உங்கள் முகம் உங்களைப் பற்றி ஆயிரம் கதைகளைச் சொல்லும். அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே முக வாசிப்பு நடைமுறையில் உள்ளது. இந்திய வேத ஜோதிடத்திலும், முக வாசிப்பு என்பது சாமுத்ரிகா சாஸ்திர வித்யாவின் ஒரு பகுதியாகும். இது உங்கள் நெற்றி உட்பட முகத்தின் அம்சங்களை பகுப்பாய்வு செய்கிறது. உங்கள் நெற்றி வடிவம் உங்களிடம் மறைந்திருக்கும் ஆளுமைப் பண்புகள், பலம், பலவீனங்கள், இயல்பு, மனநிலை மற்றும் நடத்தை பாணியை வெளிப்படுத்தும். அவற்றை இங்கு விரிவாக பார்க்கலாம்.
உங்களுக்கு பெரிய பரந்த நெற்றி இருந்தால், கூட்டத்தை விட இரண்டு படிகள் முன்னால் நின்று தனித்து தெரிய விரும்புவீர்கள். உங்கள் குழுவில் நீங்கள் பெரும்பாலும் ஆல்பா நபராக இருக்கலாம். நீங்கள் பொதுவாக அமைதியாக இருக்கலாம், இருப்பினும் உங்களுக்குள் ஒரு கட்டுப்பாடும் இருக்கும். உங்களுக்கு ஏற்றபடி நடக்க விரும்புவீர்கள். உங்களது அதிக புத்திசாலித்தனமான மற்றும் உள்ளுணர்வு இயல்பு காரணமாக மக்கள் உங்கள் கருத்தையும் நம்புகிறார்கள். நீங்கள் அறிவுரை வழங்குவதில் வல்லவர், அது பிராக்டிக்கலாகவோ எமோஷனலாகவோ இருக்கலாம். IQ (Intelligence Quotient) மற்றும் EQ (Emotional Quotient) ஆகியவற்றின் சமநிலை உங்களிடம் இருக்கும்.
சோனாக்ஷி சின்ஹா அல்லது ஏஞ்சலினா ஜோலி போன்ற பெரிய நெற்றி உள்ளவர்கள் அனைத்திலும் ஆர்வமுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். நீங்கள் பயணத்தை ரசிக்கும் அதே அளவு, அந்த பாதை உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் விரைவாகக் கற்றுக்கொள்பவர். புதிய வாய்ப்புகளை ஆராய விரும்புவீர்கள். பொதுவாக, பெரிய நெற்றியை உடையவர்கள் ராயல்கள், பிரபலங்கள், வெற்றிகரமான வணிகர்களாக இருப்பார்கள். பெரிய நெற்றியானது செல்வம் மற்றும் செழிப்புக்கான அறிகுறி!
ஆலியா பட் போன்ற குறுகிய நெற்றியை உடையவர்கள் அன்பான செயல்களால் மகிழ்ச்சியைப் பரப்ப விரும்புகிறார்கள். பிறருக்கு தொண்டு செய்வதில் விளம்பரம் தேட நீங்கள் விரும்புவதில்லை. உங்கள் செயல்களை அமைதியாகச் செய்வீர்கள். உங்கள் தேர்வுகளுக்காக நீங்கள் ஜட்ஜ் செய்யப்படுவதையும் விரும்ப மாட்டீர்கள். நீங்கள் நிதானமாகவும் உள்முக சிந்தனையுடனும் தோன்றலாம் ஆனால் உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை வாழ உங்களுக்கு சாமர்த்தியம் உள்ளது. சமூகம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படி வாழ உங்களுக்குப் பிடிக்காது. நீங்கள் நீண்ட கால உறவுகளைத் தேடுவீர்கள். உங்களின் அர்ப்பணிப்பு நிலை வேலையிலும் வெளிப்படும். டெட்லைனை கடைப்பிடித்து தரமான வேலையை வழங்குவீர்கள்.
உங்களுக்கு வளைந்த நெற்றி இருந்தால், அது நீங்கள் ஒரு அன்பான மற்றும் நட்பான நபர் என்பதை வெளிப்படுத்துகிறது. பேசுவதற்கு எளிதானவராக இருப்பீர்கள். நீங்கள் இருக்கும் இடமே பிரகாசமாக இருக்கும். மக்கள் உங்கள் இருப்பை விரும்புவார்கள். ஒரு கணம் சிறுபிள்ளைத்தனமாக இருக்க முடியும், அடுத்த கணம், என்ன, எப்போது பேச வேண்டும் என்பதை அறிந்த புத்திசாலியாகவும் இருக்க முடியும். நீங்கள் இயல்பாகவே ஒரு பார்ன் லீடர், மற்றவர்களை ஊக்குவிக்க உங்களால் முடியும். காந்தம் போன்ற ஈர்ப்பு சக்தியுடையவராகவும் நீங்கள் இருப்பீர்கள்.
தீபிகா படுகோன் போன்ற வளைந்த நெற்றியை உடையவர்கள் கடினமான சூழ்நிலைகளைக் கையாள்வதில் மிகவும் அமைதியாக இருப்பார்கள். நீங்கள் உள்ளே உடைந்து இருக்கலாம், ஆனால் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் அழகாக இருப்பீர்கள். உங்களிடம் அபாரமான பொறுமையும் விடாமுயற்சியும் இருக்கும். இருப்பினும் நீங்கள் மௌனத்தில் பல துன்பங்களை அனுபவிக்கலாம். நீங்கள் உணர்ச்சிகளை மதிப்பீர்கள். அன்பாக இருப்பது உங்களின் முதல் முன்னுரிமை. அன்பான மற்றும் நட்பான இயல்பு உங்களை எளிதில் அனுதாபப்படுத்தும். மனிதர்களைப் பற்றிய ஆழமான புரிதல் உங்களுக்கு உள்ளது.
நீங்கள் கலை மற்றும் பகுப்பாய்வில் ஆர்வம் மிகுந்தவர். சுய வெளிப்பாட்டிற்கு இடமளிக்கும் விஷயங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். பாரம்பரியம் மற்றும் சமகாலத்தை ஒரே ஃப்ரேமில் கொண்டு வருவதில் வல்லவர். நிதானமாகவும் நுட்பமாகவும் இருப்பீர்கள். நீங்கள் செய்யும் அனைத்திற்கும் தனித்துவத்தைக் கொண்டுவர விரும்புவீர்கள். உதாரணமாக, எல்லோரும் அணியும் ஒரு உடையை நீங்கள் அணிய மாட்டீர்கள். உங்கள் சொந்த ஸ்டைலில் அது இருக்க வேண்டுமென விரும்புவீர்கள்.
ஐஸ்வர்யா ராய் போன்ற எம்-வடிவ நெற்றியைக் கொண்டவர்கள் எக்ஸெலெண்ட் திறமைகளை கொண்டுள்ளனர். புதிதாக தனித்துவமான எண்ணங்கள் மற்றும் யோசனைகளுடன் நீங்கள் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கலாம். உங்கள் முயற்சி வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டு சிறந்த வழிகளை மேற்கொள்வீர்கள். இருப்பினும், உங்கள் கோபம் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் நல்ல அம்சம் என்னவென்றால், நீங்கள் மன்னிப்பீர்கள். வெறுப்புணர்ச்சியுடன் உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் வீணாக்க மாட்டீர்கள்.