வணக்கம் இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் குறிப்பாக நீங்கள் மாணவராக இருந்தால் கண்டிப்பாக இதனை சந்தித்திருப்பீர்கள் அது என்னவென்றால் எப்படி தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது என்பதுதான் என்னதான் படித்தாலுத் கடைசி நேரத்தில் மறந்து பரிட்சையில் சொதப்பி விடுகிறோம்.
குறைவாக படிங்க
மாணவர்கள் தொடர்ந்து படிப்பதால் தான் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது என்று தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள் அதிகமாக படிப்பதை விட குறைவாக படிப்பவர்களுக்கே மூளை செயல் திறன் அதிகமாக இருக்கும் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஞாபக படுத்துங்க
தொடர்ந்து படிப்பதை விட படித்த விஷயங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி பார்ப்பதே மூளையின் செயல் திறன் அதிகரிக்க காரணம் ஆக இருக்கிறது.
மனிதர்கள் ஒரு விஷயத்தை புதிதாக கற்றுக் கொள்ளும் பொழுது அது மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அது நியூரான்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
ஒரு புதிய விஷயத்தை படிப்பதற்கு முன்பு அதில் உள்ள மையக்கருத்தை நோட்ஸ் ஆக எடுத்து படிப்பதன் மூலம் விரைவாகவே நம்மால் கற்றுக் கொள்ள முடியும். குழப்பம் இன்றி எளிமையாக படித்து முடிக்கலாம்
நோட்ஸ் ஆக படிப்பதன் மூலம் அவற்றை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்க முடியும்
ஒரு கருத்து எளிமையாக புரிய வேண்டும் என்றால் அக்கருத்தை ஒரே முறையில் மட்டும் படிக்காமல் அதனுடன் தொடர்புடைய மற்ற விஷயங்களில் இணைத்து படிப்பதன் மூலம் அவற்றை மறக்காமல் நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்.
இந்த டிப்ஸ்களை நீங்க முறையாக பின்பற்றுவதன் மூலம் உங்களால் எளிதாக அதிக மதிப்பெண்களை பெறமுடியும்.
தொடர்புடையவை: TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி