.
சர்ச்சைகளும் விமர்சனங்களும்
அதற்கு விடை காண காந்தி மீதான விமர்சனங்களில் இருந்தே அவரை அறிய முயல்வது சரியாக இருக்கும் தென்னிந்தியாவில் காந்தியை அதிகம் விமர்சித்தவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார் தொடக்கத்தில் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்த பணியாற்றிய பெரியார் காந்தியின் கொள்கைகள் சாதியை ஒழிக்கவும் பார்ப்பனிய ஆதிக்கத்தை அளிக்கவும் உதவாது என பின்னர் முடிவெடுத்த 1925 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகினார் அன்று தொடங்கி காந்தி இறக்கும் வரை காந்தியத்தையும் காங்கிரசையும் விமர்சித்து பேசியும் எழுதியும் வந்தார்.
ஆனால் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அந்த செய்தி பெரியாரைப் பெரிய அளவில் பாதித்தது காந்தியின் படுகொலை குறித்து தனது கண்டனத்தை எழுத்திலும் பேசிலும் எதிரொலித்தார் இந்தியாவிற்கு காந்தி தேசம் அல்லது காந்திஸ் தான் என்ற பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பெரியார் இந்து மதத்திற்கு காந்தி மதம் காந்தீனியம் என பெயர் மாற்றம் செய்யலாம் எனவும் யோசனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் காந்தியின் மறைவுக்கு அனுதாப கூட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் அக்கூட்டங்களை காந்தியின் வழியில் ஆடம்பரம் இல்லாமல் ஏற்படும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் அதுவரை காந்தியை கடுமையாக விமர்சித்து வந்த பெரியார் திடீரென காந்தியின் இறப்புக்குப் பின் மனம் மாறி அவரை புகழ்ந்து தள்ளி கருத்துக்கள் தெரிவித்ததும் ஆதரவு கட்டுரைகள் எழுதியது விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு பதில் அளித்த தந்தை பெரியார் வர்ணாசிரம ஆதரவு திராவிட நாடு எதிர்ப்பு ஆகிய இரண்டு கொள்கைகளை தவிர காந்திக்கும் தனக்கும் பெரிய அளவில் கருத்து முரண்பாடு இல்லை என விளக்கம் அளித்தார் .
தொடர்ந்து குடியரசு உள்ளிட்ட அனைத்து திராவிட கழக இதழ் வழியிலும் காந்தியை புகழ்ந்தும் அவரது கொலைக்கு காரணமான இந்துத்துவ வரியை கண்டித்தும் கட்டுரைகள் எழுதப்பட்டன புத்தமரை இழந்தோம் உலகமெங்கும் அழுகுரல் என்று காந்தியின் இளம் குறித்து எழுதினார் சி. என் அண்ணாதுரை. இவற்றில் இருந்து திராவிட சித்தாந்தத்திற்கும் காந்தியத்திற்கும் பெரிய முரண்பாடுகள் இல்லை என்பதையும் வர்ணாசிரமம் மற்றும் திராவிட நாடு குறித்தான கருத்துக்களில் மட்டுமே காந்தியமும் திராவிடமும் முரண்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் காந்திய கொள்கைகளின் ஆதரவாளர்.
அம்பேத்கரின் விமர்சனங்கள்
தென்னிந்தியாவில் காந்தியை பெரியார் அதிகம் விமர்சித்தார் என்றால் இந்தியாவில் காந்தியையும் காந்தியத்தையும் அதிகம் விமர்சித்த நபர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். காங்கிரஸ் சுதந்திரத்திற்காக போராடுகிறது என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு யாருடைய விடுதலைக்காக அது போராடுகிறது என்பதும் மிக முக்கியம் என்றால் அம்பேத்கர் நீங்கள் எங்களை சார்ந்தவராக இல்லாத போது எங்களின் வேதனைகளை நீங்கள் அறியாதவராக உள்ளபோது எப்படி எங்களின் துயரம் குறையும் எனவும் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு காந்தியடித்த பதிலிலிருந்து சாதியை ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவர் காந்தி என்பதை புரிந்து கொள்ளலாம். காந்தி சொன்ன பதில் இதுதான் நான் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதை முடிவு செய்வதில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை ஆனால் கழிவுகளை அகற்றும் வேலை செய்வதற்கு ஒருவர் பிறந்த சாதிதான் அடிப்படை என்றால் அடுத்த பிறவியில் நான் ஒரு மலம் அழுபவரின் வீட்டில் பிறக்க விரும்புகிறேன் என்றால் காந்தி. ஆனால் சாதி மதம் வாரணாசிரமம் உள்ளிட்ட காந்தியின் கருத்துக்கள் தொடக்க காலத்தில் சற்று பிற்போக்குத்தனமாகவும் அடிப்படை தன்மை கொண்டதுமாகவும் காந்தி இறந்தது மறுப்பதற்கு இல்லை. ஆனால் கடைசி காலங்களில் முற்போக்கிற்கு நேர் எதிரான தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டே வந்துள்ளார் காந்தி. முன்னாள் முளைத்த காலை விட பின்னால் முளைத்த கொம்பு பலம் வாய்ந்தது என்பது போல காந்தியின் கடைசி கால கருத்துகள் பெருக்கோக்குத்தனத்திலிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து முற்போக்கு முகாமை சென்றடைந்தன.
