துரித உணவு அல்லது வேக உணவு என்பது விரைவாக சமைத்து வழக்ககூடிய உணவைக் குறிக்கிறது. மேற்குநாடுகளில் MC DONALDS, KFC சிக்கன் போன்ற உணவகங்களில் விரைவாக வழங்கப்படும் உணவுகளைக் குறிக்கிறது. சாலையோரத்தில் விற்கப்படும் உணவுகளையும் இது குறிக்கிறது.
புரதம், விட்டமின் , கனிச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அளவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவுக் கழகம்.

துரித உணவுகளினால் தான் தொற்றுநோய் அல்லாத நீரழிவு, இருதய நோய்கள், புற்று நோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுக்களில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிட்) போன்றவை வருகின்றன
பொதுவாக துரித உணவுகளில் மிக அதிகமான அளவில் கொழுப்புச் சத்தும் சர்க்கரையுமே உள்ளன. பர்கர், பீட்சா மற்றும் மென்பானங்கள் இவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.இந்த உணவு வகைகளில் சத்தில்லாமல் ஊளைச் சதையே பெருகும். அதிகமானோர் குண்டர்களாக சத்தற்ற நோயாளிகளாக நீரழிவு நோயாளியாகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் பன்னாட்டு துரித உணவுக் கம்பனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அடிமைகளாக மாற்றி வருகின்றன.இதன்மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சுவையுடன் கூடிய உணவுவகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.இந்த துரித உணவுகளில் சுவைதான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்கு தீமையே விளையும்.

துரித உணவுகளில் அதிக அளவு கொழுப்புகள் காணப்படுகின்றன, இது இதய பாதிப்பை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், சீக்கிரமாக உணவு கெடாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதிக்கும்.
வீட்டில் தயார் செய்யப்படும் உணவு வகைகளை விட கடைகளில் தயார் செய்யப்படும் உணவுகளில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளது. இதனால், தொடர்ந்து எடுத்துக் கொள்வதனால் உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் வளர்ச்சிக் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ஞாபக சக்தி மற்றும் கவனக் குறைவு, தலைவலி மனச்சோர்வு, உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு (junk food disadvantages) வழிவகுக்கும். முக்கியமாக, இம்மாதிரியான பொருட்களை சாப்பிடுவதால் இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன. எனவே, தினமும் ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து வந்தால் இம்மாதிரியான பிரச்சனைகளில் தப்பிக்கலாம்