வணக்கம் இந்த பதிவில் ஹோலி பண்டிகை எப்படி உருவானது இதில் இருக்கும் வரலாறு என்ன மற்றும் ஹோலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.
ஹோலியின் வரலாறு- facts about holi
இந்துக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையானது பங்குனி மாதம் பௌர்ணமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது ராதாவும் ஸ்ரீ கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டை நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது எனவும் புராணங்கள் கூறுகின்றன . அடுத்தாக பிரம்மதேவரிடம் வரங்கள் பல வாங்கிய இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் என்று தொழ வேண்டும் என்று எண்ணினான் ஆனால் இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான் விஷ்ணு ஒருவரே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான் இதை அறிந்த இரணியன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனை பலவகையில் துன்புறுத்தி தன்னையே கடவுளென போதிக்கும் படி கூறினான் ஆனால் பிரகலாதன் மறுத்துவிடவே இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகா உதவியை நாடினான் ஹோலிகா நெருப்பில் எரியாத தன்மை படைத்தவர் எனவே தன் மகன் பிரகலாதனை அழிக்க நினைத்த இரணியன் ,பிரகலாதனை மடியில் அமர்த்திக்கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் வர சொன்னாள் இரணியன் பிரகலாதனைக் கொல்ல பல முறை முயற்சி செய்தான் ஆனால் அது முடியாமல் போயிற்று இந்த தடவை பிரகலாதன் எப்படியும் நெருப்பில் எரிந்து விடுவான் என்று எண்ணினான் ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி போலி காவடியில் அவன்தான் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து வேண்டாம் ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானான் இந்த சம்பவத்தை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகை என்று வெட்ட வெளியில் தீயை மூட்டி அதன் ஒளியில் அனைவரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
மூன்றாவதாக ஆழ்ந்த தவத்தில் சிவபெருமான் இருக்கையில் மன்மதன் என்பவர் சிவபெருமானின் தவத்தை கலைக்கிறார். இதானல் கோவமுற்ற சிவபெருமான் தனது தவத்தைக் கலைத்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் அழித்தார். அதன்பின் அந்த மன்மதனின் மனைவி ரதி வேண்டிக் கொண்டதற்கிணங்க மீண்டும் மன்மதனை மனைவி ரதி தவிர வேறு எவர் கண்ணுக்கும் தெரியாத வகையில் உயிர்ப்பித்தார் சிவபெருமான். மன்மதன் உயிர் பெற்று மீண்டு வந்த நாள்தான் ஹோலி என்றும் கூறப்படுகிறது மக்களிடையே சகிப்புத்தன்மை ஓங்கவும் சகோதரத்துவம் அதிகரிக்க உதவும் பண்டிகைதான் ஹோலி தெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதம் கூட இல்லாமல் அனைவரும் வண்ணத்தை பூசி மகிழ்வதுதான் ஹோலி பண்டிகை.
வண்ணங்கள்
ஜாதி, கலாச்சாரம் அல்லது மதம் எதுவாக இருந்தாலும் அனைவரையும் சமமாக உணரச்செய்யும் வண்ணங்கள் ஒரு சிறந்த சமன்படுத்துபவராக செயல்படுகின்றன.
தொடர்புடையவை:இந்தியா பற்றிய சுவாரஸ்யமான விசயங்கள்