தொடக்கத்திலேயே கூறியது போல எங்கெல்லாம் சாமானிய மக்கள் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் காந்தியின் கண்டன குரல்கள் எதிரொலித்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கிருஷ்ணரின் குழந்தைகளை என தெரிவித்த காந்தி அவர்களை அரிஜம் என்று கடைசி வரை அழைத்து வந்தார் சாதி அமைப்புக்கும் தீண்டாமைக்கும் எதிராக மேற்கொண்ட முன்னெடுப்புகளுள் முக்கியமானது ஹரிஜன் யாக்கின். 1933 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி அடுத்த பத்து மாதங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் நீண்ட யாத்திரை மேற்கொண்டார் காந்தி. அந்த யாத்திரையின் போது பல இடங்களில் ஆதிக்க சாதியினர் காந்திக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர் மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிநடிலும் மலர் தூவிகாந்தியை வரவேற்றனர் காந்தி மீதான முதல் கொலை முயற்சி நடைபெற்றது இந்த ஹரிஜன் யாத்திரையின் போது தான் என குறிப்பிடுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த யாத்திரையின் தாக்கியத்தை உணர்ந்தால் காந்தியை ஒன் மேன் ஆர்மி என வர்ணித்தார் காந்தியை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான செயல்களால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும் அதற்காக நான் கவலைப்படவில்லை நான் இந்து மதத்தை காப்பாற்ற வரவில்லை இந்து மதத்தின் முகத்தை மாற்றவே நான் விரும்புகிறேன் என தீண்டாமை கொடுமைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை பதிவு செய்கிறார் கரம்ச்காந்தி.
தாழ்த்தப்பட்டவர்களின் விவகாரங்களில் காந்திய அழைத்த தவறாக இன்றும் கருதப்படுவது அவருக்கும் அம்பேத்கருக்கும் இடையே 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பூனே ஒப்பந்தம் தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே பிரதிநிதிகளை தாங்களே தேர்வு செய்யும் வகையில் அவர்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனித்தொகுதி வழங்கும் கோரிக்கையை அம்பேத்கர் முன் வைத்தார். அவரின் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசும் ஏற்றுக்கொண்டது அதன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும் தனித்தொகுதிகளில் மிகப்பெரும் சாதியினர் வாக்களிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டது ஆனால் இதற்கு காந்தி கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார் மேலும் அப்போது ஏரவாடா சிறையில் இருந்த அவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். காந்தியின் இந்த உண்ணாவிரத போராட்டத்தால் ஒரு புறம் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்தது என்றால் மறுபுறம் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது இதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார் அம்பேத்கர் காந்தி அம்பேத்கர் இடையே புனே ஒப்பந்தமும் கையெழுத்தானது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அப்போதே கிடைத்திருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை இத்தனை ஆண்டுகளில் மேம்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் காந்தி அதற்கு எதிரணியில் நின்றார் தீண்டாமையை ஒழிக்க சாதியை ஒழிப்பதே மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் எனவும் இட ஒதுக்கீடு கேட்டு பெறுவது எந்த வகையிலும் நிரந்தர தேர்வாக அமையாது எனவும் உறுதியாக நம்பினார் காந்தி. மேலும் வரும் காலங்களில் சாதிய தீண்டாமைகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு விடும் சாதிய ரீதியான இட ஒதுக்கீட்டுக்கு அப்போ வேலை இருக்காது எனவும் கனவு கண்டார். ஆனால் அந்த 70 ஆண்டுகளில் சாதிய விவகாரங்களில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை என்றும் இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்கு எதிரான காந்தி செயல்பட்டது நிச்சயம் வரலாற்றுப் பிழை தான் எனவும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் பலர் இன்றும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
