ஏமனின் மர்ம கிணறு
வணக்கம் தோழர் மற்றும் தோழிகளே! இன்றைய பதிவில் ஏமனில் இருக்கும் மர்ம கிணறு பற்றிய சில ஆச்சரியமான உண்மைகளை காண்போம்.
பேய் கிணறு-well of hell
ஏமனில் அல்மைரா பாலைவனத்தின் நடுவே ஒரு மர்ம கிணறு உள்ளது, 30 மீட்டர் அகலம் 360 அடி ஆழமும் கொண்ட இந்த மர்ம கிணற்றை வெளியிலிருந்து உள்ளே பார்த்தால் கும்மிருட்டாக தெரியும் கிணற்றிலிருந்து கெட்ட நாற்றம் வீசும் இந்த கிணறு பூதம் பேய் இருப்பதாகவும் அது அருகில் செல்லும் பொருட்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் என்றும் இது பேய்களை அடைத்து வைக்கும் சிறை என்றும் ஆண்டாண்டு காலமாக வதந்தி பரவி வருகிறது.
அதனால் அந்தக் கிணற்றின் அருகில் செல்லவே மக்கள் பயந்தனர் கிணற்றை பற்றி பேசினாலே பீதி அடைந்தனர் இந்த கிணறு பற்றிய ஆராய்்சி எடுக்கப்பட்ட போது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணறு தோன்றியிருக்கலாம் எனவும் கிணறுகள் என்ன இருக்கிறது என தெரியாது எனவும் கடந்த ஜூன் மாதத்தில் ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர் , இது குறித்து இவற்றைபற்றி ஆய்வுகளை மேற்கொண்ட கனிம வள ஆணையத்தின் தலைமை இயக்குனர் தங்களது குழுக்கள் 50 முதல் 60 மீட்டர் வரை சென்றதாகவும் அங்கு விசித்திர பொருள் விசித்திர நாற்றம் இருந்ததால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் துணிச்சலுடன் அந்தக் கிணற்றில் இறங்கி ஆய்வு செய்துள்ளனர் 9 பேர் கொண்ட குழு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கிணற்றில் இறங்க மேலே இருந்து இரண்டு பேர் கண்காணித்து வந்தனர் குழுவின் தலைவரான கல்லூரி பேராசிரியர் முகமது அலிக்கு இப்படி நீண்டு கொண்டே செல்லும் இந்த கிணற்றில் ஒரு நீர்வீழ்ச்சி இருந்ததாக குறிப்பிடுகிறார்,அந்த கிணற்றில் அதிகமான பாம்புகள் இருந்ததாகவும் அவற்றுக்கு நாம் தொந்தரவு தராத வரைஅவை நம்மை தொந்தரவு செய்யாதே என்றும் அவர் கூறினார்,
அந்த கிணற்றில் பறவைகள் விலங்குகள் அதிகமாக இறந்து கிடப்பதினாலேயே துர்நாற்றம் வீசுகிறது என்றும் ஆனால் அது மிக மோசமானதாக இல்லை எனவும் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது, மேலும் கிணற்றின் ஒரு பகுதி சாம்பல் மற்றும் பச்சை வண்ணங்களை கொண்ட முத்துக்களால் மூடப்பட்டு இருப்பதாகவும் இந்த குழு தெரிவிக்கிறது இங்கு எந்த பூதமோ பேயோ இல்லை என கூறியுள்ள ஆய்வுக்குழு குகை அமைப்பின் படங்களை வெளியேற்ற பூத கிணறு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
குகையின் உள்ளே இருந்த தண்ணீர் பாறை சிலை இறந்த விலங்குகளின் மாதிரிகள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் அவை பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த ஆய்வில் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என்றும் இந்த கிணறு ஏமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என நம்புவதாகவும் இந்த குழு தெரிவித்துள்ளது தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் ஆராய்ச்சி குழு கூறியுள்ளது.
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் எந்த ஒரு விஷயத்தையும் நாம் முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே அதனுடைய உண்மையை தன்மையை நமுமால் கண்டறிய முடியும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன் நன்றி!
ஆசிரியர் கிடைக்கும் என்ற மாநாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என நம்புவதாகவும் இந்த குழு தெரிவித்துள்ளது தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் ஆராய்ச்சி குழு கூறியுள்ளது