பிரமிடுகளின் உண்மைகள் (Pyramid facts)
பிரமிடுகள்(pyramids) நம்மால் நம்ப முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யமூட்டும் உண்மையாகும். அதாவது அந்த பிரமிடுகள் அந்த காலத்தில் உள்ள தொழில்நுட்பத்தை எவ்வாறு கட்டிருப்பார்கள் என்பது ஒரு வியப்பூட்டும் உண்மையே தற்போதய தொழில்நுட்பத்தை வைத்து கட்டுவது என்பது சற்று சந்தேகமே ஆனால் அப்போதே இதனை எப்படி கட்டினார்கள் என்பது வியப்பூட்டக்கூடியது.
பிரமிடுகளின் தோற்றம்(Pyramid structure)
pixabay |
இந்த ஒரு பிரமீடிகள் என்பது எகிப்தில் வாழ்ந்த அரசர்களை பதபடுத்துவதற்காக பட்டபட்டது என நாம் அறிவோம் ஆனால் இதோடு மட்டுமில்லாமல் அரசர்கள் வாழ்ந்த காலங்களில் காய்கறி உணவுபொருள்கள் போன்றவற்றை பதபடுத்துவதற்காகவும் இதனை பயன்படுத்தினர்.இந்த பிரமிடுக்கு உள்ளே எப்பொழுதும் ஒரே வெப்பநிலை இருக்கும். அதாவது 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலே இருக்கும் . இரவிலும் பகலிலும் ஒரே வெப்பநிலையில் இருக்கும் எல்லா காலத்திலத்திலும் பிரமீடானது ஒரே வெப்பநிலையை கொண்டிருக்கும் . இந்த பிரமிடு எகிப்தில் மட்டுமில்லாமல் சீனா ,சூடான் போன்ற நாடுகளிலிலும் உள்ளது.
பிரமிடுகளின் கட்டமைப்பு(pyramid construction)
பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டது என்றால் சிறந்த அறிவியலாளர் மற்றும் கட்டிட வல்லுநர்களால் கட்டப்பட்டது என ஆய்வகள் தெரிவிக்கின்றன. இந்த பிரமிடுகள் 4 லட்சம் வேலை ஆட்களால் 25 வருடம் கட்டியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்து கூறுகிறார்கள். இது பாலைவனத்தில் கட்டப்பட்டுள்ளது என்பது நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது.சிறந்த புகழ் பெற்ற உலக அதிசயத்தில் ஒன்று கிசே பிரமிடு. இந்த கிசே பிரமிடு குபு மன்னருக்காக கட்டப்பட்டது.இந்த பிரமிடின் மேல் பகுதியை காணவில்லை இதன் மேல்பகுதி தங்கத்தால் ஆனதால் இதனை திருடி இருக்கலாம் என ஆய்வாளர் கூறுகிறார்கள்.இந்த பிரமிடை கட்ட 20 மில்லியனுக்கு மேற்பட்ட கற்களை பயன்படுத்தினார்கள். இந்த கற்கள் எல்லாம் சுண்ணாம்புகளால் ஆனது . அந்த பாலைவனத்தில் இந்த கற்களை எடுத்து வருவது என்பது சாத்தியமில்லை ஆனாலும் இந்த கற்கள் எங்கிருந்து வந்தன என்பது சற்று மர்மமாகவே உள்ளது. இந்த பிரமீடுகளை மேம்படுத்தும் வகையில் அருகே நைல் நதி செல்கிறது.இந்த ஒரு சுண்ணாம்புகல் ஆனது பகலில் பார்பதற்கு தங்க நிறத்திலும் இரவில் பார்பதற்கு சிகப்பு நிறத்திலும் இருக்கும் . இந்த ஒரு சுண்ணாம்பு கல்லின் எடை 5 டன் முதல் 10 டன் வரைக்கும். இந்த கற்களை எப்படி பாலைவனத்திற்கு எடுத்து வந்திருப்பர் அதனை எவ்வாறு கட்டிருப்பார்கள் என்பது இன்று வரை புதிராக உள்ளது.
READ MORE : BERMUDA TRIANGLE மர்மங்கள்
ஸ்பிங்ஷ் சிலை(sphinx statue)
இந்த பிரமிடுகளுக்கு முன்பு ஸ்பிங்ஷ் என்ற சிலை நிறுவபட்டுள்ளது. இந்த சிலை அங்குள்ள பிரமிடுகளை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டது என்றழைக்கின்றனர்.இந்த ஸ்பிங்ஷ் சிலையின் உடல் சிங்க வடிவிலும் தலை மனித வடிவிலும் உள்ளது.பாரோ மன்னர் மூன்று பிரமிடுகளையும் பாதுகாக்க இதை நிறுவினார் என்று நம்பபடுகிறது.அந்த ஸ்பிங்ஷ் சிலையின் உள்ளே ஒரு மிகப்பெரிய நூலகம் இருப்பதாக கூறுகின்றனர் அதாவது இந்த பாலைவனத்தில் எவ்வாறு பிரமிடுகளை கட்டினார்கள் என்பதனை எழுதி வைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .பிரமிடின் மொத்த வரலாறும் அதாவது பிரமிடுகளைை கட்டிய வரலாறு மற்றும் ஆய்வுகள் இந்த சிலையில் இருக்கும் நூலகத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.இந்த ஸ்பிங்ஷ் சிலை ஒரே கல்லால் ஆனது. இந்த ஸ்பிங்ஷ் சிலையின் சில வெற்றிடம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறிகிறார்கள் ஆனால் இன்றுவரை அந்த சிலைக்குள் என்ன இருக்கிறது என்பதை எகிப்திய அரசு கூறவே இல்லை.
நட்சத்திரங்களுக்கு நேராக பிரமிடுகள்(Pyramid amazing construction)
ஒரியன் பெல்ட்ஸ் என்று அழைக்கப்படும் வானில் தோன்றும் மூன்று நட்சத்திரங்கள் ஒரே கோட்டில் நேராக இருப்பதை பார்த்திருப்போம் . மூன்று நட்சத்துரங்களுக்கு நேராக கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் துல்லியமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று நட்சத்திரங்களுக்கு துல்லியமாக நேராக கட்டிருப்பது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
செவ்வாயில் கிரகத்தில் பிரமிடு (Pyramid mars mystery)
நாம் பூமியில் இருக்கும் பிரமிடுகளை போல செவ்வாய் கிரகத்திலும் பிரமிடுகள் இருப்பதாக ஆய்வாளர் கூறுகின்றனர்.இந்த பிரமிடு மட்டுமில்லாமல் ஸ்பிங்ஷ் சிலையும் இருப்பதாக கூறுகின்றனர். இது செயற்கைகோலில் இருந்து பார்க்கும் போது பிரமிடு போல் தெரிவதாக கூறுகின்றனர்.இந்த ஒரு பிரமீடுகளை ஏலியன்கள் கட்டிருக்கலாம் என பலர் நம்புகின்றனர். சமீபத்தில் கூட https://www.10factstamil.com/2021/02/elon-musk-biography-tamil.html அவரது டிவீட்டில் ஏலியன்கள்தான் இந்த பிரமிடுகளை கட்டிருப்பதாக கூறுகிறார்.
நன்றி!