காந்தி மீதான இடதுசாரிய விமர்சனங்களில் முக்கியமானது பகத்சிங் மரண தண்டனை தடுக்க அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் காந்தி நினைத்திருந்தால் பகத்சிங் உள்ளிட்ட மூன்று பேரின் மரண தண்டனையை நிச்சயம் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதற்கு முயலவில்லை என இன்று வரை கூறி வருகின்றனர் ஆனால் தன்னால் முடிந்தவரை அனைத்து விதத்திலும் பகத்சிங்கை காப்பாற்ற காந்தி முயற்சி மேற்கொண்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பகத்சிங் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னரே அதாவது 1930 ஆம் ஆண்டுமே நான்காம் தேதியே வைசிராய்க்கு காந்தி கடிதம் ஒன்று எழுதினார். அதில் நாகூர் சதி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்ற அமைத்ததை கடுமையாக கண்டித்த காந்தி குறுக்கு வழியில் விசாரணையும் முடிக்கும் முயற்சி இது என்றும் அடக்குமுறை சட்டத்திற்கு ஒப்பானது எனவும் குற்றம் சாட்டுகிறார். பகத்சிங் சுகதேவ் ராஜ் குரு ஆகியோர் கைது செய்யப்பட்ட போது அவர்களை விடுவிக்க வைசிராய் எட்வினுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே வந்தார் காந்தி.
வைசிராய்க்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும் பட்சத்தில் புரட்சி படையினர் ஆயுதங்களை கைவிட தயாராக உள்ளதாக என்னிடம் உறுதி அளித்ததை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் என்று காந்தி கூறினார். தொடர் அழுத்தத்தால் மூவரின் தண்டனையை நிறுத்தி வைக்கலாம் என வைசுராயர் நினைத்தார் ஆனால் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றால் பஞ்சாப் மாகாண ஆளுநரும் அதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று மிரட்டி வந்ததால் வேறு வழி என்று 1931 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பகத்சிங் ராஜ்குரு சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர். ஒருவேளை காந்தியின் முயற்சியால் பகத்சிங்கின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தால் வன்முறைக்கு எதிரான அகிம்சை வழி போராட்டம் அடைந்த வெற்றியாகவே கருதப்பட்டிருக்கும் அப்போதும் அகிம்சையே வென்றிருக்கும் என்கின்றனர் காந்தியத்தின் தரப்பினர் சாதிய விவகாரங்களைப் போலவே மத விவகாரங்களும் காந்திக்கு அதிக அளவிலான எதிர்ப்புகளையும் அரசியல் எதிரிகளையும் பெற்று தந்தது சாதிய ரீதியில் பெருக்கோக்கான கருத்துக்களை கொண்டிருந்ததாக காந்தி விமர்சிக்கப்பட்டார் என்றால் மத விவகாரத்தில் நிலைமையே வேறு.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை
இந்து மத தலைவர்கள் காந்தியை இந்து மதத்திற்கு எதிரானவர் எனக் குற்றம் சாட்டினர். அதே வேளையில் மற்றொரு தரப்பினர் காந்தியை ஒரு இந்துத்துவவாதியாக சித்தரிக்க தொடங்கினர். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே எப்போதும் காந்தி கருத்துகளை தெரிவித்து வருவதாக விமர்சனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் காந்தி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பலமாக இருக்கவே விரும்பினார் காந்தி குறித்து முகமது அலி ஜின்னா தெரிவித்த கருத்து ஒன்று நான் இஸ்லாமியர்களின் பிரதிநிதி என்கிற முறையில் பேசுவது போலவே காந்தியும் இந்துக்களின் பிரதிநிதியாக பேசினால் அனைத்து சிக்கல்களும் தீர்ந்துவிடும் ஆனால் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்ற இரு தரப்பினரின் பிரதிநிதியாகவும் மிஸ்டர் காந்தி செயல்படுவது தான் மிகப்பெரிய சிக்கல் என்று குறிப்பிடுகிறார் சின்னா. இந்த ஒரு துன்பம் அனுபவித்தால் இஸ்லாமியர் வருத்தப்பட வேண்டும் இஸ்லாமியருக்கு துன்பம் நேர்ந்தால் இந்த துயரம் கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்பட்டார் காந்தி.
