
வணக்கம்! பண்டைய நாகரிங்களில் மிகவும் பிரபலமான மற்றும் ஒரு முன்னோடி நாகரிகமாக திகழ்ந்த மாயன் நாகரிகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
மாயன் நாகரிகம் தோற்றம்

மாயன் நாகரிகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே மத்திய அமெரிக்கப் பகுதியில் பரவியிருந்த ஒரு பழமையான நாகரீகம் ஆகும். இது கொலம்பசுக்கு முந்திய கால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தத ஒரே நாகரிகம் இதுதான். இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும்தான் எழுத்துமொழிகளை அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தி வந்தனர் என்பது சற்று வியப்பை ஏற்படுத்துகிறது.
மாயன் காலண்டர்

2850 நாட்களைக் கொண்ட மாயன் இனத்தை சேர்ந்தவர்களின் நாட்காட்டிதான் 2012 இல் உலகம் முடியும் என்ற கணிப்பைஅளித்தது. உலகம் அழிவு குறித்து அன்றைய மாயன்கள் கூறிய கணிப்புகள் பொய்யாகி போனாலும் அவர்களின் வாழ்க்கை முறையும் நாகரிகங்களும் மக்கள் மனதில் நின்று ஆச்சரியங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன .
மாயன் இனத்தவர்களின் வாழ்க்கைமுறை

இனத்தைச் சேர்ந்தவர்கள் கணிதம் எழுத்துமுறை வானியல் போன்ற துறைகளிலெல்லாம் அதிக திறன் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்
இவர்கள் வானியலில் அதிக திறன் பெற்று இருந்துள்ளனர். இவர்கள் சூரியன் பற்றிய சுழற்சி பூமி மற்றும் சந்திரனின் அமைப்பை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிப்பதிலும் வல்லமை பெற்றவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.
பழமையான மாயன் நாபரிகம்

மாயன் நாகரிகம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது மத சடங்குகளும் நம்பிக்கைகளும் இருந்தது. மாயன்கள் பயன்படுத்திய டிரிடக்ஸ் பஞ்சாங்க குறிப்புகள் இதனை தெள்ள தெளிவாக உறிதிபடுத்துகின்றன.
மாயன் நாகரிகத்தின் வித்தியாசமான பழக்கங்கள்

மாயன்களின் ஒரு சில பழக்கங்கற் சற்று வித்தியாசமாகவே இருந்துள்ளன .மாயன் இனத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களின் கண்கள் ஒரகண்களாகவே அமைந்திருக்கின்றன இதற்குக் காரணம் அந்த காலம் தொட்டே பிறக்கும் குழந்தைகளின் கண்களில் ஓரக்கண்களால் அதற்காகவே ஒரு குறிப்பிட்ட பொருளை பொறுளை குழந்தையின் கண் முன்னே வைத்து அசைத்துகொண்டே இருப்பார்களாம். குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நாள் படியே பெயர்களைக் கொண்டிருப்பார்கள்.
மயன் இன பெண்கள் அவர்களின் பற்களை புள்ளிகளால் அலங்கரித்து கொள்வார்கள் . மாயன் இனத்தை சேர்ந்த மக்கள் எஃகு அல்லது இரும்பு போன்ற உலோகங்களை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை என்பது அவர்கள் பயன்படுத்திய பழங்கால ஆயுதங்களை வைத்து மதிப்பிடப்படுகிறது.
அவர்கள் இரும்பிற்கு பதிலாக ஆக்ஸிட்டியன் என்று அழைக்கப்படும் எரிமலை பாறைகளால் ஆன ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.
மாயன்களின் அறிவுத்திறன்

பூச்சியத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் மாய நாகரிகம் தான் என்றும் அதற்குப் பின்னர்தான் இந்திய கணிதவியலாளர்கள் அதற்கு ஒரு கனித மதிப்பை கொடுத்தார்கள் எனவும் ஒரு கருத்து பேசபட்டு வருகிறது. ஆனால் மாயன்கள் அறிவியலிலும் வானியல் சார்ந்த நுட்பங்களிலும் அதிக அறிவுதிறனை பெற்றருந்தனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
மாயன்களும் மர்மங்களும்

மாயன்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் தென்னமெரிக்க பகுதிகளைச் சுற்றியுள்ள சில இடங்களில் பிரமீடுகளை போன்ற உருவங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த தென்அமெரிக்க பகுதியை ஒட்டிய அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில் தான் பெர்முடா முக்கோணமும் அமைந்திருக்கிறது பொதுவாக பிரமீடுகளுக்கு பொருட்களை ஈர்க்கும் சக்தி உண்டு என்றும் கூறப்படுகிறது.
எனவே பெர்முடா முக்கொணத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என மக்களால் நம்பப்படுகிறது.
மாயன் நாகரிகம் வீழ்ச்சி

இப்படி பல ஆச்சரியங்களை கொண்டிருக்கும் மாயன் நாகரிகம் எப்படி வீழ்ச்சியடைந்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை கடுமையான வறட்சி மற்றும் காலநிலை மாற்றங்களால் இது ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மாயன் இனத்தை சேர்ந்தவர்கள் தற்போது கூட மெக்ஸிகோ போன்ற பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.
இந்த ஒரு பதிவில் மாயன் நாகரித்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி மக்களே!