மர்மங்கள் நிறைந்த டிராகன் முக்கோணம்
source:pixabay |
பல மர்மங்களை கொண்ட பெர்முடா முக்கோணத்தை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் அந்த பகுதிகளில் அதிக காந்தசக்தி இருப்பதனால்தான் பறக்கும் விமானங்களும் கப்பல்களும் உள்ளிழுக்கப் படுவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பெர்முடா முக்கோணத்தைப் போலவே மற்றும் ஒரு மர்மம் நிறைந்த முக்கோண பகுதி தான் இந்த டிராகன் முக்கோணம்(dragon triangle). இது வரை யாரும் அறியாத அதனைப் பற்றிய சில தகவல்களை தான் இன்றைய பதிவில் நாம் காண இருக்கிறோம்.
டிராகன் முக்கோணம் -dragon triangle
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து தெற்கு பகுதியில் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மியாக்கி என்ற தீவு இங்கே தான் அமைந்திருக்கிறது மர்மங்கள் நிறைந்த டிராகன் முக்கோணம். மா நோ உமி என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் இது டெவில் சீ அதாவது பிசாசுகளின் கடல் எனவும் கூறப்படுகிறது .
உலகில் பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத அந்த பகுதியை கடந்து சென்ற கப்பல்கள் படகுகள் மர்மமான முறையில் மாயமாகி இருக்கின்றனர். உலக வரைபடத்தில் பெர்முடா குணத்திற்கு நேர் எதிரே மறுபுறத்தில் ஜப்பானில் அமைந்திருக்கும் இந்த கடல் பகுதியில் திடீரென புதிதாக தீவுகள் தோன்றி மறைவதாக வினோதமான ஒலிகள் கேட்பதாகவும் கூறப்படுகிறது,
மாயமான கப்பல்கள்
1950-களில் ஜப்பனான் ராணுவ கப்பல்கள் இந்த வழியாக சென்ற போதுதான் இதன் மர்மம் உலகிற்கு தெரிய வந்தது. 1953 வருடம் மொத்தம் 700 பேர் பயணம் செய்த இரண்டு ராணுவ கப்பல்கள். இந்த பகுதியை கடந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருக்கின்றன.
அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதை கண்டறிய , ஜப்பான் அரசு 31 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவை அங்கே மீண்டும் அனுப்பி வைத்தது. ஆனால் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவர்களும் மாயமான முறையில் மறைந்தனர் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை. இந்த மர்மமான சம்பவங்களுக்கு பிறகு தான் அந்நாட்டு அரசாங்கம் இதனை தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதியாக அறிவித்தது அறிவியலாளர்கள் இதனை பற்றி பல கருத்துகளை கூறினாலும், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுவது. 1000 வருடங்களுக்கு முன்னர் டிராகன்கள் வாழ்ந்து அழிந்து போன இடம் இதுதான் . அதன் காரணமாக பல அமானுஷ்யங்கள் இன்னும் அங்கு இருப்பதாகவும் நம்புகிறார்கள். மனிதர்களும் கப்பல்களும் காணாமல் போவதற்கு காரணம் டிராகன்கள்தான் என்று கூறுகிறார்கள் அவர்கள்.