இரு தரப்பினரும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நடுநிலையோடு கண்டித்துக் கொண்டார். இதன் காரணமாக இந்தியா இந்துக்களின் நாடு இதை ஏற்பவர்கள் இந்தியாவில் இருங்கள் ஏற்க மறுப்பவர்கள் பாகிஸ்தானிற்கு செல்லுங்கள் என்ற முழக்கங்களும் பசுவை உண்பவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் தற்போது சூழல்களில் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இதற்கு எதிரான தனது கண்டனத்தை 1908 ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளார் காந்தி.
இந்தியாவில் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என இந்துக்கள் கருதினால் அவர்கள் கனவு காண்பவர்கள் ஆவார்கள் இந்தியாவை தாய் நாட்டிற்கு கொண்டே இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்கள் அவர்கள் தங்களின் சொந்த நலனுக்காகவே ஒன்றுபட்டு வாழ வேண்டும் மேலும் எனக்கு பசுவிடம் மதிப்புண்டு ஆனால் ஒரு பசுவிற்காக என் இஸ்லாமிய சகோதரர் ஒருவனை நிச்சயம் கொலை செய்ய மாட்டேன் என குறிப்பிடுகிறார் காந்தி.
அவரின் இந்த நிலைப்பாடு அவரின் இந்த எண்ணமே அவரின் மரணத்திற்கும் காரணமாக அமைந்தது காலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு பல்வேறு கருத்து மோதல்களுக்கு பிறகு பாரத நாடு இந்தியா பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிவது பிரிந்து தீருவது என்று முடிவானது ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிவதை எள்ளளவும் விரும்பவில்லை காந்தி. ஆனால் முயன்றளவு பிரிவினையை தவிர்க்க முயன்றார் ஆனால் அந்த விவகாரம் காந்தியின் கையை மீறி போய்விட்டது பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நாடு என்று முடிவானபோது இந்தியா இந்துக்களுக்கான நாடு என்று கோரிக்கையை இந்துமத தலைவர்கள் பலரால் முன்வைக்கப்பட்டது இந்தியாவை இந்து நாடாக அவர்கள் தீவிரமாக முயன்றும் வந்தனர் ஆனால் காந்தி தெளிவாக இறுந்தார் சொல்லப்போனால் மிகவும் தெளிவாக இருந்தார் இந்திய நாடு ஒரு மதசார்பற்ற நாடாகவே இருக்கும் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்ற பாகுபாட்டிற்கு இந்தியாவில் வேலையே இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார் மோகன் தாஸ் காந்தி.
இதன் எதிரொலியாக வட இந்தியாவின் பல பகுதிகளில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன இந்துக்களும் இஸ்லாமியர்களும் மோதலில் தாக்குதலில் வன்முறையில் ஈடுபட்டனர் இந்த மோதல் சம்பவங்கள் அனைத்தையும் முடிந்தவரை கட்டுப்படுத்த முயன்றால் காந்தி கலவரம் நடைபெற்ற இடங்களுக்கு தனியாகவே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தாக்குதலுக்கு உள்ளான இந்துக்களின் பக்கமும் இஸ்லாமியர்களின் பக்கமும் காந்தி நின்றார்
கல்கத்தா உள்ளிட்டா அவர் சென்ற இடங்களில் எல்லாம் அமைதி ஏற்பட்டது இந்த அமைதி இந்துத்துவ தலைவர்களின் அமைதியை கெடுத்தது பிரிவினையின் போது இரு நாடுகளுக்கும் சொத்துக்கள் பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தானுக்கு 75 கோடி தருவதாக இந்தியா ஒப்புக்கொண்டது ஆனால் 20 கோடி ரூபாய் முதல் தவணை ஆக கொடுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய55 கோடி ரூபாயை விரைந்து வழங்க இந்திய அரசே காந்தி வற்புறுத்தினார் காந்தியின் இத்தகைய நடவடிக்கைகள் இந்துத்துவ தலைவர்களை ஆத்திரம் அடைய செய்தது.
