வியாழனின் உண்மைகள்
பெரிய கிரகம் வியாழன்
இந்த சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோள் இந்த வியாழன் எனலாம் , எந்த அளவுக்கு பெரியது என்றால் வியாழன் கிரகத்தினுள் 1500 பூமிகளை வைக்கமுடியும் அந்த அளவுக்கு பெரியது. இந்த கிரகம் சூரிய ஒளியில் கிட்டதட்ட பாதிக்கும் மேற்பட்ட ஒளியை பிரதிபலிக்கிறது. இந்த வியாழனுக்கும் சனி போன்ற வளையம் உண்டு ஆனால் அது அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.
வியாழன் பெயர்காரணம்
வாயுக்கிரகம் வியாழன்
இந்த வியாழன் ஆனது அனைவராலும் வாயுக்கிரகம் என அழைக்கப்படுகிறது இதற்கான காரணம் அங்கு அதிகப்படியான புயல்கள் வீசும் அதுமட்டுமில்லாமல் அதன் வளிமண்டலம் முழுவதும் நீர்ம ஹைட்ரஜனால் ஆனது இதன் காரணமாக இதன் மின் காந்தபுலமும் அதிகம் இங்கு புவிஈர்ப்பு விசையும் மிக அதிகம், எடுத்துகாட்டாக பூமியில் நீங்கள் 100 கிலோ இருந்தால் வியாழனில் 200 கிலோ இருப்பீர்கள் அந்த அளவுக்கு வியாழனின் ஈர்ப்பு விசை அதிகம்.
வியாழனின் கண்
வியாழன் கிரகத்தில் கண் போன்ற ஒரு பகுதியை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புள்ளது இது என்னவென்றால் கிட்டதட்ட 300 வருடமாக வியாழனில் வீசிகொண்டிருக்கும் புயல்காற்று ஏன் இந்த புயல் மட்டும் அப்படியே இருக்கிறது என்றால் வியாழனில் கரையே கிடையாது அதன் காரணமாக இந்த புயலும் இன்னும் அப்படியே காணப்படுகிறது . இந்த புயலுக்குள்ளேயே நம் பூமியை போன்று இரண்டு பூமிகளை அடைக்கலாம் அந்த அளவுக்கு மிகப்பெரிய புயல்தான் இந்த வியாழனில் வீசிகொண்டிருக்கிறது.
வியாழனின் நிலவுகள்
வியாழன் தன்னிடத்தில் 79 நிலவுகளை கொண்டுள்ளது . அதில் கலிலியோ கண்டறிந்த மிக முக்கியமான 4 நிலவுகள் உள்ளன அதில் முதலில் இருப்பது IO இந்த நிலவுதான் நம் சூரியகுடும்பத்தில் அதிக எரிமலைகளை கொண்டது எப்பொழுதும் எரிமலைகள் வெடித்து சிதறியபடிதான் இந்த ஐஓ நிலவு உள்ளது.
- இரண்டாவதாக EUROPA இந்த நிலவு முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளது ஆனால் அந்த பனிக்கு அடியில் மிகப்பெரிய கடல் அதாவது நம் பூமியில் இருக்கூடிய கடலை விட இரண்டு மடங்கு மிகப்பெரிய கடல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
- அடுத்ததாக கலிஸ்டோ இதுவும் யுரோப்பா போன்ற அமைப்பையே பெற்றுள்ளது இங்கும் பனிக்கு அடியில் கடல் உள்ளது இங்கு தண்ணீர் இருப்பதால் உயிரினங்கள் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன.
- நான்காவது கேனிமைட் இதுதான் சூரிய குடும்பத்தில் இருக்கூடிய மிகப்பெரிய நிலவு ஆகும் . இது நம் புதன் கிரகத்தை விடவும் மிகப்பெரியாதாக காணப்படும் இங்கும் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடுகிறார்கள்
வியாழனில் ஒருநாள்
இந்த வியாழன் கிரகத்தில் ஒருநாள் என்பது வெறும் 9 மணிநேரம்தான் இது சூரியனை முழுமையாக சுற்றி முடிக்க 12 வருடங்கள் ஆகும் இதுதான் சூரியனை மிகவும் மெதுவாக சுத்தக்கூடியது. இந்த வியாழன் கிரகத்தின் மேற்பரப்பில் ஹைட்ரஜன் 90 சதவீதமும் ஹீலியம் மீதமுள்ள 10 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இந்த வியாழன்கிரகத்தின் உட்பகுதியில் மட்டும் 25,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பூமியை காக்கும் வியாழன்
இந்த வியாழன் இருப்பதால்தான் நம் பூமி பாதுகாப்பாக உள்ளது எனலாம் ஏனெனில் நம் பூமி நோக்கி வரக்கூடிய பெரிய பெரிய விண்கற்களை எல்லாம் இந்த வியாழனானது அதன் ஈர்ப்பு விசையால் ஈர்த்துகொள்கிறது இதன்காரணங்களால்தான் இது 79 நிலவுகளை கொண்டுள்ளது வருங்காலத்தில் இது அதிகரிக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் இப்படி வரக்கூடிய விண்கற்களைதான் இந்த வியாழன் தன் ஈர்ப்புவிசையால் ஈர்த்து நிலவாக மாற்றிக்கொள்கிறது.