காந்தியின் கொலை
இதன் காரணமாக காந்தியின் உயிரைப் பறிக்க நாளும் குறிக்கப்பட்டது காந்தியை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது ஆனால் அவை எவையும் பலன் அளிக்கவில்லை இருந்தும் இந்துத்துவ தலைவர்கள் கொலை முயற்சியை கைவிடவில்லை காந்தியை கொல்ல தொடர்ந்து திட்டங்கள் தீட்டி வந்தனர். அவர்களின் விடாம யோசிக்க 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பலன் கிடைத்தது அன்றைய தினம் பிர்லா மாளிகையில் வழிபாட்டிற்கு சென்று கொண்டிருந்த காந்தியை வழிமறித்து வணங்கிய நாத்தூராம் விநாயக் கோட்சே என்கிற அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காந்தியை சுட்டார். காந்தி வர்ணாசிரம தர்மத்தை தாங்கிப் பிடித்தவர் சாதிய கொடுமைகளுக்கு துணை போனவர் உயர்சாதியும் வகுப்பினரின் பிரதிநிதிதான் காந்தி என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை அந்த குண்டு தொலைத்து சென்றது தங்களது கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என குற்றம் சாட்டிய இந்துத்துவ தலைவர்கள் காந்தியை சுட்டுக்கொன்றனர்.
அதாவது சிறுபான்மையினரின் ஆதரவாளராகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் செயல்பட்டது அந்த படுகொலை நடந்தது ஆனால் இந்துத்துவவாதிகளின் எண்ணியதைப் போல தாழ்த்தப்பட்ட மக்கள் காந்தியை தங்களுக்கு சார்ந்தவராக கருதவில்லை அதேபோல் சிறுபான்மையினரின் பலர் காந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை இந்துத்துவவாதிகளும் காந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கும் நடைபெற்ற கொலையே சாட்சி அப்படி என்றால் காந்தி யாருக்கானவர் யாருக்கான தலைவர் காந்தியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அவர் தன்னை தலைவராக எப்போதும் முன் நிறுத்திக் கொண்டதில்லை.
இந்துக்களையோ இஸ்லாமியர்களையோ தாழ்த்தப்பட்ட மக்களையோ பொதுவுடமைவாதிகளையோ மெத்த படித்த மேட்டுக்குடியினரையோ இப்படி எவரையும் கவர காந்தி எண்ணியதில்லை அவர் நினைத்திருந்தால் வருசார்பு நிலைப்பாட்டை எடுத்த அதில் மட்டுமே பயனித்தம் இந்துக்களுக்கான தலைவராகவோ சிறுபான்மையினருக்கான தலைவராகவோ சொல்லப்போனால் இஸ்லாமியர்களின் தலைவராகவோ கூட அவரால் இருந்திருக்க முடியும் ஆனால் அவர் உண்மையின் பக்கமும் அகிம்சையின் பக்கமும் நின்றார். அரசியலின் மதத்தை புகுத்தி தவறை செய்து விட்டதாக தனது கடைசி காலங்களில் வருத்தம் தெரிவித்தார் குறைகளை இல்லாத தவறை செய்யாத மகாத்மாவாக அவர் தன்னை எப்போதும் கூறிக் கொண்டதில்லை மகாத்மா என்ற பட்டத்தையும் அவர் பொருட்டாகவே கருதியது இல்லை காந்தி யாருக்கும் தலைவர் இல்லை ஆனால் யார் வேண்டுமானாலும் காந்தியை தலைவராக ஏற்றுக் கொள்ளலாம் என்கின்றனர் காந்திய சிந்தனையாளர்கள் காந்தியம் காலாவதியான ஒன்று என்ற கருத்தையும் அவர்கள் மறுக்கின்றனர் ஒருவர் நம்மை அடித்தால் திருப்பி அடிக்கலாம் 100 பேர் நம்மை அடித்தால் திருப்பி அடிக்க முயற்சிக்கலாம் ஆனால் நம்மை அடிப்பவர்கள் ஒடுக்கப்படுபவர்கள் ஆயிரம் பேராகவும் அல்லது நம்மை ஆளும் அரசாகவோ இருந்தால் அந்த இடத்தில் அகிம்சை தேவைப்படுகிறது அந்தப் புள்ளியில் காந்தியம் தேவைப்படுகிறார் என விளக்கம் அளித்தனர் அதாவது வீரத்தின் உச்சகட்டம் தான் அகிம்சை. அந்த கூற்றின்படி பார்த்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய வரலாற்றில் மாபெரும் வேடன் சாட்சாத் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
தொடர்புடயவை: காமராஜரின் வாழ்க்கை வாரலாறு